என் மலர்
நீங்கள் தேடியது "hotel"
- தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
- தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை சாலை லதா ஸ்டீல் ஹவுஸ் அருகே தனியார் ஓட்டல் உள்ளது.
ஓட்டலின் தேவையற்ற பொருட்கள் போட்டு வைத்திருந்த பகுதியில் அதிகாலை 1 மணியளவில் திடிரென தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட ஊழியர்கள் அதனை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
இதுகுறித்து கோரிமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் சில ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்ததாக கூறப்படுகிறது.
தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓட்டலுக்கு வந்த திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
- தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது50). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதி காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் ஓட்டலில் அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு தரும்படி அடிக்கடி ஓட்டல் நடத்திவரும் பச்சையம்மாளிடம் கேட்டார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று மாலையும் ஓட்டலுக்கு வந்த திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
இதனை ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்த காஞ்சிபுரம் ரெயில்வே சாலை, சன்னதி தெருவை சேர்ந்த ராமு என்கிற ராமச்சந்திரன்(40) என்பவர் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அருகில் கிடந்த சவுக்கு கட்டையால் திருமலையை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே கொலையாளி ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதே பகுதியில் பதுங்கி இருந்த ராமச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.
- சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா பகுதியில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு கடந்த 19-ந்தேதி இரவு குடிபோதையில் 2 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் அசைவ உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அதில் ஒருவர் சாப்பிட்டு முடிக்கவும் கடையின் மேசை மீது தலை வைத்து அப்படியே போதையில் மயங்கிவிட்டார்.
மற்றொருவர் அவர்கள் வந்த காரிலேயே தூங்கிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் பலமுறை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர்.
அப்போது கடையில் இருந்து புறப்பட்டு செல்லுங்கள் என உரிமையாளர் கூறினார். அதற்கு காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.
இது பற்றி அம்மாப்பேட்டை போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் விசாரித்தனர். அதில், அவர்கள் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் ஏட்டு செந்தில்குமார் என்பது தெரியவந்தது.
இந்த ரகளையை அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் வைரலாக பரவியது.
இதனிடையே சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் விசாரணை நடத்தி ஓட்டலில் ரகளை செய்த சப்-இன்ஸ்பெக்டர் சிவ சக்தி, ஏட்டு செந்தில்குமார் ஆகிய இருவரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து துறை ரீதியான விசாரணையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லப் பாண்டியன் நடத்தினார். இந்த விசாரணை அறிக்கையை அவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டிடம் சமர்பித்தார். அந்த அறிக்கையை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் துறைரீதியான நடவ டிக்கையாக சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஏட்டு செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பராமரிப்பு பணி நடப்பதால் 4 நாட்களாக ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் அடுத்துள்ள ஸ்ரீரெங்கராஜ புரம் கருப்பூர் புதுத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 47). இவர் பந்தநல்லூர் மெயின் சாலை அரச மரத்தடி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஓட்டலில் தொழிலா ளியாக வேலை செய்து வந்தார். பராமரிப்பு பணி நடப்பதால் 4 நாட்களாக ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜாகிர் உசேன் சம்பவதன்று ஓட்டலுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு சுவிட்ச் போர்டு பிளக்கில் இருந்த ஒயரை எடுத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஜாகீர்உசேன் உடல்நிலை பாதிக்கப்ப ட்டார். அவரை குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள், ஜாகீர் உசேன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைய டுத்து ஜாகிர் உசேனின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓட்டலில் சாப்பிட்டு பணம் பறித்த கும்பல் தப்பி ஒட்டம்
- உரிமையாளர் பாண்டி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார்.
மதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மிளகனூரை சேர்ந்தவர் பாண்டி (வயது31). இவர் கீரைத்துறை சிந்தாமணி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு 6 வாலிபர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றனர்.
அவர்களிடம் உரிமை யாளர் பாண்டி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரை ஆபாசமாக பேசி கத்திமுன்னையில் மிரட்டி ஓட்டல் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து உரிமையாளர் பாண்டி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் பணம் பறித்த வாலிபர்கள் ஆவாரங்காட்டை சேர்ந்த லட்சுமணன் அகிலன், கண்ணன் என்ற கேடி கண்ணன், நிதீஷ் குமார், கோலிகுமார், தனுஷ் என்று தெரியவந்தது. அவர்கள் 6பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.
- கும்பல் தாக்கும் காட்சிகள் அங்கு பொருந்தபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி பஸ் நிலைய வளாகத்தில் ஓட்டல்கடை நடத்தி வருபவர் சுப்பிரமணி. இவர் வழக்கம் போல் உணவகத்தில் இருந்தபோது குடிபோதையில் வந்த 3 வாலிபர்கள் அநாகரிகமாக பேசிக்கொண்டே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது திடீரென ஒரு வாலிபர் ஆம்லேட் கேட்டால் உடனே தரமுடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் ஆம்லேட் ஆர்டர் சொல்லவே இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் 3 பேரும் கடையில் இருந்த பொருட்களை வீசி எறிந்தும், சுப்ரமணியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியபடியே அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையால் தாக்கினர். இதைப்பார்த்ததும் சுப்ரமணியின் மகன் தினேஷ் தடுக்க வந்தார். அவரையும் இந்த கும்பல் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சுப்ரமணியின் மனைவி லட்சுமி, மகன் தினேஷ் ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கும் காட்சிகள் அங்கு பொருந்தபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதில் தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடிதடியில் ஈடுபட்ட அசோக், நவீன், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனியில் ஓட்டலில் ஆம்லேட் கேட்டு அடிதடியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
- வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.
