என் மலர்
நீங்கள் தேடியது "காதலி கொலை"
- முகேஷ் குமாரியை காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
- காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முகேஷ் குமாரியின் தலையில் பலமாக தாக்கினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னுவை சேர்ந்தவர் முகேஷ் குமாரி (வயது 37).
இவர் அங்கன்வாடி மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் பர்மாரை சேர்ந்த ஆசிரியர் மனாராம் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் நீண்ட நேரம் அரட்டை அடித்து வந்தனர்.
பின்னர் தங்களது செல்போன்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அப்போது மனோராம் முகேஷ் குமாரியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
மனாராம், முகேஷ் குமாரியின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக முகேஷ் குமாரி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனாராமை வற்புறுத்தி வந்தார். அவர் திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வந்தார்.
இந்த நிலையில் முகேஷ் குமாரி நேற்று முன்தினம் தனது காரை எடுத்துக்கொண்டு 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காதலன் வீட்டுக்கு காரில் சென்றார். தங்களுடைய காதல் விவகாரம் குறித்து மனாராமின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இதனால் மனாராம் ஆத்திரம் அடைந்தார்.
முகேஷ் குமாரியை காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முகேஷ் குமாரியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் முகேஷ் குமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் காதலியின் உடலை தூக்கி முள்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீசி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து மனாராமை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
- ஆவேசமடைந்த துர்வாஸ் தர்ஷன் பாட்டீல் தனது காதலியை அடித்து கொலை செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி பகுதியை சேர்ந்த பெண் பக்தி ஜிதேந்திர மாயேகர் (வயது 26).
இவர் கடந்த 17-ந் தேதி நண்பர் ஒருவரை சந்திக்க செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். மாயேகரின் தோழிகளிடம் விசாரித்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாயேகரின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மாயேகரின் செல்போன் சிக்னல் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் அது கண்டாலா பகுதியை காட்டியது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் என்பவரை மாயேகர் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் துர்வாஸ் தர்ஷன்பாட்டீலை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் பக்தி ஜிதேந்திர மாயேகரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். துர்வாஸ் தர்ஷன்பாட்டீலும், பக்தி ஜிதேந்திர மாயேகரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இதையறிந்த பக்தி ஜிதேந்திர மாயேகர் ஆத்திரமடைந்துள்ளார். சம்பவத்தன்று அவர் இதுதொடர்பாக காதலன் துர்வாஸ் தர்ஷன்பாட்டீலுடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது ஆவேசமடைந்த துர்வாஸ் தர்ஷன் பாட்டீல் தனது காதலியை அடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் தனது கூட்டாளிகளான விஸ்வாஸ் விஜய் பவார், சுசாந்த் சாந்தாராம் நரால்கர் ஆகியோருடன் சேர்ந்து பக்தி ஜிதேந்திர மாயேகர் உடலை அம்பாகாட் பகுதியில் உள்ள சாக்கடையில் வீசியதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து அம்பாகாட் பகுதிக்கு சென்ற போலீசார் பக்தி ஜிதேந்திர மாயேகரின் உடலை கைப்பற்றினர்.
மேலும் அவரது காதலன் துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் மற்றும் கூட்டாளிகளான விஸ்வாஸ் விஜய் பவார், சுசாந்த் சாந்தாராம் நரால்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- சவுந்தர்யா, தினேஷின் போன் நம்பரை பிளாக் செய்துவிட்டு, நெருக்கமாக ஆண் நண்பருடன் பழகி வந்ததாக தெரிகிறது.
- இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் சவுந்தர்யாவை சந்திக்க தினேஷ் வந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் அருகே உள்ள கிறிஸ்துவகண்டிகை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் சவுந்தர்யா (வயது23). இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் ஆகும். சவுந்தர்யா தோழிகளுடன் அதே பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இவருக்கும் அதே பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரின் காதலுக்கும் பெற்றோர் சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சவுந்தர்யா- தினேஷ் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களது திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சவுந்தர்யாவுக்கு வேறொரு ஆண் நண்பருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தினேசுடன் பேசுவதை குறைத்தார். இதனால் சந்தேகம் அடைந்த தினேஷ் விசாரித்த போது சவுந்தர்யா தன்னை விட்டு வேறு ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இதனை தினேஷ் கண்டித்து பலமுறை சவுந்தர்யாவை எச்சரித்தார். இருப்பினும் சவுந்தர்யா, தினேஷின் போன் நம்பரை பிளாக் செய்துவிட்டு, நெருக்கமாக ஆண் நண்பருடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் தினேஷ் கடும் ஆத்திரம் அடைந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு சவுந்தர்யாவை சந்திக்க அவர் தங்கி இருந்த அறைக்கு தினேஷ் வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து தினேஷ் சென்று விட்டார்.
இதற்கிடையே இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் சவுந்தர்யாவை சந்திக்க தினேஷ் வந்தார். அப்போது அறையில் சவுந்தர்யா மட்டும் தனியாக இருந்தார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் சவுந்தர்யாவை சரமாரியாக குத்தினார். இதில் வயிறு, முகம், கை, காலில் சரமாரியாக காயம் அடைந்த சவுந்தர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடனே தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது சவுந்தர்யா கொலைசெய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சவுந்தர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய காதலன் தினேஷ் அவரது சொந்த ஊருக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.
சவுந்தர்யா கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து அவரிடம் நெருங்கி பழகிய ஆண் நண்பரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
- கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை.
- ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.
வேலூர்:
வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே. நகர் திரவுபதியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு (வயது 33). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். சபீனாபானு, சின்னஅல்லாபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
தொடர்ந்து சதுப்பேரியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலூர் விருப்பாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரும் வேலை செய்து வந்தார்.
இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் பேசுவதை சபீனா பானு தவிர்த்து வந்தார்.
பலமுறை சுரேஷ், சபீனாபானுவை தொடர்பு கொண்டும் அவர் பேச மறுத்ததாக தெரிகிறது. இதனால் சபீனாபானு மீது கோபத்தில் இருந்த சுரேஷ், நேற்றும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து நேற்று இரவு 11.30 மணியளவில் சுரேஷ், சின்ன அல்லாபுரத்தில் உள்ள சபீனாபானுவின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் 'ஏன் என்னிடம் 2 மாதங்களாக பேசவில்லை.
வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா?' என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.
இதை பார்த்த சபீனாபானுவின் தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகியோர் தடுக்க முயன்றனர். இருவரையும் சுரேஷ் கம்பியால் தலையில் தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அவர்கள் மயங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனாபானு, வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்ற சுரேஷ், சபீனாபானு வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் அருகே மடக்கி அவரை சரமாரியாக தாக்கினார் .
இதில் சம்பவ இடத்திலேயே சபீனாபானு பரிதாபமாக இறந்தார். உடனே, சுரேஷ் தனது பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் சக்கரவர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சுரேஷின் செல்போன் எண்ணை வைத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்.
அங்கு தனது அறையில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சுரேஷ் பிணமாக தொங்கினார்.
சபீனாபானுவை கொலை செய்த பின்னர், வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த சபீனாபானுவின் பெற்றோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உடலை துணியால் போர்த்தி நடுவில் தூக்கி வைத்துக் கொண்டு பைக்கில் சென்றனர்.
- உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள சலூரு மண்டலம் மர்ரி வாணி வலசா கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 20).
இவர் அங்குள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். அங்குள்ள தத்தி வலசை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவர் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் திருமணமானதை மறைத்து ஐஸ்வர்யாவை காதலிப்பதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். ராம் பாபுவை முழுமையாக நம்பிய ஐஸ்வர்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.
தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால் ராம்பாபுவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கடந்த 27-ந் தேதி இருவரும் விசாகப்பட்டினம் சென்றனர். அரிலோவா என்ற இடத்தில் இருவரும் சந்தித்து பேசினர்.
அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஐஸ்வர்யா கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராம்பாபு ஐஸ்வர்யாவின் கழுத்தை கயிறால் இறுக்கினார். இதில் ஐஸ்வர்யா துடிதுடித்து இறந்தார்.
