என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல்"

    • ஆகாய ஓட்டல் இயந்திரம் திடீரென பழுதானதால் கீழே இறங்க முடியவில்லை.
    • 2 மணி நேரத்திற்கும் மேலாக முயன்றும் சுற்றுலா பயணிகளை கீழே இறக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    கேரளாவின் மூணாறில் ஆகாய ஓட்டலில் சுற்றுலா பயணிகள் 8 பேர் சிக்கி தவிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    120 அடி உயரம் சென்ற ஆகாய ஓட்டல் இயந்திரம் திடீரென பழுதானதால் கீழே இறங்க முடியவில்லை.

    2 மணி நேரத்திற்கும் மேலாக முயன்றும் சுற்றுலா பயணிகளை கீழே இறக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    அதனால், ஆகாய ஓட்டலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • உணவின் தரமே மிகவும் முக்கியம் என்று கோலி கூறியுள்ளார்.
    • இந்த உணவகத்தின் பெயரான ‘ஒன்8 கம்யூன்’ என்பது விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்துடன் தொடர்புடையது.

    உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் விராட் கோலி. டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

    உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார். கிரிக்கெட் தவிர விளம்பரங்கள் மூலம் அவர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். விராட் கோலியும், அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளனர். இந்த நிலையில் விராட் கோலியின் மும்பை உணவகம் பற்றியும், ரெஸ்டாரண்டில் இருக்கும் உணவுகளின் விலை விவரம் பற்றிய தகவலும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

    மும்பையில் பிரபலமான ஜூகு பகுதியில் 'ஒன் 8 கம்யூன்' என்ற பெயரில் அவர் 2022-ம் ஆண்டில் உணவகத்தை தொடங்கினார். பிரபல பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவை விராட் கோலி வாங்கி புதுப்பித்து உணவகம் அமைத்துள்ளார்.

    இந்த ரெஸ்டாரண்டின் மெனுவில் அசைவம், கடல் உணவுகள் மட்டுமின்றி தாவர அடிப்படையிலான உணவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு பிரியாணி விலை ரூ.978 ஆகும்.

    வெறும் சாதம் ரூ.318, பிரெஞ்ச் பிரைஸ் ரூ.348, மஸ்கார்போன் சீஸ்கேக் ரூ.748, தந்தூரி ரொட்டி ரூ.118 போன்ற விலைகளில் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.2,318 -ல் மிகவும் விலை உயர்ந்த அசைவ உணவு கிடைக்கிறது.

    விராட் கோலியின் தற்போதைய சைவ உணவு முறையைப் பிரதிபலிக்கும் வகையில், 'விராட் பேவ ரைட்ஸ்' என்ற சிறப்புப் பிரிவும் இடம் பெற்றுள்ளது. இதில் டோபு ஸ்டீக், ட்ர பிள் ஆயில் சேர்த்த மஸ்ரூம் டம்ப்ளிங்ஸ், சூப்பர் புட் சாலட் போன்ற உணவுகள் இடம்பெற்றுள்ளன. எல்லா வகையான உணவுகளும் இந்த ரெஸ்டாரண்டில் கிடைக்கிறது.

    இந்த உணவகத்தின் விலைப்பட்டியல் சற்று அதிகமாகவே இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதேபோல் செல்லப்பிராணிகளுக்கான உணவுகளும் ரூ.518 முதல் ரூ.818 வரை இங்கு விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த உணவகத்தின் பெயரான 'ஒன்8 கம்யூன்' என்பது விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்துடன் தொடர்புடையது. அவரது ஜெர்சி எண் 18-ஐ குறிக்கும் வகையிலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உணவகத்தின் சுவரில் இந்த எண் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. இங்கு பகல் நேரத்தில் வெளிச்சம் நன்றாக வர வசதியாக கண்ணாடி கூரை அமைக்கப்பட்டு, அழகான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

    உணவின் தரமே மிகவும் முக்கியம் என்று கோலி கூறியுள்ளார். இந்த ரெஸ்டாரண்ட் மூலம், விருந்தினர்கள் திருப்தி அடைந்து மீண்டும் வர வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கமாக உள்ளது. மும்பையில் மட்டுமின்றி டெல்லி, கொல்கத்தா, புனே போன்ற நகரங்களிலும் 'ஒன்8 கம்யூன்' கிளைகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

    • போலீசார் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • ராஜஸ்தான் மாநில எல்லையான அம்பாஜியில் அந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது.

    குஜராத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் தங்களது விடுமுறை நாட்களை கொண்டாட ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றனர்.

