என் மலர்

    நீங்கள் தேடியது "nurse murder"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆண்டிபட்டி அருகே அரசு ஆஸ்பத்திரி செவிலியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44). இவர் திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (43). இவர் ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 17 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது மனைவியை பிரிந்து திண்டுக்கல்லில் தனியாக வசித்து வருகிறார். அவருடன் குழந்தைகளும் வசித்து வருகின்றனர். ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் செல்வி தனியாக வசித்து வந்தார். இருந்தபோதும் கணவன்-மனைவி 2 பேரும் தனது குழந்தைகள் குறித்து அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று இரவு சுரேஷ் அவரது மனைவி செல்விக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக செல்போன் சுவிட்ச்ஆப் ஆன நிலையில் இருந்தது. இதனையடுத்து அவரது உறவினர்களிடம் தெரிவித்து வீட்டிற்கு சென்று செல்வியை பார்த்து வருமாறு கூறி உள்ளார்.

    வீடு பூட்டி இருந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று அவர்கள் பார்த்தனர். அப்போது செல்வி வீட்டில் உள்ள பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக இறந்து கிடந்துள்ளார். உறவினர்கள் செல்வி இறப்பு குறித்து சுரேசிடம் தெரிவிக்கவே அவர் அலறி துடித்து குழந்தைகளுடன் ஓடி வந்தார்.

    இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

    தடயவியல் நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. டி.எஸ்.பி. தங்ககிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? குடும்ப பிரச்சனையால் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய நர்ஸ் கொலையில் கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்தன். இவரது மனைவி மேரி ஏஞ்சலின் (வயது 70). ஓய்வு பெற்ற நர்ஸ்.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் வசித்து வருகிறார்கள்.

    விஜய்ஆனந்தன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேரி ஏஞ்சலின் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக அருகிலேயே மேலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தனர். கடந்த 17-ந்தேதி கணவன், மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்த ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மேரி ஏஞ்சலனிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டு விசாரித்துள்ளனர்.

    பின்னர் 18-ந்தேதி இரவு 9.30 மணிக்கு அந்த பெண்ணும், வாலிபரும் மீண்டும் வீட்டுக்கு வந்து மேரி ஏஞ்சலினிடம் வீட்டை பார்க்கவேண்டும் என கேட்டனர். உடனே மேரி ஏஞ்சலின் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டை காட்டுவதற்கு சென்றார்.

    வெகுநேரமாகியும் மேரி ஏஞ்சலின் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த விஜய் ஆனந்தன் அவரை தேடிச் சென்றார். அப்போது வீட்டுக்குள் மேரிஏஞ்சலின் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், 1 பவுன் கம்மல் என 6 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அவர் வைத்திருந்த செல்போனையும் காணவில்லை. கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு வீட்டில் சி.சி.டி. கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    போலீசார் அந்த கேமிராவை ஆய்வு செய்தபோது கொலை நடந்த அன்று இரவு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மொபட்டில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீடியோவை போட்டோவாக பிரிண்ட் எடுத்து அந்த பகுதியில் உள்ள வீடு புரோக்கர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் காட்டி விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் இந்த கொலை- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சூலூர் பாரதி நகரை சேர்ந்த ரமேஷ்(39), அவரது மனைவி காஞ்சனாதேவி(35) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை தேடி சென்றனர். ஆனால் அவர்கள் கர்நாடகாவிற்கு தப்பி சென்றுவிட்டனர். அவர்களை தொடர்ந்து தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் அவர்கள் இன்று சூலூர் வருவதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று ரமேஷ், அவரது மனைவி காஞ்சனாதேவி ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த கொலை குறித்து ரமேஷ் கூறியதாவது,

    காஞ்சனாதேவி எனக்கு 2-வது மனைவி ஆவார். நாங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நர்ஸ் மேரி ஏஞ்சலின் வீட்டு அருகே வாடகைக்கு குடியிருந்தோம். அப்போது அவரது கணவர் விஜய் ஆனந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியும். இந்த நிலையில் நாங்கள் அங்கிருந்து சூலூருக்கே வந்து விட்டோம். எங்களுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் நர்ஸ் மேரி ஏஞ்சலின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க திட்டமிட்டோம். அதன்படி நாங்கள் வீடு பார்ப்பது போல் சென்றோம். மேரி ஏஞ்சலின் மட்டும் வீட்டை காண்பிக்க எங்களுடன் வந்தார். அந்த நேரத்தில் நான் அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்து கொண்டு கீழே தள்ளிவிட்டேன். அப்போது மேரி ஏஞ்சலின் சத்தம் போட்டார்.