போலீசில் சிக்காமல் இருக்க ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆட ராம்பாபு முடிவு செய்தார்.
இதுகுறித்து அவருடைய நண்பர் ஒருவரை வரவழைத்தார். ஒரு பைக்கில் உடலை கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஐஸ்வர்யாவின் உடலை துணியால் போர்த்தி நடுவில் தூக்கி வைத்துக் கொண்டு பைக்கில் சென்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்பதால் கிராமப் பகுதியில் வழியாக அவர்கள் நள்ளிரவில் இளம்பெண் பிணத்துடன் சென்று கொண்டிருந்தனர்.
நடுவழியில் பைக்கில் பெட்ரோல் தீர்ந்து நின்றது. இதனையடுத்து அவர்கள் மற்றொரு நண்பர் மூலம் பெட்ரோல் கொண்டு வந்து நிரப்பினர்.
பின்னர் 3 பேரும் சேர்ந்து இளம்பெண் உடலை 105 கிலோமீட்டர் கொண்டு சென்றனர். ஒரு முந்திரி தோட்டத்தில் ஐஸ்வர்யாவை தூக்கில் தொங்க விட்டு சென்று விட்டனர்.
அந்தப் பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர. இதில் ஐஸ்வர்யா ராம்பாபுவை காதலித்தது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் ஐஸ்வர்யாவை கொலை செய்து பைக்கில் கொண்டு வந்து தூக்கில் தொங்க விட்டதாக ராம்பாபு தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஷிரத்தா நாளுக்கு நாள் தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்த தொடங்கினார்.
- ஆத்திரம் அடைந்த அப்தாப் அமின், ஷிரத்தாவை அடித்து துன்புறுத்தினார். கடந்த மாதம் அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது.
புதுடெல்லி:
மும்பையில் உள்ள ஒரு சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றி வந்தவர் ஷிரத்தா.
இவருடன் அதே நிறுவனத்தில் அப்தாப் அமின் என்பவரும் பணிபுரிந்து வந்தார். இருவரும் ஒரே பிரிவில் பணிபுரிந்து வந்ததால் நண்பர்களாக பழகினார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்கள் காதலர்களாக மாறினார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் ஷிரத்தாவின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
என்றாலும் மும்பையில் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதற்கு ஷிரத்தா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். இதையடுத்து அப்தாப் அமினும், ஷிரத்தாவும் மும்பையில் இருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.
டெல்லியில் ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இருவரும் மெக்ராலி என்ற பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். திருமணம் செய்துகொள்ளாமல் அவர்கள் வசித்து வந்ததால் இரு குடும்பத்திலும் தொடர்ந்து எதிர்ப்பு காணப்பட்டது.
இந்த நிலையில் அப்தாப் அமினிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ஷிரத்தா வலியுறுத்தினார். ஆனால் அதை அப்தாப் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படத் தொடங்கியது.
ஷிரத்தா நாளுக்கு நாள் தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்த தொடங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்தாப் அமின், ஷிரத்தாவை அடித்து துன்புறுத்தினார். கடந்த மாதம் அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது.
அப்போது அப்தாப் ஆத்திரத்தில் ஷிரத்தா கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பிறகும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை. சமையல் செய்ய பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்து ஷிரத்தா உடலை துண்டுதுண்டாக வெட்டினார்.
மனதில் ஈவுஇரக்கமின்றி ஷிரத்தா உடலை 35 துண்டுகளாக அவர் வெட்டி பிரித்தார். அந்த உடல் பாகங்களை ஒரே சமயத்தில் வெளியே எடுத்துச்சென்றால் சிக்கிக் கொள்வோம் என்ற பயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் புதிதாக பிரிட்ஜ் ஒன்றை வாங்கி வந்தார். ஷிரத்தாவின் 35 உடல் பாகங்களையும் தனித்தனி பார்சல்களாக கட்டி அந்த பிரிட் ஜுக்குள் வைத்தார். கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உடல் பாகங்களை ஒவ்வொன்றாக வெளியே வீசத்தொடங்கினார்.