மதுரை:
மதுரை சோலையழகு புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கி சென்றார். இந்நிலையில் வீட்டிற்கு சென்று சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்தபோது உணவில் பாதி உடைந்த ஒரு பிளேடு துண்டு ஒன்று இருந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அவர் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம் உணவில் பிளேடு துண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த சாதத்தை சோதனை செய்த தோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படவில்லை.
மேலும் விசாரணை நடத்தியதில் பணியாளர்களுக்கு மருத்துவசான்று பெறாமல், தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.
மேலும் உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக் காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
- ஓட்டலுக்கு அதிகாரிகள் நோட்டீசு அனுப்பப்பட்டது.
- உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாரதி நகரில் உள்ள ஒரு பிரபல பிரியாணி கடையில் வாடிக்கையாளர் வாங்கி சாப்பிட்ட முட்டை பிரியாணியில் புழு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அந்த ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்க வேல் மற்றும் கீழக்கரை உணவு பாதுகாப்பு ஜெயராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் அந்த உணவு மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள் ஆய்வுக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவை பொருத்து சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தரமற்ற உணவு விற்பனை செய்தது தொடர்பாக ஓட்டலுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.
- சங்கரன்கோவில் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை.
- தென்காசி மாவட்டத்திலும் பொது மக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நெல்லை-ராஜபாளையம் சாலையில் ஒரு ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உணவு சாப்பிட்டு வருகின்றனர். நேற்று சங்கரன்கோவிலை சேர்ந்த ஒருவர் அங்கு சிக்கன் வாங்கி சென்றுள்ளார். பின்னர் அதனை உண்ணும் போது சிக்கன் கிரேவி உள்ளே பல்லி கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சங்கரன்கோவில் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை. உணவு பாதுகாப்பு அதிகாரியை தொடர்பு கொண்டால் மாவட்டம் முழுவதும் நான் சோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால் தனக்கு நேரமில்லை என கூறுகிறார். எனவே சங்கரன்கோவில் நகருக்கு என தனி உணவு பாதுகாப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்.
மேலும் பிரபல உணவங்களுக்கு அதிகாரி செல்லும் தகவல் முன்கூட்டியே உணவகத்திற்கு தெரிந்து விடுவதால் எந்தவித சோதனையிலும் அவர்கள் பிடிபடுவதில்லை. தற்பொழுது நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தரமற்ற, கலப்பட உணவு பற்றிய புகார்களுக்கு புகார் செய்ய புதிய இணையதளம் மற்றும் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளார். இதன் மூலம் புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோன்று தென்காசி மாவட்டத்திலும் பொது மக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- மாலை கருப்பூர் பைபாஸ் சாலையில் உள்ள டோல்கேட்டில் பணியில் இருந்தார்.
- என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் தாபா ஓட்டல் நடத்தி வரும் நபர், முகமது அலியிடம் வந்து தனது ஓட்டலில் குடித்துவிட்டு இரு தரப்பினர் தாக்கிக் கொள்வதாக கூறினார்.
சேலம்:
சேலம் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்கா ரராக பணியாற்றி வருபவர் முகமது அலி. இவர் நேற்று மாலை கருப்பூர் பைபாஸ் சாலையில் உள்ள டோல்கேட்டில் பணியில் இருந்தார்.
அப்போது, அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் தாபா ஓட்டல் நடத்தி வரும் நபர், முகமது அலியிடம் வந்து தனது ஓட்டலில் குடித்துவிட்டு இரு தரப்பினர் தாக்கிக் கொள்வதாக கூறினார்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு முகமது அலி சென்று பார்த்தபோது, தகராறில் ஈடுபட்ட வெளியூரை சேர்ந்த 5 பேர் கொண்ட ஒரு தரப்பினர் அங்கிருந்து சென்று விட்டனர். ஓமலூர் அருகே கோட்டக் கவுண்டம்பட்டியை சேர்ந்த 5 பேர் கொண்ட மற்றொரு தரப்பினர் அங்கு இருந்தனர்.
அவர்களிடம் முகமது அலி விசாரணை நடத்தினார். அப்போது ஆத்திரமடைந்த அந்த 5 பேரும் போலீஸ்காரரை தாக்கினர். இதுகுறித்து முகமது அலி உடனடியாக கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீஸ்காரர் முகமது அலி கொடுத்த புகாரின் பேரில், கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முகமது அலி மீது தாக்குதல் நடத்தியதாக சண்முகம் (வயது 22), மணிகண்டன் (29), விஜய் (25), தினேஷ் (31), வெங்க டேசன் (35) ஆகியோரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மது போதையில் தகரா றில் ஈடுபட்ட நபர்களை விசாரிக்க சென்ற போலீஸ்காரர் தாக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.