முன்னணி வாகன உற்பத்தி நிறுவனத்தில் இருந்து 13,000 ஊழியர்கள் பணிநீக்கம்

வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்தது. டெஸ்லா, பி.ஒய்.டி. போன்றவை ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின.
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனத்தில் இருந்து 13,000 ஊழியர்கள் பணிநீக்கம்
Published on

பெர்லின்:

உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று போஸ்.

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.

இதற்கிடையே, உலகளாவிய வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்தது.

இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பி.ஒய்.டி. போன்றவை ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின.

இந்நிலையில், போஸ் நிறுவனமும் தற்போது ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

அதன்படி, உலகம் முழுவதிலும் உள்ள அதன் கிளையில் இருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என போஸ் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com