என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு: போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை
  X

  போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு: போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர்.
  • போலீசுக்கு பயந்த அவர் தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  தூத்துக்குடி:

  திருவாரூர் மாவட்டம் மூவநல்லூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது25). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.

  அதன்பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர்.

  இந்நிலையில் போலீசுக்கு பயந்த அவர் தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  தகவலறிந்ததும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×