தினமும் நள்ளிரவு 2 மணிக்கு ஷிரத்தா உடல் பாகத்தில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு பகுதியில் வீசிவிட்டு வருவார். இப்படி 18 நாட்கள் ஷிரத்தா உடல் பாகங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று டெல்லி முழுக்க வீசியுள்ளார்.
இதற்கிடையே ஷிரத்தாவுடன் அவரது குடும்பத்தினர் போனில் பேச முடியாததால் தவிப்புக்குள்ளானார்கள். அவரது தந்தை விகாஷ் மதன் கடந்த வாரம் டெல்லியில் ஷிரத்தா குடியிருந்த வீட்டுக்கு சென்றார்.
வீடு பூட்டி இருந்ததால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்தாப் அமினை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அவன் ஷிரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசி விட்டது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அவனை கைது செய்தனர். ஷிரத்தா உடல் பாகங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
- ஷ்ரத்தாவை அப்தாப் அமீன் பூனாவாலா 35 துண்டுகளாக வெட்டிய போது வீடு முழுவதும் ரத்தம் சிதறியது.
- தரை முழுக்க ரத்த ஆறாக ஓடியது. அந்த ரத்தக் கறைகளை எப்படி துடைத்து சுத்தம் செய்வது என்று அப்தாப்புக்கு தெரியவில்லை.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (வயது 26). மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் இவர் வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் வேலை பார்த்த அப்தாப் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் மலர்ந்தது. அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர்.
அதையடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறியது. அங்கு மெக்ருலி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர். இதற்கிடையே மும்பையில் உள்ள பெற்றோருடனும் ஷ்ரத்தா தொடர்ந்து பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 18-ந் தேதிக்கு பிறகு ஷ்ரத்தாவை அவருடைய பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அப்தாப் அமீன் பூனாவாலா கைது செய்யப்பட்டார். விசாரணையில் அப்தாப் அமீன் பூனாவாலா தனது காதலி ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது.
அந்த உடல் பாகங்களை அவர் புதிதாக பிரிட்ஜ் வாங்கி பதப்படுத்தி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஷ்ரத்தா உடல் பாகங்களை அவர் 18 நாட்கள் அந்த பிரிட்ஜில் வைத்திருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துண்டுகளாக வெளியில் வீசியுள்ளார். அமெரிக்க கிரைம் படமான டெக்ஸ்டர் படத்தை பார்த்து அப்தாப் அமீன் பூனாவாலா இந்த கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஷ்ரத்தாவை அப்தாப் அமீன் பூனாவாலா 35 துண்டுகளாக வெட்டிய போது வீடு முழுவதும் ரத்தம் சிதறியது. தரை முழுக்க ரத்த ஆறாக ஓடியது. அந்த ரத்தக் கறைகளை எப்படி துடைத்து சுத்தம் செய்வது என்று அப்தாப்புக்கு தெரியவில்லை.
இதனால் கூகுளில் அவன் இதற்கு விடை தேடினான். தரையில் படிந்த ரத்தக் கறைகளை சுவடு தெரியாமல் எப்படி சுத்தம் செய்வது என்று அவன் கூகுளில் ஆய்வு செய்துள்ளான். அப்போது சில ரசாயன பொருட்களை பயன்படுத்தினால் ரத்த கறைகளை முழுமையாக நீக்கலாம் என்று அவனுக்கு தெரியவந்துள்ளது.
அதன்படி அவன் அந்த ரசாயான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வந்து வீட்டை சுத்தம் செய்திருக்கிறான். ரத்தக் கறைகள் படிந்த சட்டையையும் அவன் கூகுளில் ஆராய்ச்சி செய்துதான் சுத்தம் செய்திருக்கிறான்.
அப்தாப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீசப்பட்ட பகுதிகளில் டெல்லி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அந்த இடங்களில் இருந்து சில எலும்பு துண்டுகள்தான் கிடைத்தன.