    அவர்கள் ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிற்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். தங்களுக்கு வேண்டிய உணவுகளை விரும்பியபடி ஆர்டர் செய்து இஷ்டம் போல சாப்பிட்டார்கள்.

    சாப்பிட்ட உணவிற்கான பில்லை பணியாளர் கொண்டு வந்து கொடுத்தார். ரூ.10 ஆயிரத்து 900-த்திற்கான பில்லை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பணம் செலுத்தாமல் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தனர்.

    கழிவறைக்கு செல்வதாக கூறி ஒருவர் பின் ஒருவராக ஓட்டலிலிருந்து வெளியேறி காரில் தப்பி சென்றனர். அவர்கள் அங்கிருந்து செல்வதை கண்ட ஓட்டல் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அவர்கள் காரில் தப்பி சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

    ராஜஸ்தான் மாநில எல்லையான அம்பாஜியில் அந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது. அப்போது போலீசார் காரை சுற்றி வளைத்து அவர்கள் 5 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை வசூல் செய்தனர். அவர்களை கைது செய்து இதேபோல் வேறு எங்காவது மோசடி செய்தனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு ஓட்டலில் யாராவது உணவை வீணாக்கினால், அவர்கள் ரூ.20 அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

    உணவு வீணாவதைத் தடுக்க இந்த புதுமையான முடிவை எடுத்துள்ளது. உணவை வீணாக்குவதற்கு அபராதம் விதித்து கையால் எழுதப்பட்ட உணவக அறிவிப்பு கார்டு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் இதே போன்ற விதி இருந்தால் உணவு வீணாவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.

    உணவை வீணாக்கக்கூடாது என்பது சரிதான் ஆனால் ஒருவர் எப்படி தங்களுக்குப் பிடிக்காத உணவை உண்ணும்படி கட்டாயப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் வாடிக்கையாளர்கள் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிக்கும் நோக்கில் உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

    • பின்னணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரவேற்பாளர் குரல் ஒலிக்கிறது.
    • வைரலான வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. அதே போல மனிதர்கள் செய்யும் வேலைகளை டிஜிட்டல் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எளிதாக செய்ய முடிகிறது.

    இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் மெய்நிகர் வரவேற்பாளராக செயல்படும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஓட்டல் மியாமி மாநிலத்தில் அமைந்துள்ளது. அங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தொலைதூரத்தில் இருந்து ஓட்டல் வரவேற்பறையில் உள்ள மேஜையில் டிஜிட்டல் திரை வழியாக இயக்குகிறார். ஓட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு செக்-இன் செயல் முறையில் உதவுகிறார்.

    அப்போது பின்னணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரவேற்பாளர் குரல் ஒலிக்கிறது. திரையில் அவர் விருந்தினர்கள் முன்பு பேசி அவர்களுக்கு ஓட்டலின் விதிகளை கூறி வாடிக்கையாளர்களுக்கு அறைக்கு செல்ல வழிகாட்டுவது போன்று காட்சிகள் உள்ளது. வைரலான வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், மக்கள் இந்த இடங்களை புறக்கணிக்க வேண்டும். இதனால் பலர் வேலைகள் இழக்க நேரிடும் என பதிவிட்டனர். அதே நேரம் சிலர் இந்த முயற்சியை பாராட்டினர்.



    • பிரபல ஓவியர் எம்.எப் ஹுசைன் மற்றும் ராகுல் காந்தி எம்.பி. ஆகியோர் இங்கு டீ குடித்துள்ளனர்.
    • கல்லறைகளுக்கு நடுவில் அமைந்துள்ளதால் இங்கு சாப்பிட அந்த பகுதி மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் லால் தர்வாசா பகுதியில் 26 கல்லறைகளின் மத்தியில் லக்கி உணவகம் என்ற ஓட்டல் இயங்கி வருகிறது. உள்ளூர்வாசிகள் உட்பட பல பிரபலங்கள் இந்த உணவகத்திற்கு வருகை தருகின்றனர்.

    கல்லறைகளுக்கு நடுவில் அமைந்துள்ளதால் இங்கு சாப்பிட அந்த பகுதி மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இங்கு சாப்பிட்டால் அதிர்ஷ்டம் எனவும் நம்பப்படுகிறது. ஓட்டல் நாள் முழுவதும் பரபரப்பாக காணப்பகிறது.

    கடந்த காலங்களில் பிரபல ஓவியர் எம்.எப் ஹுசைன் மற்றும் ராகுல் காந்தி எம்.பி. ஆகியோர் இங்கு டீ குடித்துள்ளனர்.

