என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "youth suicide"
- கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
- விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது39). இவர் அமெரிக்கா ஒஹாயோவில் உள்ள சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் கடலூர் பகுதியை சேர்ந்த சவுமியா (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த கைதுப்பாக்கியால், மனைவி சவுமியாவை சுட்டு கொலை செய்தார். பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணையில் திருமணத்துக்கு முன் சவுமியா, கடலூரை சேர்ந்த உறவுக்கார வாலிபரை காதலித்து வந்ததும், திருமணத்திற்கு பின்னரும் இருவரும் சந்தித்து பேசி வந்ததும் பாலசுப்பிரமணியனுக்கு தெரியவந்தது.
இதனால் விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே பாலசுப்பிரமணியன், சவுமியா ஆகியோர் கடைசியாக பேசிய ஆடியோ மற்றும் சவுமியா வேறொரு நபருடன் இணைந்து எடுத்த புகைப்பட மும் சமூக வலைதளத்தில் வெளியானது.
அந்த ஆடியோவில் பாலசுப்பிரமணியம், சவுமியாவிடம் எப்போது அந்த வாலிபரை பிடிக்க ஆரம்பித்தது என்று கேட்டுள்ளார். அப்போது சவுமியா அழுது கொண்டு, சில மாதங்களுக்கு முன்பு எனவும், ஓட்டலில் கள்ளக்காதலனுடன் புகைப்படம் எடுத்துகொண்டதை ஒப்புக்கொண்டார். மேலும் பிரச்சனை நடைபெறும் போது கள்ளக்காதலன் தனக்கு ஆறுதல் கூறாமல் சென்றதாகவும், தொடர்ந்து தங்களுக்கு நான் நல்ல தோழியாக இருப்பதாகவும், மேலும் குழந்தைகளிடம் நடந்ததை கூறிவிட்டு, தனித்தனியாக வாழலாம் என்று சவுமியா கூறியுள்ளார். ஆனால் பாலசுப்பிரமணியன் இன்னொருவரை விரும்பிய மனைவி தனக்கு தேவையில்லை என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்த ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் புதுவை கலெக்டர் குலோத்துங்கனிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் தங்களது மகன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் தங்களது பேர குழந்தைகளையும் அங்கேயே அரசு தயவில் வளர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
இதுபோல் சவுமியாவின் தாயார் தங்களது மகள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
- பண்டிகைகளின் போது பம்பர் குலுக்கல் நடத்தப்படும்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடத்தப்படுகிறது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளின் போது பம்பர் குலுக்கல் நடத்தப்படும். இதில் முதல் பரிசுத்தொகை கோடிகளில் வழங்கப்படும்.
மேலும் ஏராளமானோருக்கு லட்சங்கள் மற்றும் ஆயிரங்களிலும் பரிசுத் தொகை கிடைக்கும். இதனால் கேரளாவில் பம்பர் பரிசு குலுக்கல் நடக்கும் போது, அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கேரளாவுக்கு சுற்றுலா வரக்கூடிய தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மக்களும் பம்பர் குலுக்கல் லாட்டரிகளை வாங்குவார்கள்.
அவ்வாறு வாங்கிச் செல்பவர்கள் பம்பர் பரிசையும் வென்றிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள லாட்டரியில் ரூ.70 லட்சம் பரிசு பெற்ற வியாபாரி ஒருவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நெல்லிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் விவேக் ஷெட்டி (வயது37). இவர் அதே பகுதியில் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று தனது கடைக்குள் விவேக் ஷெட்டி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதியதில், விவேக் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை.
கடந்த 4 மாதங்களுககு முன்பு தான் லாட்டரி மூலம் அவருக்கு ரூ.70 லட்சம் பரிசாக கிடைத்திருப்பதால், அவருக்கு பணப்பிரச்சினை எதுவும் இல்லை. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அப்படியென்றால் விவேக் எதற்காக தற்கொலை செய்தார்? என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விவேக்கிற்கு ஆர்த்தி என்ற மனைவியும், அன்வி என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வாலிபர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரி உலகாசிபுரம் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 28). கடந்த ஓராண்டுக்கு முன்பு பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள செட்டியூர் பகுதியை சேர்ந்த பகவதி (25) என்பவரை திருமணம் செய்துள்ளார்.
பகவதி கர்ப்பம் அடைந்த நிலையில் சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் அருணாச்சலத்தின் தொழில் ரீதியாக அவரது மனைவியின் தந்தை பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்ததாக கூறி, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது மனைவி குடும்பத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைகளை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அருணாச்சலம் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- வாலிபரின் இறப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடம்பத்தூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவந்த் டோமனிக்(வயது28). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
இவர் இரவு கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் பகுதிக்கு வந்தார். திடீரென அவர் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரேவந்த் டோமனிக்கின் இறப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மனம் உடைந்த தாமோதரன் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
- வாலிபர் தற்கொலை குறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பஜனைமடத்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி மீனா. இவர்களது மகன் தாமோதரன் (18), பிளஸ்-2 படித்து வந்த இவர், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். இதையடுத்து படிப்பை தொடருமாறும், அல்லது வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறி உள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த தாய் மீனா அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் சென்னைக்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது திடீரென நெஞ்சு வலிப்பதாக தாமோதரன் கூறினார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இது குறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மதுபோதையில் வீடு திரும்பிய ராஜசேகரை அவரது மனைவி கண்டித்தார்.
- விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது38). பிளம்பர் வேலை பார்த்து வந்தார். இவர் மதுகுடிக்கும் பழக்கம் கொண்டவர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வீடு திரும்பிய ராஜசேகரை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த ராஜசேகர் படுக்கையறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கீழே விழுந்து மயங்கிய வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை கே.டி.சி. நகரை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள ஆறாம்பண்ணை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் சுப்பிரமணி (வயது 32).
இவருக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுப்பிரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு சுப்பிரமணி அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி உள்ளார். பின்னர் மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியை பிடித்தபோது அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் கீழே விழுந்து மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அய்யப்பன் தொழில் சம்பந்தமாக சிலரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார்.
- பணம் கொடுத்தவர்கள் அய்யப்பனுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த சிறுகளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது26). இவர் சொந்தமாக மருந்துகடை நடத்தி வந்தார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அய்யப்பன் தொழில் சம்பந்தமாக சிலரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அதனை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் அய்யப்பனுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்று அய்யப்பன், அய்யத்தூரில் உள்ள தனியார் கல்லுாரி பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த அய்யப்பன் யார்? யாரிடம்? இருந்து பணம் வாங்கினார்? அவருக்கு யாரேனும் மிரட்டல் விடுத்தனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை.
- அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
புதுச்சேரி:
புதுவை சஞ்சீவி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). கொத்தனார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றும் குடிப்பழக்கத்தை கைவிடவில்லையாம்.
இந்த நிலையில் அவரது அண்ணன் கோபி சர்க்கரை நோய்க்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக ராஜ்குமார் இருந்து கவனித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ராஜ்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோரிமேடு போலீசார் அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தற்கொலை செய்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
- பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியில் டிரங்க் சாலையில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் விரைந்துவந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், புலிக்குகை உள்ளிட்ட புராதன சின்னங்கள் சிறப்பு பெற்றது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்றுமாலை சாலவான் குப்பம் பகுதியில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 'புலிக்குகை' வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குறைவாக இருந்ததால் இதனை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியருக்கும் மாமல்லபுரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்துவந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலத்தை சேர்ந்த முருகன் (வயது39) என்பது தெரிந்தது. பிளம்பராக வேலைபார்த்து வந்த அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீஸ், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மின்கம்பியில் தொங்கிக் கொண்டு இருந்த டேனியலை மீட்டனர்.
- வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:
சென்னை மேற்கு தாம்பரம் மாந்தோப்பு என்ற பகுதியை சேர்ந்தவர் டேனியல் (23). இவர் வீட்டில் குடும்பப் பிரச்சினை காரணமாக, சண்டை போட்டு விட்டு, பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள, அவரது நண்பர் மணிகண்டன் என்பவர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில், மணிகண்டன் வீட்டில் முதல் மாடியில் இருந்து, நண்பர்கள் டேனியலும் மணிகண்டனும், மது அருந்தி உள்ளனர். அப்போது மணிகண்டன் நண்பர் டேனியலுக்கு அறிவுரை கூறி, நீ வீட்டிற்கு செல்வது நல்லது என்று கூறியுள்ளார். ஆனால் டேனியல், "நான் வீட்டிற்கு செல்ல மாட்டேன், செத்தாலும் சாவேன்" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11:30 மணி அளவில் டேனியல், நண்பரின் வீட்டு முதல் மாடியில் இருந்து, அருகே தெருவில் உள்ள மின் கம்பிகள் மீது திடீரென குதித்தார். அதில் மின்கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கி துடிதுடித்துக் கொண்டு கிடந்தார். அதை அந்தத் தெரு மக்கள் பதற்றத்துடன் பார்த்து,பெண்கள் கதறி அழுது கூக்குரல் இட்டனர். இதை அடுத்து நள்ளிரவில் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பானது. உடனடியாக பீர்க்கன்கரணை போலீஸ், தாம்பரம் தீயணைப்புத்துறை, முடிச்சூர் மின்வாரிய அலுவலகம், ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து உடனடியாக அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போலீஸ், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மின்கம்பியில் தொங்கிக் கொண்டு இருந்த டேனியலை மீட்டனர்.
அதோடு மருத்துவக் குழுவினர், அதே தீயணைப்பு வாகனத்தின் மேல் பகுதியில் வைத்து, சி.பி.ஆர். சிகிச்சை கொடுத்து, டேனியல் உயிரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி டேனியல் உயிரிழந்தார்.
இதை அடுத்து பீர்க்கன்கரணை போலீசார், டேனியல் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்துகின்றனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள், டேனியல் குதித்ததால் பழுதடைந்த மின் கம்பிகளை சீரமைத்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் பழைய பெருங்களத்தூர் பகுதிக்கு மின் இணைப்பை கொடுத்தனர்.
மாடியிலிருந்து மின்சார கம்பிகளில் குதித்து விழுந்து, நூதனமான முறையில், வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்