என் மலர்
நீங்கள் தேடியது "நர்ஸ் கொலை"
- போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் இடிந்த நிலையில் பாழடைந்த வீட்டில் இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது.இதனால் மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து இளம்பெண்ணை கொன்றது தெரியவந்தது.
மேலும் அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரையை சேர்ந்த சித்ரா (வயது 28) என்பதும், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் தெரிய வந்ததுள்ளது.
சித்ரா தனது கணவன் ராஜேஷ் கண்ணாவை விட்டு பிரிந்து தனியாக குழந்தையுடன் வசித்து வந்தார்.
மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ராஜேஷ் கண்ணாவும் தலைமறைவாகி உள்ளதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சித்ராவின் கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதால் அவரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- காதல் பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் இடிந்த நிலையில் பாழடைந்த வீடு உள்ளது. இன்று காலை அங்கு இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது. இதனால் மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து இளம்பெண்ணை கொன்றது தெரியவந்தது.
மேலும் அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதால் அவரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அவரை கொலை செய்த மர்மநபர்கள் யாரென்று தெரியவில்லை. பூம்புகார் நகர் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நேற்றிரவு பணி முடிந்து செல்லும்போது மர்மநபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த வீட்டிற்கு கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அல்லது காதல் பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகள் யாரென்று கண்டறிய அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் செவிலியர்களில் யாராவது மாயமாகி உள்ளனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலையில் கல்லைப்போட்டு செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாயமான நர்சை கண்டுபிடித்து தருமாறு அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிலாஸ்பூர்:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய நர்சு ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் திப்திபா கிராமத்தை சேர்ந்த 30 வயதான நர்சு ஒருவர் தனது 11 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார்.
கடந்த 30-ந் தேதி மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட நர்ஸ் மறுநாள் வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் நர்சை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மாயமான நர்சை கண்டுபிடித்து தருமாறு அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் ருத்ராப்பூரின் இந்திராசவுக் பகுதியில் இ-ரிக்சாவில் ஏறும் காட்சி கடைசியாக சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் கடந்த 8-ந் தேதி அந்த நர்சின் வீட்டில் இருந்து 1½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காலிமனைப்பகுதியில் நர்ஸ் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவரது செல்போன் மற்றும் மணிபர்ஸ் ஆகியவை திருட்டு போய் இருந்தது. நர்சின் செல்போன் எண் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் பரேலியை சேர்ந்த தர்மேந்திரகுமார் என்ற தொழிலாளி அந்த நர்சை கற்பழித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்ட்டது.
கடந்த 30-ந் தேதி நர்சு ஆஸ்பத்திரியில் பணி முடிந்து தனியாக வீட்டிற்கு சென்ற போது தர்மேந்திரகுமார் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்னர் நர்சை தாக்கி புதருக்குள் இழுத்து சென்று கற்பழித்த அவர் நர்சின் கைக்குட்டையாலேயே மூச்சு திணற செய்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ராஜஸ்தானில் பதுங்கி இருந்த தர்மேந்திரகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் நர்சிடம் இருந்து அவர் திருடி இருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான தர்மேந்திரகுமார் போதைக்கு அடிமையானவர் என்றும் அவர் நர்சை கழுத்தை நெரித்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