    ஊழியர்கள் அனைத்து கல்லறைகளிலும் பூக்களைத் தூவி ஒவ்வொரு நாளும் பதேஹா ஓதுவார்கள். இந்த உணவகம் 1950-ம் ஆண்டு முகமது பாய் என்பவரால் நிறுவப்பட்டது.

    இது ஒரு கல்லறைக்குள் கட்டப்பட்டது என்று 17 ஆண்டுகளாக இங்கு காசாளராகப் பணியாற்றி வரும் ரசாக் மன்சூரி கூறினார்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஓட்டலில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இந்த உணவகம் இந்து மற்றும் முஸ்லிம் ஒற்றுமையின் சின்னம் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • காரைக்குடியில் காலித் பிரியாணி ஓட்டலை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • முன்னாள் அமைச்சர் தென்னவன்,நகர்மன்ற தலைவர் முத்து துரை கலந்துகொண்டனர்.

    காரைக்குடி

    தமிழகத்தின் பிரபல ஓட்டல்களில் ஒன்றான காலித் பிரியாணி ஓட்டல் கிளை திறப்பு விழா காரைக்குடியில் நடந்தது. எஸ்.ஏ.எம். குழும சேர்மன் சித்திக் வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி ஓட்டலை திறந்து வைத்தார்.

    முன்னாள் அமைச்சர் தென்னவன்,நகர்மன்ற தலைவர் முத்து துரை, துணைத்தலைவர் குணசேகரன், புதுவயல் பேரூராட்சி தலைவர் முகம்மது மீரா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

    காரைக்குடியில் முதன்முறையாக அரேபியன் மந்தி பிரியாணி விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.ஆனந்த்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சத்யா ராஜா,அரசு வழக்கறிஞர் பாலசுப்பிர மணியன்,புதுவயல் பேரூராட்சி துணை தலைவர் பகுர்தீன் அலி,நகர்மன்ற உறுப்பினர்கள் கலா காசிநாதன்,சொ.கண்ணன்,முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ்,தொழிலதிபர் ஜெரா ல்டின் தாமஸ்,புதுவயல் சித்திக்,ஆப்பிள் மொபைல் உரிமையாளர்கள் செல்வம், வெங்கட்,அனைத்து கட்சி நிர்வாகிகள்,தொழிலதிபர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.எச்.ஏ.எம் குழும மேனேஜிங் டைரக்டர் எஸ்.முகம்மது பாசில் நன்றி கூறினார்.

    • மேலப்பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்த அய்யப்பன் (வயது 42) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
    • செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது.இதுகுறித்து அவரது மனைவி சாலினி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள வெட்டிகோணம் பகுதியை சேர்ந்தவர் சாலினி. இவருக்கும் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்த அய்யப்பன் (வயது 42) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் அய்யப்பன், கடந்த 15-ந்தேதி தனது மனைவி சாலினியுடன் வெட்டி கோணத்தில் வந்து தங்கினார். மறுநாள் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற அய்யப்பன் இரவில் வீடு திரும்பவில்லை.

    அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது.இதுகுறித்து அவரது மனைவி சாலினி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை தேடி வரு கின்றனர்.

    • கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
    • 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் .

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றும் முயற்சியாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் தாள்கள் ஆகியவற்றை பயன்படுத்த 01.01.2019 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது கன்னி யாகுமரி மாவட் டத்தில் நன்கு குறைந்து வருகிறது. இருப்பினும், சில உணவகங்கள், டீ கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிக்கும் கடைகள் ஆகியவற்றில் அரசின் தடை ஆணையை மீறி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது தெரியவருகிறது.

    அனைத்து உணவகங்கள் டீ கடைகள் , மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் முதலிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட ஒருமுறை பயன்ப டுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தக்கூடாது என இதன்மூலம் எச்ச ரிக்கப்படுகிறது. ஆய்வின் போது, தடையை மீறி அவ்வாறு உபயோகப்படுத்துவது கண்டறியப்பட்டால் முதல்முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும், 3-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும் என்பது இதன்மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    செய்தித்தாள் முதலிய அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொருட்களை பாதுகாக்கவோ, பொட்டல மிடவோ பயன்படுத்தக்கூ டாது. சூடான வடை, சம்சா போன்ற தின்பண்டங்களை செய்திதாளில் வைத்து எண்ணெய்யை பிழிந்து சாப்பிடும் பொழுது செய்தித்தாளில் படிந்தி ருக்கும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கார்பன், காட்மியம் . தாலேட் போன்ற கடின உலோகங்களும் சேர்ந்து உண்ணும்பொழுது உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.

