என் மலர்
நீங்கள் தேடியது "ஊழியர்கள்"
- மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
- உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆட்டு மந்தைகளைப் போல பணி நீக்கம் செய்யப்படுவதும், தனிப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு எந்த நேரத்திலும் மீட்டிங், பணிச்சுமை என அலைக்கழிக்கப்படுவதும் கார்ப்பரேட் ஊழியர்கள் நவீன கொத்தடிமைகளாக மாறி வருவதற்காக அறிகுறி என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பல சம்பவங்களும் அவ்வப்போது வெளிவருகின்றன.
அந்த வகையில், பிரசவ வலி ஏற்பட்ட மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தனக்கு 2 நாட்கள் லீவ் வேண்டும் என தனது நிறுவன மேலாளரிடம் கேட்ட ஊழியருக்கு கிடைத்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படத்தை பகிர்ந்து Reddit சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த அனுபவம் விமர்சனங்களை ஏற்ப்படுத்தி வருகிறது
அந்த பதிவின்படி, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழியர் பிரசவ வலி ஏற்பட்ட தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அவரை கவனித்துக்கொள்வதற்காக 2 நாட்கள் தனது நிறுவன மேலாளரிடம் விடுப்பு கேட்டுள்ளார்.
இதற்கு பதியளித்த மேலாளர், 'உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் மருத்துவமனையில் இருந்து வேலை செய்ய முடியுமா?' என்று பதிலளித்தார்.
இதற்கு பதிலளித்த ஊழியர்,"அது சாத்தியமில்லை, மருத்துவமனையில் மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டியவன் நான். மருத்துவக் வாங்க செல்வது போன்ற வேறு வேலைகளும் உள்ளன. மேலும், மருத்துவமனையில் இருந்து அலுவலக வேலைகளைச் செய்வது சாத்தியமில்லை," என்று பதில் கூறியுள்ளார். இதன்பின் மேலாளர் வேண்டா வெறுப்பாக அவருக்கு விடுப்பு வழங்கியுள்ளார். இந்த பதிவு வைரலாகி விமர்சனங்களை குவித்து வருகிறது.
- வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்தது.
- டெஸ்லா, பி.ஒய்.டி. போன்றவை ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின.
பெர்லின்:
உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று போஸ்.
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.
இதற்கிடையே, உலகளாவிய வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்தது.
இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பி.ஒய்.டி. போன்றவை ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின.
இந்நிலையில், போஸ் நிறுவனமும் தற்போது ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
அதன்படி, உலகம் முழுவதிலும் உள்ள அதன் கிளையில் இருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என போஸ் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.
- ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.
- இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.
சீனாவில் Arashi Vision Inc என்ற நிறுவனத்தில் உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.
இந்த சவாலில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.
ஊழியர்களிடையே ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, இந்த சவாலை கொண்டு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022 முதல், இந்த நிறுவனம் உடல் எடையை குறைக்கும் சவாலை நடத்தி, தோராயமாக ₹2.47 கோடி வெகுமதிகளை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 99 ஊழியர்கள் மொத்தமாக 950 கிலோ எடையை குறைத்து ரூ.1.23 கோடியை பிரித்துக் கொண்டனர்.
- இனிமேல் மாட்டிறைச்சி பரிமாறப்படக்கூடாது என்று உணவக ஊழியர்களிடம் மேனேஜர் தெரிவித்தார்.
- போராட்டத்திற்கு மாநில அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி மேனேஜர் இனி வங்கி அலுவலகத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டக்கூடாது என்று உத்தரவு போட்டதும், வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
சமீபத்தில் பொறுப்பேற்ற பீகாரைச் சேர்ந்த மேனேஜர், ஊழியர்களை மனரீதியாக துன்புறுத்தல் மற்றும் அதிகாரிகளை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும் தடை விதித்தது குறித்து தெரியவந்ததை அடுத்து ஊழியர்கள் இதனை பிரதானமாக கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் குறித்து இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI) தலைவர் கூறுகையில், இங்கே ஒரு சிறிய உணவகம் இயங்குகிறது, குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது. இனிமேல் மாட்டிறைச்சி பரிமாறப்படக்கூடாது என்று உணவக ஊழியர்களிடம் மேனேஜர் தெரிவித்தார். இந்த வங்கி அரசியலமைப்பின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறது. உணவு என்பது ஒரு தனிப்பட்ட விருப்பம். இந்தியாவில், ஒவ்வொருவருக்கும் தங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. நாங்கள் யாரையும் மாட்டிறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தவில்லை. இது எங்கள் போராட்ட வடிவம் மட்டுமே என்றார்.