    எனவே நாங்கள் மாட்டி கொள்வோம் என்பதால் கழுத்தை அறுத்து மேரி ஏஞ்சலினை கொன்றேன். பின்னர் நாங்கள் மொபட்டில் சென்று விட்டோம். போலீசார் எங்களை தேடுவதை அறிந்து கர்நாடகாவுக்கு தப்பினோம். தற்போது போலீசார் பிடி விலகியதாக கருதி சூலூர் வந்தபோது சிக்கிக் கொண்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். மேரி ஏஞ்சலினை கொன்று கொள்ளையடித்த நகைகளை சூலூரில் ஒருவரிடம் அடமானம் வைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த நகையை மீட்டனர். அவர்களது மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில் போலீசார் சாதுரியமாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்துள்ளனர். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து நர்சை படுகொலை செய்து 6 பவுன் நகையுடன் தப்பிய தம்பதியினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்தன். இவரது மனைவி மேரி ஏஞ்சலின் (வயது 70).

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் வசித்து வருகிறார்கள்.

    விஜய்ஆனந்தன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேரி ஏஞ்சலின் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக அருகிலேயே மேலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்த ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மேரி ஏஞ்சலனிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டு விசாரித்துள்ளனர்.

    பின்னர் நேற்று இரவு 9.30 மணிக்கு அந்த பெண்ணும், வாலிபரும் மீண்டும் வீட்டுக்கு வந்து மேரி ஏஞ்சலினிடம் வீட்டை பார்க்கவேண்டும் என கேட்டனர். உடனே மேரி ஏஞ்சலின் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை காட்டுவதற்கு சென்றார்.

    வெகுநேரமாகியும் மேரி ஏஞ்சலின் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த விஜய் ஆனந்தன் அவரை தேடிச் சென்றார். அப்போது வீட்டுக்குள் மேரிஏஞ்சலின் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், 1 பவுன் கம்மல் என 6 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அவர் வைத்திருந்த செல்போனையும் காணவில்லை.

    இதுகுறித்து தகவலறிந்ததும் குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாள், உதவி கமி‌ஷனர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சம்பவஇடத்தின் அருகே சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டிருந்தது. இதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    விஜய் ஆனந்தன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரால் சரியாக பேச முடியவில்லை. வீடு வாடகைக்கு வந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கு தெரியவில்லை.

    கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூரில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது,

    இந்நிலையில் பீளமேட்டில் பெண்ணை கொன்று நகை கள் கொள்ளையடிக்கப்பட் டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குழித்துறை ஆற்றில் தள்ளி நர்சு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான வேன் டிரைவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    நாகர்கோவில்:

    குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23).

    ஸ்ரீஜா, தேங்காய் பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 21- ந் தேதி இவர் குழித்துறை ஆற்றில் பிணமாக மிதந்தார்.

    களியக்காவிளை போலீசார் ஸ்ரீஜாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஸ்ரீஜா, 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    ஸ்ரீஜாவின் கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் களியக்காவிளை போலீசார் ஈடுபட்டனர். இதில் ஸ்ரீஜாவுக்கும் எஸ்.டி.மங்காட்டை சேர்ந்த விபின் (26) என்பவருக்கும் காதல் இருந்ததும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த தகவலும் தெரியவந்தது.போலீசார் விபினை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் ஸ்ரீஜாவை குழித்துறை ஆற்றில் தள்ளி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனக்கு சொந்தமாக வேன் உள்ளது. அதனை நானே ஓட்டி வந்தேன். எனது வேனில் அடிக்கடி ஸ்ரீஜா பயணம் செய்வார். அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது.