கடந்த மே மாதமே ஷ்ரத்தா உடல் பாகங்கள் வெட்டி வீசப்பட்டு விட்டதால் அவை மண்ணோடு மண்ணாக போயிருக்கும் என்று போலீசார் கருதுகிறார்ள். எனவே ஷ்ரத்தா உடல் பாகங்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
அதுபோல ஷ்ரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டுவதற்கு அப்தாப் பயன்படுத்திய சமையல் அறை கத்தியும் கிடைக்கவில்லை. என்றாலும், இந்த வழக்கில் துப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டெல்லி போலீசார் அப்தாப்பை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் ஷ்ரத்தாவின் சமூக வலைதள தொடர்புகள் அனைத்தையும் அப்தாப் கடந்த சில மாதங்கள் வரை இயக்கி வந்தது தெரியவந்துள்ளது.
- துண்டிக்கப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் சத்தார்பூர் வன பகுதியில் வீசப்பட்டுள்ளன.
- உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 10 துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் காதலியை கொடூரமாக கொலை செய்து காதலன் 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (வயது26). கால் சென்டரில் பணியாற்றி வந்த அவருக்கு 2019-ம் ஆண்டில் அப்தாப் அமீன் பூனாவாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது.
இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலனுக்காக பெற்றோரை உதறி தள்ளிய ஷ்ரத்தா மும்பையின் வாசி பகுதியில் காதலனுடன் தனி வீட்டில் வாழ்ந்தார்.
மும்பையில் வசித்தால் பெற்றோர், உறவினர்கள் தொந்தரவு செய்வார்கள் என்று கருதிய காதலர்கள் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ஷ்ரத்தா பன்னாட்டு நிறுவனத்தின் கால் சென்டரில் பணியாற்றினார். அப்தாப் நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக வேலை செய்தார்.
மஹாரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்தனர். திருமணம் செய்யாமல் 'லிவிங் டுகெதர்' முறையில் வாழ்ந்தனர்.
அப்தாபுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது ஷ்ரத்தாவுக்கு தெரியவந்தது. இதனால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் வற்புறுத்தினார். இதனால் அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டது.
நாள்தோறும் அவர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இரவில் ஷ்ரத்தாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த மே மாதம் 18-ந்தேதி அவர்களுக்குள் மிகப்பெரிய சண்டை நடந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவன் காதலி ஷ்ரத்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்தான். கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டினான்.
இறைச்சியை வெட்ட பயன்படுத்தும் கத்திகளால் ஷ்ரத்தாவின் கைகளை 3 துண்டுகளாகவும், கால்களை 3 துண்டுகளாகவும் வெட்டினான். ஒட்டுமொத்தமாக அவரது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டினான். அவற்றை தனித்தனி பிளாஸ்டிக் கவரில் சுற்றி பிரிட்ஜில் வைத்துள்ளான்.
நாள்தோறும் நள்ளிரவில் 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டையும் வீசி எறிந்துள்ளான். தொடர்ச்சியாக 20 நாட்கள் நள்ளிரவு 2 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று அனைத்து உடல் பாகங்களையும் வீசியுள்ளான். அவற்றின் சில துண்டுகளை நாய்கள் கவ்வி சென்றன.
ஷ்ரத்தாவின் நண்பர் மூலம் தான் அவர் காணாமல் போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் அப்தாப்பை பிடித்து விசாரணை நடத்திய போது காதலியை கொன்று உடலை துண்டு துண்டாக வீசியது தெரியவந்தது. போலீசார் அவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சைக்கோ காதலன் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
துண்டிக்கப்பட்ட காதலியின் தலையை கடைசியாக வீசியுள்ளான். அவரது நினைவாக 20 நாட்கள் தினமும் தலையை பிரிட்ஜில் இருந்து எடுத்து பார்த்துள்ளான். முடிவில் வேறு வழியில்லாமல் தலையை வீசியதாக அப்தாப் போலீசில் தெரிவித்து உள்ளான்.
காதலி ஷ்ரத்தாவின் உடலை துண்டு துண்டாக வெட்டும் போது அப்தாபுக்கு கையில் கத்தி குத்து காயம் ஏற்பட்டது. இதற்காக அவன் டாக்டர் அணில் குமாரிடம் சென்று சிகிச்சை பெற்றான். பழங்களை வெட்டும் போது காயம் ஏற்பட்டதாக அவன் டாக்டரிடம் பொய் கூறியுள்ளான்.
