என் மலர்
நீங்கள் தேடியது "கணவர் மாயம்"
- போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் இடிந்த நிலையில் பாழடைந்த வீட்டில் இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது.இதனால் மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து இளம்பெண்ணை கொன்றது தெரியவந்தது.
மேலும் அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரையை சேர்ந்த சித்ரா (வயது 28) என்பதும், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் தெரிய வந்ததுள்ளது.
சித்ரா தனது கணவன் ராஜேஷ் கண்ணாவை விட்டு பிரிந்து தனியாக குழந்தையுடன் வசித்து வந்தார்.
மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ராஜேஷ் கண்ணாவும் தலைமறைவாகி உள்ளதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சித்ராவின் கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வருகின்றனர்.
- மேலப்பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்த அய்யப்பன் (வயது 42) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
- செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது.இதுகுறித்து அவரது மனைவி சாலினி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள வெட்டிகோணம் பகுதியை சேர்ந்தவர் சாலினி. இவருக்கும் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்த அய்யப்பன் (வயது 42) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் அய்யப்பன், கடந்த 15-ந்தேதி தனது மனைவி சாலினியுடன் வெட்டி கோணத்தில் வந்து தங்கினார். மறுநாள் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற அய்யப்பன் இரவில் வீடு திரும்பவில்லை.
அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது.இதுகுறித்து அவரது மனைவி சாலினி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை தேடி வரு கின்றனர்.
- கருக்கல்வாடி கிராமம் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களுக்கு சென்று கயிறு விற்பனை செய்து வருகிறார்.
- கடந்த மாதம் 3-ந் தேதி கயிறு விற்று வருவதாக கூறி வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கே.ஆர்.தோப்பூர் பகு தியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களுக்கு சென்று கயிறு விற்பனை செய்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் 3-ந் தேதி கயிறு விற்று வருவதாக கூறி வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. அக்கம்பக்கத்தில் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுபற்றி அவரது மனைவி விமலா தார மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