    பகல் நேரத்தில் என் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே நான் ஸ்ரீஜாவை வீட்டிற்கு அழைத்து செல்வேன். அங்கு அவருடன் உல்லாசமாக இருக்க விரும்பினேன். அதற்கு ஸ்ரீஜா மறுத்து விட்டார்.

    எனவே நான் ஸ்ரீஜாவுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். அவர் மயங்கியதும், ஸ்ரீஜாவை பாலியல் பலாத்காரம் செய்தேன். அதன்பின்பு இந்த சம்பவத்தை கூறியே அவருடன் நான் உல்லாசமாக இருந்தேன். இதில் ஸ்ரீஜா கர்ப்பமானார்.

    கர்ப்பம் ஆனதும் உடனே திருமணம் செய்யும்படி ஸ்ரீஜா, என்னை வற்புறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த நான், சம்பவத்தன்று அவரை தாலி வாங்க வரும்படி குழித்துறைக்கு அழைத்து சென்றேன். அங்கு பாலத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஸ்ரீஜாவை ஆற்றில் தள்ளி விட்டேன்.

    இதில் ஸ்ரீஜா தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    இதையடுத்து போலீசார் விபினை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த களியக்காவிளை சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யருக்கு, கைதான விபின் பற்றி சில ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதில் விபினுக்கு நெருங்கிய நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களிடம் ஸ்ரீஜா கொலை தொடர்பான பல ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், விபினின் நண்பர்களை தேடினர். இத்தகவல் வெளியானதும் நேற்று தையாலுமூடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரை சந்தித்து ஒரு செல்போனை கொடுத்தனர்.

    அந்த செல்போன், ஸ்ரீஜாவுக்கு சொந்தமானது என்றும், அதனை ஸ்ரீஜாவுக்கு வாங்கி கொடுத்தது விபின் என்றும் தெரியவந்தது. அந்த செல்போனில் விபின் மட்டுமே ஸ்ரீஜாவுடன் பேசுவார். அந்த செல்போனை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்று விபின் கூறியதால், ஸ்ரீஜா அந்த செல்போனில் வேறு யாருடனும் பேசவில்லை. அந்த செல்போனை கிடைத்தால் அதனை போலீசார் அதனை ஆய்வு செய்தனர். அதில் விபின், ஸ்ரீஜாவுடன் மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரியவந்தது. இது வழக்கின் முக்கிய ஆதாரம் என்பதால் போலீசார் அந்த செல்போனை உடனே கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே கைதான விபினுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. விபின், வேனில் அழைத்து செல்லும் பெண்களிடம் சிரித்து, சிரித்து பேசுவார் என்றும், அவருடன் பல பெண்கள் தொடர்பில் இருந்து வந்த தாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்களை விபின் பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ரகசிய விசாரணையும் தொடங்கி உள்ளது. #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருமணத்துக்கு வற்புறுத்தியதால் ஆற்றில் தள்ளி நர்சை கொன்ற சம்பவம் குறித்து காதலனை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23). நர்சிங் படித்துள்ளார்.

    இவர் தேங்காய் பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ஸ்ரீஜா, அதன் பின்பு வீடு திரும்பவில்லை.

    இதனால் உறவினர்கள் ஸ்ரீஜாவை தேடிவந்தனர். தோழிகளிடமும் கேட்டனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் குழித்துறை ஆற்றில் ஒரு இளம்பெண் பிணம் கடந்த 21-ந் தேதி காலையில் மிதந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பிணமாக மிதந்த பெண் யார்? என்று விசாரித்தனர். இதில் அவர் தேங்காய்பட்டினம் உறவினர் வீட்டில் இருந்து மாயமான ஸ்ரீஜா என தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஸ்ரீஜாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஸ்ரீஜாவின் உடலை அடையாளம் காட்டியதோடு, அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறினர்.

