என் மலர்
நீங்கள் தேடியது "boyfriend arrested"
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே புத்தந்தூர் காட்டு க்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 26) இவர் சம்பவத்தன்று புத்தந்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (24), என்பவர் நான் காதலிக்கும் பெண்ணை நீ எப்படி நிச்சயம் செய்ய போவாய் என்று கூறி ஏழுமலையின் முதுகில் கத்தியால் குத்தி, உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.
இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
- பஷீர் ஆடுதொட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
- இளம்பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்ய கொடுக்க மறுத்து விட்டனர். இதற்கிடையே அந்த இளம்பெண்ணுடன் ராஜேஷ் அடிக்கடி பேசி வந்தார்.
பெரம்பூர்:
வியாசர்பாடி, கணேசபுரம், சுந்தரம் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (23). இவர் புளியந்தோப்பில் உள்ள ஆடு தொட்டியில் ஆடு மற்றும் மாடுகளை பராமரிக்கும் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அவர் ஆடு தொட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மினிவேன் ஒன்றில் படுத்து தூங்கினார்.
அப்போது ராஜேஷ் மீது மர்மநபர் தீ வைத்து விட்டு தப்பி சென்று விட்டார். இதில் உடல் கருகிய அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை ஆய்வு செய்தபோது வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த பஷீர் (21) என்பவர் மினிவேனின் டீசல் டேங்கில் இருந்த டீசலை துணியில் நனைத்து அதனை தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் மீது போர்த்தி தீ வைத்து தப்பி செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து பஷீரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே காதலித்த பொண்ணுடன் ராஜேஷ் நெருங்கி பழகியதால் அவரை எரித்து கொல்ல முயன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
பஷீர் ஆடுதொட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் இளம்பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்ய கொடுக்க மறுத்து விட்டனர். இதற்கிடையே அந்த இளம்பெண்ணுடன் ராஜேஷ் அடிக்கடி பேசி வந்தார்.
இதனை கண்டு ஆத்திரம் அடைந்த பஷீர் இரவில் ராஜேஷ் தனியாக தூங்குவதை நோட்டமிட்டு தீ வைத்து எரித்து உள்ளார்.
மேலும் தீக்காயம் அடைந்த ராஜேசை ஆஸ்பத்திரியில் இருந்தும் பஷீர் கவனித்து வந்து இருக்கிறார். கண்காணிப்பு கேமிரா பதிவால் அவர் சிக்கி கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.
- அதைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவுக்கு ஹரிஹரன் தொல்லை கொடுத்து வந்தாக கூறப்படுகிறது.
மதுரை:
மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். பாண்டிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அபர்ணா (வயது19) பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
அபர்ணாவின் பாட்டி வீடு விராட்டிபத்தில் உள்ளது. அங்கு அவர் அடிக்கடி செல்வார். அப்போது அங்குள்ள தனது மாமா வீட்டிற்கு வந்திருந்த கோவை சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஹரிஹரன் (23) என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஹரிஹரன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அபர்ணாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர்.
ஆகவே தன்னை பெண் கேட்டு வருமாறு அபர்ணா கூறியிருக்கிறார். அதன் பேரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அபர்ணாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு ஹரிஹரன் சென்றுள்ளார். ஆனால் ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவிடம் தொடர்ந்து ஹரிஹரன் கேட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் முனீஸ்வரன் என்பவருக்கு அபர்ணாவை நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஹரிஹரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அபர்ணாவின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று பாண்டியும், அவரது மனைவியும் வழக்கம்போல் மளிகை கடைக்கு சென்று விட்டனர். அபர்ணா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
மாலையில் அவரது வீட்டிற்கு ஹரிஹரன் வந்தார். அப்போது அபர்ணா தனக்கு நிச்சயிக்கப்பட்ட முனீஸ்வரனுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். தன்னுடன் வந்து விடுமாறு அபர்ணாவை ஹரிஹரன் அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபர்ணாவை சரமாரி குத்தினார். பின்பு அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்நிலையில் அபர்ணாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்த முனீஸ்வரன், வீட்டில் யாரோ தகராறு செய்கிறார்கள் என அபர்ணாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து மளிகை கடையில் இருந்த அபர்ணாவின் தாய் மற்றும் சித்தப்பா ஆகியோர் வீட்டிற்குள் வந்தனர். அப்போது அவர்கள் வீட்டிற்குள்ளே இருந்து ஹரிஹரன் தப்பி ஓடினார். அவரை அவர்கள் பிடிக்க முயன்ற போது தன்னிடம் இருந்த பையை கீழே போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
அந்த பையை சோதனை செய்து பார்த்த போது அதில் கத்தி, சுத்தியல், கையுறை போன்றவை இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு அபர்ணா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் அபர்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில் திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் அபர்ணாவை அவரது காதலன் ஹரிஹரன் திட்டமிட்டு கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் சென்றதால் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டன. அங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் ஹரிஹரன் எங்கு சென்றார்? என்று ரகசியமாக விசாரணை நடத்தினர்.
