என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cylinder explosion"

    • விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு அருகே விபத்து நிகழ்ந்தது.
    • எரிவாயு சிலிண்டர், வெல்டிங் பணியின்போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

    விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு அருகே உள்ள பழைய பொருட்கள் சேகரிப்பு கடையில் எரிவாயு சிலிண்டர், வெல்டிங் பணியின்போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.

    இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

    சம்பவம் இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையர் சங்கபத்ரா பாக்சி உத்தரவிட்டார்.

    • இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
    • தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் இறந்துள்ளதுள்ளனர். இதன்மூலம், தமிழகத்தை சேர்ந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் வெளிவந்துள்ளன.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

    தரைதளத்தில் படிக்கட்டை ஒட்டிய பராமரிப்பு அறையில் விதிகளை மீறி 6க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட கரும்புகை, கட்டடம் முழுவதையும் உட்புறமாக சூழ்ந்ததாக யாராலும் தப்பிக்க முடியவில்லை.

    அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே தங்க வைக்க இட வசதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 190 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு அடங்கிய அஹமதி மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மங்காஃப், ஃபாஹில், அபுகலிஃபா, மெஹபுல்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    கரும்புகைகளுக்கு நடுவே டார்ச் லைட் அடித்து காப்பாற்றுமாறு தொழிலாளர்கள் கதறும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

    • தீக்காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
    • திருமணத்தின்போது சிலிண்டர் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் விக்ரம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில், ஒரு சிறுமி, 3 பெண்கள் என நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 3 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    திருமணத்தின்போது சிலிண்டர் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, சிலிண்டரின் ரெகுலேட்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதால் சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது.

    ×