    பின்னர் ஸ்ரீஜாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு குழித்துறை அருகே மஞ்சரவிளை பகுதியில் மருதங்கோடு - களியக்காவிளை சாலையில் மறியல் போராட்டமும் நடத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர். மேலும் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதன் தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    அதன்பின்பு போலீசாரின் விசாரணை தீவிரமானது. மேலும் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் கிடைத்தது. அதில் ஸ்ரீஜா 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

    திருமணத்திற்கு முன்பே ஸ்ரீஜா, கர்ப்பமாக இருந்ததால் அவரது சாவில் மர்மம் இருப்பதை புரிந்து கொண்ட போலீசார், ஸ்ரீஜாவின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என விசாரித்தனர். இதில் நித்திரவிளையை அடுத்த எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் பிபின் (26) என்பவரை ஸ்ரீஜா காதலித்து வந்தது தெரியவந்தது.

    போலீசார் பிபினை தேடி சென்றனர். அங்கு அவர் தலைமறைவாகி இருந்தார். இதனால் ஸ்ரீஜா சாவில் பிபினுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்த போலீசார் அவரை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

    களியக்காவிளை சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில் பிபினை கண்டு பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தான் ஸ்ரீஜாவை ஆற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் பிபினை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் கூறியதாவது:-

    நித்திரவிளை ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த ஸ்ரீஜாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தோம். அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக நான் ஆசை வார்த்தை கூறினேன்.

    இதனால் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். இதில் ஸ்ரீஜா கர்ப்பம் ஆனார். இது பற்றி ஸ்ரீஜா என்னிடம் கூறினார்.ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்த போது அவர் 5 மாத கர்ப்பம் ஆக இருப்பது தெரியவந்தது.

    கர்ப்பிணி ஆனதும் ஸ்ரீஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தான் கடந்த 19- ந் தேதி இரவு நான் ஸ்ரீஜாவை சந்தித்து என்னுடன் வருமாறு கூறினேன். நாங்கள் இருவரும் குழித்துறையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று கர்ப்பத்தை கலைத்துவிட முடிவு செய்தோம். கர்ப்பமாகி 5 மாதம் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என்று ஆஸ்பத்திரியில் கூறிவிட்டனர்.

    இதை கேட்டதும் ஸ்ரீஜா என்னிடம் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரச்சினை செய்தார். இதில் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே நான் அவரை குழித்துறை ஆற்று பாலம் அருகே அழைத்து வந்தேன். அங்கு ஸ்ரீஜாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென அவரை ஆற்றில் தள்ளிவிட்டேன். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.அவர் இறந்தது தெரிந்ததும் நான் தலைமறைவாகி விட்டேன். ஆனால் போலீசார் என்னை தேடி கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் போலீசில் கூறியுள்ளார். இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேலூரில் கள்ளக்காதல் தகராறில் நர்சு கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் கீழ்மொணவூர் டேங்க் தெருவை சேர்ந்தவர் கதிரேசன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனிதா (வயது 28), வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு அனிதா, வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் மாயமானார். இந்த நிலையில் நேற்று சதுப்பேரி ஏரியில் அனிதா பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அவரது முகத்தில் சிறு காயங்கள் இருந்தது. அவரது உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அனிதாவின் கணவர் கதிரேசன் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் அஜித்குமார் தனது மனைவியை கடத்தி கொலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நர்சு அனிதாவுக்கும் பைனான்சியர் அஜித்குமாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசிவந்தனர். தீபாவளி அன்று அனிதா, அஜித்குமாருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை கண்டுபிடித்த கதிரேசன் அனிதாவிடம் இருந்து செல்போனை பறித்தார். மேலும் அவரை கண்டித்துள்ளார்.

    இதனால் தம்பதிகளிடையே கடும் தகராறு ஏற்பட்டது. அன்று மாலை கதிரேசன் ஆட்டோ ஓட்ட சென்று விட்டார். கதிரேசன் வீட்டில் இல்லாததை அறிந்த அஜித்குமார் அனிதாவின் வீட்டுக்கு வந்தார். கணவருக்கு விவகாரம் தெரிந்து விட்டதால் கள்ளக்காதலை கைவிடுமாறு அனிதா கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அஜித்குமார் அனிதாவை அடித்துள்ளார். பின்னர் அவரை ஏரிக்கு கடத்தி சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்காதலன் அஜித்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலை குறித்த தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ×