என் மலர்tooltip icon

    இந்தியா

    14 ஆயிரம் அடி உயர பனிமலையில் மேக கூட்டங்களுக்கு நடுவே சுழலும் ஓட்டல்
    X

    14 ஆயிரம் அடி உயர பனிமலையில் மேக கூட்டங்களுக்கு நடுவே சுழலும் ஓட்டல்

    • அனைத்து காலங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கும் ஒரு அற்புதமான இடங்களாகும்.
    • சாப்பிட்டபடியே பனி படர்ந்த மலைகள், மேக கூட்டங்களை ரசிக்கலாம்.

    இந்தியாவில் யூனியன் பிரதேசமான காஷ்மீர், அதன் கண்கவர் பனி மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், அழகிய தால் ஏரி மற்றும் கலாசார செழுமையால் 'பூமியில் ஒரு சொர்க்கம்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு குல்மார்க் பகுதியில் நடைபெறும் பனிச்சறுக்கு, சிகாராவில் படகு சவாரி, மற்றும் தலைநகர் ஸ்ரீநகர், பஹல்காம், சோனா மார்க் பகுதியில் பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகள் அனைத்து காலங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கும் ஒரு அற்புதமான இடங்களாகும்.

    இந்நிலையில் பனிச்சறுக்கு போட்டிகள் நடக்கும் குல்மார்க் பகுதியில் சுமார் 14 ஆயிரம் அடி உயரம் கொண்ட அபர்வத் சிகரத்தில் சுழலும் ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

    இந்த சுழலும் ஓட்டலில் காஷ்மீர் பாரம்பரிய சமையல் கலைஞர்கள் கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டபடியே பனி படர்ந்த மலைகள், மேக கூட்டங்களை ரசிக்கலாம். மேலும் அங்கு நடைபெறும் பனிச்சறுக்கு விளையாட்டுகளை பார்வையிட முடியும் என்பதால் இதற்கு சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

    Next Story
    ×