இதை நம்பி டாக்டரும் அவனுக்கு சிகிச்சை அளித்துள்ளார். 5 முதல் 6 தையல்கள் வரை அப்தாபுக்கு போடப்பட்டுள்ளது.
தற்போது டாக்டர் அணில்குமார் இந்த வழக்கில் சாட்சியாக மாறி உள்ளார். அவர் அப்ரூவர் ஆவதால் இந்த வழக்கில் பிடி இறுகுகிறது.
துண்டிக்கப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் சத்தார்பூர் வன பகுதியில் வீசப்பட்டுள்ளன. அவற்றை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 10 துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தடயவியல் நிபுணர்கள் அதை ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஷ்ரத்தாவின் தலையை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தலையை கண்டு பிடித்தால் தான் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும். தலை கண்டு பிடிக்கப்பட்டதும் மண்டை ஓடு, சூப்பர் இம்போசிசன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அடையாளம் காண போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
இதுவரை மீட்கப்பட்ட எலும்புகள் டி.என்.ஏ. மாதிரிக்கு அனுப்பப்பட்டு ஷ்ரத்தாவின் தந்தை விகாசின் டி.என்.ஏ.வுடன் ஒத்து போகிறதா என்பது கண்டறியப்படும்.
கொலையாளி உடல் உறுப்புகளை நறுக்கி சேமித்து அகற்றும் போது ஆர்த்தோ போரிக் அமிலம் (போரிக் பவுடர்) மற்றும் வேறு சில ரசாயனங்களையும் பயன்படுத்தியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஷ்ரத்தாவின் பள்ளி நண்பர் லட்சுமணன். குடும்பத்தினருடன் தொடர்பு இல்லாததால் அவர் தனது நண்பருடன் வாழ்வின் துயரங்களை பகிர்ந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ஷ்ரத்தாவை லட்சுமணனால் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் அவர் தான் ஷ்ரத்தாவின் சகோதரருக்கு தகவல் கொடுத்தார்.
இதற்கு பிறகே அவர் கொல்லப்பட்ட விவரம் தெரியவந்தது. தற்போது போலீசார் ஷ்ரத்தா விவகாரம் தொடர்பாக லட்சுமணனிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதற்கிடையே அப்தாப் போதை பழக்கத்துக்கு அடிமையானவரா என்பதை கண்டறிய அவருக்கு போதை மருந்து சோதனையும் நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து இருக்கும் போது அப்தாப் பல பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் தெரிகிறது. அந்த பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- ஷ்ரத்தாவின் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவரது முகத்தை அப்தாப் தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது.
- எரிக்கப்பட்ட தலை எங்காவது கிடக்கிறதா? என்று தேடுதல் வேட்டையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி:
மும்பை பால்கர் பகுதியைச் சேர்ந்த ஷ்ரத்தாவும், அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலாவும் டெல்லி மஹாரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 'லிவிங் டு கெதர்' முறையில் வாழ்ந்து வந்தனர். ஷ்ரத்தா பன்னாட்டு நிறுவன கால் சென்டரிலும், அப்தாப் நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராகவும் வேலை செய்தனர்.
அப்தாப்புக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது ஷ்ரத்தாவுக்கு தெரியவந்ததால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதற்கு அப்தாப் மறுத்ததால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இதனால் கடந்த மாதம் 18-ந்தேதி காதலி ஷ்ரத்தாவை அப்தால் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தார். கொலையை மறைக்க அவரது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டினான். அவற்றை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்து சென்று வீசினான். இது தொடர்பாக அப்தாப்பை போலீசார் கைது செய்தனர். மேலும் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை தேடி வந்தனர். அதில் 10 துண்டுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
மேலும் பல இடங்களில் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை நாய் உள்ளிட்ட விலங்குகள் சாப்பிட்டு விட்டன. அந்த இடங்களில் எலும்புகள் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஷ்ராத்தாவின் தலை மற்றும் மற்ற உடல் பாகங்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
துண்டிக்கப்பட்ட ஷ்ரத்தாவின் தலையை பிரிட்ஜில் வைத்து அப்தாப் அதை தினமும் எடுத்துப் பார்த்ததாகவும் பின்னர் அதை எடுத்து வனப்பகுதியில் வீசி விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் தற்போது வேறு மாதிரியான தகவல்களும் வெளியாகி வருகின்றன.
