என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கம்பத்தில் திருமணம் முடிந்த 40-வது நாளில் வாலிபர் தற்கொலை
    X

    கம்பத்தில் திருமணம் முடிந்த 40-வது நாளில் வாலிபர் தற்கொலை

    • திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
    • தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் மாரியம்மன் குரும்பன்தெருவை சேர்ந்தவர் அரசன் மகன் அஜித் (வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வந்து விட்டார்.

    அதன்பிறகு ராஜபாளையத்தை சேர்ந்த சினேகா என்பவரை கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    இதனை அவரது தாய் விக்டோரியா கண்டித்தார். மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்பு தனது தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் விக்டோரியா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 40வது நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×