இந்தப் போராட்டத்திற்கு மாநில அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு இறைச்சிக்காக கால்நடை விற்பனையை கட்டுப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக, இதேபோன்ற பல மாட்டிறைச்சி போராட்டங்களை மாநிலம் கண்டது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள டெலிவரி ஊழியர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.
- ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் 2,000 டெலிவரி ஊழியர்கள் மின்சார இருசக்கர வாகனம் (e scooter) வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்குவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. டெலிவரி ஊழியர்கள் மானியம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.20,000 மானியம்: முக்கிய அம்சங்கள்
தமிழ்நாடு அரசு, இணையவழி சேவைகளில் பணிபுரியும் கிக் தொழிலாளர்களுக்காக (gig workers) ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், டெலிவரி ஊழியர்கள் புதிய மின்சார ஸ்கூட்டர் (e-scooter) வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். இந்த மானியத்திற்காக அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த மானியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
யாருக்கு மானியம்?
தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள டெலிவரி ஊழியர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும். இது Zomato, Swiggy, Zepto, Amazon, Flipkart போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்குப் பொருந்தும்.
பயனாளிகளின் எண்ணிக்கை
ஆரம்பகட்டமாக, இந்தத் திட்டத்தின் கீழ் 2,000 டெலிவரி ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
மானியம் எவ்வளவு?
ஒரு மின்சார ஸ்கூட்டர் வாங்க, தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த கூடுதல் தகவல்களை நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnuwwb.tn.gov.in -ல் காணலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
- ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் மூலம் டெலிவரி ஊழியர்களுக்கு வேலையில் மேலும் எளிமையாக செயல்பட உதவும்.
தமிழகத்தில் 2,000 உணவு டெலிவரி ஊழியர்கள் மின்சார இருசக்கர வாகனம் (e scooter) வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்குவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், சொமட்டோ, மீசோ போன்ற ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
நலவாரியத்தில் பதிவு பெற்ற டெலிவரி ஓட்டுநர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து மானியம் பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் டெலிவரி ஊழியர்களுக்கு வேலையில் மேலும் எளிமையாக செயல்பட உதவும். டெலிவரி ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
- மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது.
- தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.
வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகம் முழுக்கவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஏ.ஐ. வரவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கிலான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ். இந்த ஆண்டு அதன் உலகம் முழுவதிலும் இருந்து பணி புரியும் 12,261 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக 2 நாட்களில் பங்கு சந்தையில் ரூ .28,148 கோடியை அந்நிறுவனம் இழந்துள்ளது.
நேற்று மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது. தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.
இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.28,148.72 கோடி குறைந்து ரூ.11,05,886.54 கோடியாக உள்ளது.
- அந்த வீடியோவில் தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களுக்கு ஊழியர்கள் நடனமாடுகின்றனர்.
- இதை பார்த்து வெளிநாட்டு Client ஈர்க்கப்படுகிறார்.
வெளிநாட்டு Client தங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது, அவரை நடனமாடி வரவேற்ற இந்திய ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
அந்த வீடியோவில் தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களுக்கு ஊழியர்கள் நடனமாடுகின்றனர். இதை பார்த்து வெளிநாட்டு Client ஈர்க்கப்படுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, ஊழியர்கள் அலுவலகத்தில் நடனமாடி வெளிநாட்டு Client -ஐ வரவேற்க கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? நடனமாடாத ஊழியர்கள் பழிவாங்கப்படுகிறார்களா? என்று நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த மோசமான நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதுபாட்டில்கள் திருடு போனது குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
- ஜார்க்கண்டில் எலிகள் போதைப் பொருள் திருடியதாக குற்றம் சாட்டப்படுவது இது முதன்முறையல்ல.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 1 -ந் தேதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமலாக உள்ளது. இதுநாள்வரை கடைகள் ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த நிலையில், அதனை ஆன்லைன் குலுக்கல் முறையில் ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் அமலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து கலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் விற்பனை கணக்கில் வராதது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இது குறித்து அந்தக் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கூறிய பதில்தான் அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மதுபாட்டில்களின் மூடிகளை தின்றுவிட்டு மதுவை எலிகள் குடித்து விட்டதாக கூறினர். இந்த பதிலை கேட்ட அதிகாரிகளுக்கு மயக்கம் வந்துவிட்டது.