அவர் கோவையை சேர்ந்தவர் என்பதால் அங்கு சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால் கோவை செல்லக்கூடிய வழித்தடத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பதுங்கி இருந்த ஹரிஹரனை தனிப்படை போலீசார் இ்ன்று கைது செய்தனர்.
இதையடுத்து அவர் அங்கிருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். அபர்ணாவை கொலை செய்வதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை காதலித்த பெண் தன்னுடன் வர மறுத்ததால், தனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்க கூடாது என நினைத்து ஆத்திரமடைந்து அபர்ணாவை கொன்றதாக ஹரிஹரன் தெரிவித்தாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23).
ஸ்ரீஜா, தேங்காய் பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 21- ந் தேதி இவர் குழித்துறை ஆற்றில் பிணமாக மிதந்தார்.
களியக்காவிளை போலீசார் ஸ்ரீஜாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஸ்ரீஜா, 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
ஸ்ரீஜாவின் கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் களியக்காவிளை போலீசார் ஈடுபட்டனர். இதில் ஸ்ரீஜாவுக்கும் எஸ்.டி.மங்காட்டை சேர்ந்த விபின் (26) என்பவருக்கும் காதல் இருந்ததும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த தகவலும் தெரியவந்தது.போலீசார் விபினை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் ஸ்ரீஜாவை குழித்துறை ஆற்றில் தள்ளி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனக்கு சொந்தமாக வேன் உள்ளது. அதனை நானே ஓட்டி வந்தேன். எனது வேனில் அடிக்கடி ஸ்ரீஜா பயணம் செய்வார். அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது.
பகல் நேரத்தில் என் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே நான் ஸ்ரீஜாவை வீட்டிற்கு அழைத்து செல்வேன். அங்கு அவருடன் உல்லாசமாக இருக்க விரும்பினேன். அதற்கு ஸ்ரீஜா மறுத்து விட்டார்.
எனவே நான் ஸ்ரீஜாவுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். அவர் மயங்கியதும், ஸ்ரீஜாவை பாலியல் பலாத்காரம் செய்தேன். அதன்பின்பு இந்த சம்பவத்தை கூறியே அவருடன் நான் உல்லாசமாக இருந்தேன். இதில் ஸ்ரீஜா கர்ப்பமானார்.
கர்ப்பம் ஆனதும் உடனே திருமணம் செய்யும்படி ஸ்ரீஜா, என்னை வற்புறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த நான், சம்பவத்தன்று அவரை தாலி வாங்க வரும்படி குழித்துறைக்கு அழைத்து சென்றேன். அங்கு பாலத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஸ்ரீஜாவை ஆற்றில் தள்ளி விட்டேன்.
இதில் ஸ்ரீஜா தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.
இதையடுத்து போலீசார் விபினை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த களியக்காவிளை சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யருக்கு, கைதான விபின் பற்றி சில ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதில் விபினுக்கு நெருங்கிய நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களிடம் ஸ்ரீஜா கொலை தொடர்பான பல ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், விபினின் நண்பர்களை தேடினர். இத்தகவல் வெளியானதும் நேற்று தையாலுமூடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரை சந்தித்து ஒரு செல்போனை கொடுத்தனர்.
அந்த செல்போன், ஸ்ரீஜாவுக்கு சொந்தமானது என்றும், அதனை ஸ்ரீஜாவுக்கு வாங்கி கொடுத்தது விபின் என்றும் தெரியவந்தது. அந்த செல்போனில் விபின் மட்டுமே ஸ்ரீஜாவுடன் பேசுவார். அந்த செல்போனை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்று விபின் கூறியதால், ஸ்ரீஜா அந்த செல்போனில் வேறு யாருடனும் பேசவில்லை. அந்த செல்போனை கிடைத்தால் அதனை போலீசார் அதனை ஆய்வு செய்தனர். அதில் விபின், ஸ்ரீஜாவுடன் மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரியவந்தது. இது வழக்கின் முக்கிய ஆதாரம் என்பதால் போலீசார் அந்த செல்போனை உடனே கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கைதான விபினுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. விபின், வேனில் அழைத்து செல்லும் பெண்களிடம் சிரித்து, சிரித்து பேசுவார் என்றும், அவருடன் பல பெண்கள் தொடர்பில் இருந்து வந்த தாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்களை விபின் பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ரகசிய விசாரணையும் தொடங்கி உள்ளது. #tamilnews
குமரி மாவட்டம் குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23). நர்சிங் படித்துள்ளார்.
