என் மலர்
நீங்கள் தேடியது "Visakhapatnam"
- நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
- இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலை குவித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்த பிறகு அதேபோல வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
விடுதியில் இருந்து மாணவர்கள் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
BREAKING - Four 9th-grade students from St. Ann's High School, Visakhapatnam, escaped their hostel after watching @dulQuer's #LuckyBaskhar, they told their friends they would return after earning money to buy cars and houses, inspired by #DulquerSalmaan's character in the film pic.twitter.com/X4iUa6bjc9
— Daily Culture (@DailyCultureYT) December 10, 2024
- ஆந்திராவில் அடிக்கல் நாட்டும் விழா 29-ந்தேதி நடைபெற இருந்தது.
- பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பசுமை நைட்ரஜன் பூங்கா, அனகா பள்ளி மாவட்டத்தில் ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வருகிற 29-ந்தேதி நடைபெற இருந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இருந்தார்.
இதற்காக ஆந்திர பல்கலைக்கழக மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக விசாகபட்டினத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக பிரதமர் மோடி ஆந்திரா வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை வேறு தேதியில் நடத்த ஆலோசித்து வருகின்றனர்.
- விசாகப்பட்டினத்தில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்திய பைக்குகள் அதிகரித்து வந்தன.
- போக்குவரது போலீசார் அதிக ஒலி எழுப்பக்கூடிய பைக்குகளை பிடித்து அதன் சைலன்சர்களை கழற்றினர்.
அண்மை காலங்களில் இளைஞர்கள் பலர் தங்களின் பைக்குகளில் உள்ள சைலன்சர்களை கழற்றிவிட்டு அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தி வருகின்றனர். இதனால் ஒலி மற்றும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்திய பைக்குகள் தொடர்பாக போக்குவரத்து போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன
இதனையயடுத்து தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரது போலீசார் அதிக ஒலி எழுப்பக்கூடிய பைக்குகளை பிடித்து அதன் சைலன்சர்களை கழற்றினர்.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பிய 181 பைக் சைலன்சர்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
#WATCH |Visakhapatnam: Andhra Pradesh police use bulldozers to dismantle modified exhausts to spread awareness among the public regarding sound pollution and to follow traffic rules. pic.twitter.com/vWtYup9j1P
— ANI (@ANI) November 9, 2024
- இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.
- ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளைஞர்களை குறிவைத்து ஹனி ட்ராப் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
28 வயதான ஜாய் ஜமீமா என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.
பணக்கார இளைஞர்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி வீட்டுக்கு வரவைத்து போதை வஸ்து கொடுத்து, ஆடைகள் இன்றி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட இளைஞர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இப்பெண்ணை கைது செய்துள்ளனர்.கைதான ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
- கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டார்.
- வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.
இளம்பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதால் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள இளம் பெண்ணிற்கு விருப்பம் இல்லை.
இதனால் மருந்து கடைக்கு சென்று கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது.
இதனால் கடந்த 3 வருடங்களாக இளம் பெண் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இளம் பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் ஆபரேஷன் செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை அகற்றினர்.
தற்போது இளம் பெண் நலமுடன் இருப்பதாகவும் ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
- தீ விபத்து ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .
- விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த ரெயிலின் 3 ஏசி பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
B6, B7,M1 ஆகிய 3 பெட்டிகளில் மளமளவெனப் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அணைத்தனர்.
சத்தீஸ்கரின் கோர்பா நகரில் இருந்து விசாகப்பட்டினம் வந்திருந்த ரெயிலிலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு தீப்பிடித்ததால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
- விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார்.
இந்தியா -இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பாரத் ஆந்திர கிரிக்கெட் சங்கத்தால் கவுரவிக்கப்பட்டார்.
அவர் தனது சொந்த ஊர் மைதானத்தில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். சொந்த ஊர் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மாநிலத்தின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் பரத் ஆவார்.

விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார். 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடந்தபோது, அந்த போட்டியில் கே.எஸ்.பாரத் பால் யாயாக (Ball boy) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு முன்னர் இரு ஆந்திர வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். அவர்கள் விஹாரி, எம்எஸ்ஏகே பிரசாத் ஆகியோர் ஆவர்.
- கடற்கரை விமானங்கள் வானத்தில் வட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்கமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டனர்.
- சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
திருப்பதி:
கடற்படை தினத்தை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ராமகிருஷ்ணா கடற்கரையில் நேற்று முதல் முறையாக கடற்படை வீரர்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நேற்று மாலை 4 மணி அளவில் சூரியன் மறையும் பின்னணியில் கடற்கரை விமானங்கள் வானத்தில் வட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்கமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டனர்.
சாகச நிகழ்ச்சியை கடற்கரை வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வீட்டின் மாடி மற்றும் பால்கனிகளில் இருந்து பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
ஹெலிகாப்டர்களில் ராணுவ வீரர்கள் தாழ்வாக பறந்து வந்து சாகசத்தில் ஈடுபட்ட நிகழ்ச்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஏரோ பாட்டிக்ஸ் கமாண்டோ படை வீரர்கள் விமானத்தில் பறந்து வந்து ஸ்கை டைவிங் செய்தபடி விமானத்தில் இருந்து குதித்து பாராசூட் மூலம் கடற்கரை மணலில் இறங்கினர். இந்த சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
மேலும் போர்க்கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் கடற்கரை சாலையை நெருங்கி வந்து தீப்பிழம்பை கொட்டியது.
கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
மீண்டும் டிசம்பர் 2-ந்தேதி மற்றும் இறுதி சாகச நிகழ்ச்சி டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.
- ஆந்திர சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது.
விஜயதசமி முதல் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில சட்டமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆந்திர பிரதேச சட்டமன்ற கூட்டம் கூடியது.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் மழைகால கூட்டத் தொடர் நாளை (செப்டம்பர் 21) துவங்க இருக்கும் நிலையில், இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தலைநகர் பற்றிய அறிவிப்பு வெளியானது. நவம்பர் 2-ம் தேதி துவங்கும் விஜயதசமி நாள் முதல் முதலமைச்சர் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாறுகிறது.
இதே போன்று மற்ற அமைச்சர்களும் விசாகப்பட்டினத்தில் இருந்து பணியாற்ற தயாராக வேண்டும். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்ததில் இருந்து, ஆந்திரா மாநில தலைநகராக அமராவதி நகரம் செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் விசாகப்பட்டினம் என்பது குறிப்பிடத்தக்கது.