ஊழியர்கள் கூறியது பொய் என்பதை அறிந்த அதிகாரிகள் அந்த ஊழியர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து கலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி கூறுகையில்:-
மதுபாட்டில்களை எலிகள் குடித்ததா இல்லையா என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அரசு உங்களிடம் கொடுத்தது முழு மதுபாட்டில்களை அதேபோல் நீங்களும் எங்களிடம் முழு மது பாட்டில்களையும் ஒப்படையுங்கள் என கூறினார். காலியான அந்த மதுபாட்டில்களுக்கும் சேர்த்து பணத்தை செலுத்துமாறு உத்தரவிட்டார்.
மது பாட்டில்கள் காலியானதற்கு ஊழியர்கள் கூறிய பொய்யை ஏற்க முடியாத அதிகாரி இதென்ன முட்டாள்தனமான பதில் என ஊழியர்களை கடிந்துகொண்டார்.
மதுபாட்டில்கள் திருடு போனது குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இவையெல்லாம் அரசின் ஊழலை மறைக்கவே அரசு நடத்தும் நாடகம் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரதுல் ஷாத்தியோ குற்றம் சாட்டியுள்ளார்.சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, முக்கிய குற்றவாளிகளையும் எலிகளையும் கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜார்க்கண்டில் எலிகள் போதைப் பொருள் திருடியதாக குற்றம் சாட்டப்படுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் 10 கிலோ பாங்கு மற்றும் 9 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக புகார் வந்துள்ளது.
இந்நிலையில் எலி மதுகுடித்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்ற போது எலிகள் மதுபானத்தை குடித்தன என்ற அபத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிகாரிகளை கடிந்து கொண்ட நீதிபதி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மதுபானத்தை எலிகள் குடித்து விட்டதாக ஊழியர்கள் கூறிய பதிலால் அதிகாரிகள் தலையை பிய்த்துக் கொள்ளாத நிலையில் உள்ளனர்.
- கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
- நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், இந்த ஆண்டில் 4-வது முறையாக மீண்டும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. நேற்று ஏராளமானவர்களுக்கு பணிநீக்க நோட்டீசுகளை அனுப்பத் தொடங்கியது. எவ்வளவு பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த மே மாதத்தில் மேலும் 6 ஆயிரம் பேரும், கடந்த ஜூன் மாதம் 305 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. புளூம்பெர்க் நிறுவன அறிக்கையின்படி இந்த முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 9 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரியவருகிறது.
- கடந்த மாதம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
- இம்மாதமும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, AI-ஐ பயன்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் தேவையற்ற நிர்வாக ஊழியர்களை குறைத்து புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதாக கூறி கடந்த மாதம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்டனை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில், நேற்று 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
மாற்றமடைந்து வரும் சந்தையில் வெற்றி பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கடந்த மாதம் மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து இம்மாதமும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 2,28,000 முழுநேர ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 55% பேர் அமெரிக்காவில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீனாவின் மின்சார காரான ‘பைட்’ நிறுவன உற்பத்தி ஆலை பிரேசிலில் அமைந்துள்ளது.
- இந்த ஆலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
பிரேசிலியா:
சீனாவின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான 'பைட்' நிறுவன உற்பத்தி ஆலை பிரேசில் நாட்டின் சாவ் பவுலோ நகரில் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளில் சீன அதிகாரிகள் மட்டுமே பதவி வகித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சீன கார் நிறுவனத்தின் மீது தொழிலாளர்கள் நலச்சங்கம் பிரேசிலியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் சீன நிறுவனம் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், குறிப்பிட்ட பணி நேரத்தைவிட அதிக நேரம் பணிபுரிய கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சீன கார் நிறுவன வழக்கை சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரிக்க உள்ளது. அந்த நிறுவனத்தை நாட்டில் இருந்து முழுவதுமாக அகற்ற அரசு வக்கீல்கள் நீதிபதிகளைக் கேட்டு கொண்டுள்ளனர்.