இவர் தேங்காய் பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ஸ்ரீஜா, அதன் பின்பு வீடு திரும்பவில்லை.
இதனால் உறவினர்கள் ஸ்ரீஜாவை தேடிவந்தனர். தோழிகளிடமும் கேட்டனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் குழித்துறை ஆற்றில் ஒரு இளம்பெண் பிணம் கடந்த 21-ந் தேதி காலையில் மிதந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிணமாக மிதந்த பெண் யார்? என்று விசாரித்தனர். இதில் அவர் தேங்காய்பட்டினம் உறவினர் வீட்டில் இருந்து மாயமான ஸ்ரீஜா என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஸ்ரீஜாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஸ்ரீஜாவின் உடலை அடையாளம் காட்டியதோடு, அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறினர்.
பின்னர் ஸ்ரீஜாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு குழித்துறை அருகே மஞ்சரவிளை பகுதியில் மருதங்கோடு - களியக்காவிளை சாலையில் மறியல் போராட்டமும் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர். மேலும் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதன் தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அதன்பின்பு போலீசாரின் விசாரணை தீவிரமானது. மேலும் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் கிடைத்தது. அதில் ஸ்ரீஜா 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
திருமணத்திற்கு முன்பே ஸ்ரீஜா, கர்ப்பமாக இருந்ததால் அவரது சாவில் மர்மம் இருப்பதை புரிந்து கொண்ட போலீசார், ஸ்ரீஜாவின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என விசாரித்தனர். இதில் நித்திரவிளையை அடுத்த எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் பிபின் (26) என்பவரை ஸ்ரீஜா காதலித்து வந்தது தெரியவந்தது.
போலீசார் பிபினை தேடி சென்றனர். அங்கு அவர் தலைமறைவாகி இருந்தார். இதனால் ஸ்ரீஜா சாவில் பிபினுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்த போலீசார் அவரை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
களியக்காவிளை சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில் பிபினை கண்டு பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தான் ஸ்ரீஜாவை ஆற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் பிபினை கைது செய்தனர்.
பின்னர் அவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் கூறியதாவது:-
நித்திரவிளை ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த ஸ்ரீஜாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தோம். அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக நான் ஆசை வார்த்தை கூறினேன்.
இதனால் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். இதில் ஸ்ரீஜா கர்ப்பம் ஆனார். இது பற்றி ஸ்ரீஜா என்னிடம் கூறினார்.ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்த போது அவர் 5 மாத கர்ப்பம் ஆக இருப்பது தெரியவந்தது.
கர்ப்பிணி ஆனதும் ஸ்ரீஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் கடந்த 19- ந் தேதி இரவு நான் ஸ்ரீஜாவை சந்தித்து என்னுடன் வருமாறு கூறினேன். நாங்கள் இருவரும் குழித்துறையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று கர்ப்பத்தை கலைத்துவிட முடிவு செய்தோம். கர்ப்பமாகி 5 மாதம் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என்று ஆஸ்பத்திரியில் கூறிவிட்டனர்.
இதை கேட்டதும் ஸ்ரீஜா என்னிடம் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரச்சினை செய்தார். இதில் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே நான் அவரை குழித்துறை ஆற்று பாலம் அருகே அழைத்து வந்தேன். அங்கு ஸ்ரீஜாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென அவரை ஆற்றில் தள்ளிவிட்டேன். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.அவர் இறந்தது தெரிந்ததும் நான் தலைமறைவாகி விட்டேன். ஆனால் போலீசார் என்னை தேடி கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் போலீசில் கூறியுள்ளார். இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
ஊத்துக்கோட்டை அருகே உள்ள புல்லரம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மகன் சக்திவேல் (25) என்கின்ற இமானு.
சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் பூண்டி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இமானு, காதலியை சந்திப்பது தவிர்த்து வந்தார். இமானுக்கு அவரது பெற்றோர்கள் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்ததாக தெரிகிறது.
இதனை அறிந்த இளம்பெண், காதலன் இமான் வீட்டுக்கு சென்ற தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இமானு, அவரது தம்பி இன்பரசன் ஆகியோர் சேர்ந்து இளம்பெண்ணை தாக்கினர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்கு பதிவு செய்து இமானு, இன்பரசன் ஆகியோரை கைது செய்தார்.
பின்னர் அவர்கள் ஊத்துக்கோட்டை கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவள்ளூர் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.