ஷ்ரத்தாவின் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவரது முகத்தை அப்தாப் தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே எரிக்கப்பட்ட தலை எங்காவது கிடக்கிறதா? என்று தேடுதல் வேட்டையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
உடல் பாகங்களின் நாற்றம் காரணமாக அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவற்றை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து பல பகுதியிலும் வீசியதாக கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்டவரின் உடலை மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் எப்படி அப்புறப்படுத்துவது என்ற தகவலை அப்தாப் இணையதளத்தில் தேடியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்ட அப்தாப்புக்கு 10 மணி நேரம் ஆகியுள்ளது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அப்தாப் இடைவெளி விட்டு பீர் குடித்துள்ளார். சிகரெட் புகைத்துள்ளார் மேலும் உணவை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு உள்ளார்.
உடலை வெட்டி முத்த பிறகு மீண்டும் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டே ஓடிடியில் சினிமா பார்த்துள்ளார். மேலும் ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு அவரது செல்போனையும் தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார். அப்போது அந்த செல்போனில் உள்ள டேட்டாவையும் அப்தாப் அழித்துள்ளார்.
இதற்கிடையே ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட குடியிருப்பில் தடயவியல் துறையினர் நேற்று தடயங்களை சேகரித்தனர். அப்போது பல முக்கிய தடயங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொலை நடந்த குடியிருப்பில் தடயவியல் துறையினர் சிறப்பு ரசாயனங்களை பயன்படுத்தி ரத்தக்கறைகளை கண்டுபிடித்துள்ளனர். அப்தாப் ரசாயன முறையில் சுத்தம் செய்ய முடியாத இடத்தில் மட்டுமே இந்த ரத்த தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவர் அஹப்போ குளோரிக் அமிலத்தால் தடயங்களை சுத்தம் செய்ததும் தெரிய வந்தது.
ஷ்ரத்தாவின் உடலை குழாயின் அடியில் வைத்தே அப்தாப் வெட்டியுள்ளான். அப்போது ரத்தத்தை கழுவியதால் தண்ணீர் ஓடிக் கொண்டே இருந்துள்ளது. ரத்தக்கறைகளை அகற்ற அவன் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியுள்ளான். அதே நேரத்தில் ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்து கொன்ற அறையில் எந்தவித தடயம் மற்றும் ஆதாரமும் சிக்கவில்லை.
இதற்கிடையே அப்தாப்பை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டு போலீசாருக்கு அனுமதி வழங்கி உள்ளது.
டெல்லிக்கு வருவதற்கு முன்பு அப்தாப்பும், ஷ்ரத்தாவும் உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 5 நாள் காவலில் போலீசார் அப்தாப்பிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வீடியோவை போலீசார் சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
- கடுமையான விசாரணைக்குப் பிறகு அப்தாப் உண்மையை கூறத் தொடங்கி உள்ளான்
புதுடெல்லி:
டெல்லியில் காதலனுடன் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் 18ம் தேதி ஷ்ரத்தாவுக்கும், காதலன் அப்தாப் அமீன் பூனாவாலாவுக்கும் இடைகிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஷ்ரத்தா, காதலன் அப்தாவால் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க, உடலை 35 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச்சென்று காட்டில் வீசி உள்ளான் அப்தாப்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அப்தாப் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்படுகின்றன. அப்பகுதியில் பதிவான சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்துவருகின்றனர். ஷ்ரத்தாவின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அப்தாப் தனது வீட்டுக்கு வெளியே அதிகாலையில் நடந்து செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அதில், அவன் தனது முதுகில் பேக் மாட்டி உள்ளார். கையில் அட்டைப் பெட்டி வைத்திருந்தான். இதனால் அவன் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீடியோவை போலீசார் சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அக்டோபர் 18ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த சிசிடிவி காட்சி, இந்த கொடூரமான கொலை வழக்கில் வெளிவந்த முதல் சிசிடிவி வீடியோ பதிவாகும்.