    அவை தொடர்ச்சியாக உடலில் சேரும்பொழுது ஜீரண மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன .

    எனவே செய்தித்தாள் மற்றும் அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொ ருள்களை சேமித்து வைப்பதோ , பொட்டலமிட்டு வழங்குவதோ மற்றும் உணவு பொருள்களை உண்ண வழங்குவதோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது .

    அவ்வாறு உபயோ கப்படுத்துவது கண்டறியப் பட்டால் அபராதம் விதிக்கப் படுவதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும்.

    டீ கடைகள், ஓட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை பயன்படுத்துவது, அச்சிடப் பட்ட தாள்களில் வடை, சம்சா கொடுப்பது போன்றவை தொடர்பாக பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம் .

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பழனிக்குமார் வேப்பூரில் தங்கி, சேலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிநாடு என்னும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டிலிருந்து சேலம் சாலையில் கரூரைச் சேர்ந்த பழனிக்குமார்,(வயது 49.) இவர் வேப்பூரில் தங்கி, சேலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிநாடு என்னும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். . நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டு பூட்டி இருந்து.

    இந்நிலையில், எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டுஓட்டல் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. இது குறித்து வேப்பூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் ஓட்டலில் ரூ.36 லட்சம் பொருட்கள் திருடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன், முகமது ஷரீப் சேட் இடையே கடை நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் சேக் முகம்மது மகன் முகமது அசாருதீன். இவர் தேவிபட்டினம் முகமது ஷரீப் சேட் என்பவருடன் இணைந்து ராமநாதபுரம் அரசு பஸ் டெப்போ எதிரே ஓட்டல் நடத்திவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன், முகமது ஷரீப் சேட் இடையே கடை நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் தேவிபட்டினம் பெரிய கடை தெருவை சேர்ந்த முகமது ஷரீப் சேட், வாணி இப்ராஹிம், ராமநாதபுரத்தை சேர்ந்த அசரப் அலி, ராமநாதன், ஜகுபர் பரக்கத் ஆகியோர் கடையில் இருந்த சுமார் ரூ.36 லட்சம் மதிப்புள்ள மின்சாதனங்கள், டேபிள் சேர், குளிர்சாதன பெட்டி, சமையல் பாத்திரங்கள், தளவாடப் பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    இந்த நிலையில் தனக்கு சொந்தமான பொருட்களை அபகரித்துக் கொண்டதாகவும், தனக்கு செலுத்த வேண்டிய பங்குத்தொகை ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்தை தராமல் கூட்டுச்சதி செய்ததாகவும் ராமநாதபுரம் கோர்ட்டில் அசாருதீன் வழக்கு தாக்கல் செய்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் முகமது ஷரீப் சேட், வாணி இப்ராஹிம், ராமநாதபுரத்தை சேர்ந்த அசரப் அலி, ராமநாதன், ஜகுபர் பரக்கத் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அழுகிய உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை
    • அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.

    கன்னியாகுமரி:

    திருவட்டாரை அடுத்த ஆற்றூர் புல்லாணி விளையை சேர்ந்தவர் ராஜேஷ், ஓட்டல் மேலாளர்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 19 வயது மகள், 14 வயது மகன் உண்டு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேசுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு ராஜேசின் மனைவி சென்று விட்டார். அதன்பிறகு தாயார் தங்கத்துடன் ராஜேஷ் வசித்து வந்தார்.

    பல்வேறு ஓட்டல்களில் மேனேஜராக வேலை பார்த்து வந்த ராஜேஷ், மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்த பின்னர் சரியாக வேலைக்குச்செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமை யானார்.

    இந்த நிலையில் அவரது தாயார் தங்கத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருநந்திக்கரையில் உள்ள சகோதரி வசந்தாவின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இதனால் ராஜேஸ் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்து உள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த சசிகுமார் என்பவர், தங்கத்துக்கு தகவல் கொடுத்தார்.

    அதனையடுத்து தங்கம் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்புற அறையில் உள்ள சோபா வில் ராஜேஸ் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்குப்பதிவு செய்து உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை நடத்தி வரு கிறார். ராஜேசை கடந்த 15-ந்தேதி மாலை வீட்டில் வைத்து பார்த்ததாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த சசிகுமார் கூறியுள்ளார். எனவே அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரி கிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×