இருட்டில் மங்கலாக பதிவான அந்த வீடியோவில், ஒரு நபர் முதுகுப்பை மாட்டிக்கொண்டு கையில் அட்டைப்பெட்டியுடன் தெருவில் நடந்து செல்வது தெரிகிறது. அவரது முகம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அது அப்தாப் என்று போலீசார் கூறுகின்றனர்.
இன்று அதிகாலை, அப்தாப் அமீன் பூனாவாலாவின் குடியிருப்பில் இருந்து கனமான மற்றும் கூர்மையான வெட்டும் கருவிகளை போலீசார் மீட்டனர். அவை ஷ்ரத்தாவின் உடலை வெட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடுமையான விசாரணைக்குப் பிறகு அப்தாப் உண்மையை கூறத் தொடங்கி உள்ளான். அவன் கொடுத்த தகவலின்பேரில் சத்தர்பூர் குடியிருப்பில் இருந்து முக்கிய ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளனர். அப்தாபின் குருகிராம் பணியிடத்தில் இருந்து நேற்று கருப்பு பாலிதீன் பையையும் போலீசார் மீட்டனர்.
- பொருட்களை டெல்லிக்கு கொண்டு செல்ல 37 பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- பணத்தை கொடுப்பது தொடர்பாக காதலர்கள் இடையே சண்டை நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சாட்சியங்களைத் தேடுவதற்காக மகாராஷ்டிரா, அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு டெல்லி காவல்துறை குழுக்கள் விரைந்துள்ளன.
இந்நிலையில் டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த காதலர்கள், அதற்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கடந்த ஜூன் மாதம் அப்தாப், டெல்லிக்கு உடமைகளை மாற்றி உள்ளார். இதற்காக 37 பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குட்லக் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனம் மூலம் மரச்சாமான்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டு செல்வதற்காக ரூ.20,000 செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பணத்தை யார் கொடுப்பது என்பது தொடர்பாக இருவரும் சண்டை போட்டதாக அப்தாப் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.
20 ஆயிரம் ரூபாய் யாருடைய வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஷ்ரத்தாவும், அப்தாப்பும் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்தாப் குடும்ப உறுப்பினர்கள் வாக்குமூலத்தையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவை விட்டு வெளியேறிய பிறகு, காதலர்கள் இருவரும் இமாச்சலப் பிரதேசம் உட்பட பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். அந்த பயணங்களின் போது அவர்களுக்கு இடையே ஏதாவது தகராறு ஏற்பட்டதா, அதனால் இந்த கொலை நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் காதலனால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
- இந்த வழக்கில் போலீசார் அப்தாப்பை கடந்த 12-ம் தேதி கைது செய்து காவலில் எடுத்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் (28), என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் மே மாதம் நிகழ்ந்துள்ளது. காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டுள்ளார். இதன்பின்னர், அவற்றை டெல்லியின் பல பகுதிகளில் வீசி சென்றுள்ளார். இந்த வழக்கில் போலீசார் அப்தாப்பை கடந்த 12-ம் தேதி கைது செய்து காவலில் எடுத்துள்ளது.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பே அவன் கொலை செய்வான் என்றும், பல துண்டுகளாக வெட்டுவான் என்றும் ஷ்ரத்தா வாக்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி மகாராஷ்டிராவின் நலசோப்ரா நகரில் துலிஞ்ச் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வாக்கர் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், அவன் இன்று என்னை மூச்சு திணறச்செய்து கொல்ல முயன்றான். என்னை பயமுறுத்துவதோடு, கொலை செய்து, பல துண்டுகளாக வீசி விடுவேன் என்று மிரட்டலும் விடுக்கிறான். 6 மாதங்களாக இது தொடருகிறது. என்னை தாக்கிக்கொண்டே இருக்கிறான். ஆனால், எனக்கு போலீசாரிடம் செல்ல தைரியம் இல்லை. ஏனெனில், என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த புகாரில் அப்தாப்பின் பெற்றோருக்கும் கூட நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம் என தெரியும். என்னை தாக்குவதும், கொலை செய்ய முயற்சிப்பதும் கூட அவர்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.






