search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Layoff"

    • முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 136 சதவீதம் அதிகம்.
    • போட்டியை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்க கார்ப்பரேட்களில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் Nike, 2024 ஆண்டை ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் துவங்கியுள்ளது.

    கடந்த மாதத்தில் மட்டும் 82 ஆயிரத்து 307 பேரை பணிநீ்கம் செய்வதாக அறிவித்து இருந்தது. இது அதற்கும் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 136 சதவீதம் அதிகம் ஆகும். இதோடு 2009 நிதி நெருக்கடி துவங்கியதில் இருந்து ஜனவரி மாத வாக்கில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பணிநீக்க நடவடிக்கையாக அமைந்தது.

    பெருந்தொற்று காலக்கட்டத்தில் அதிகளவில் ஆட்களை பணியமர்த்தியது மற்றும் வேறு பிரிவுகளில் முதலீடு செய்வது உள்ளிட்டவைகளை பணிநீக்கத்திற்கு காரணமாக Nike நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் Nike Inc. நிறுவனம் 2 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. பணிநீக்கத்தால் செலவீனங்களை குறைப்பதன் மூலம் சரிந்து வரும் விற்பனை மற்றும் போட்டியை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

    இந்த முறை ஆட்குறைப்பு நடவடிக்கையில் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • பணி நீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.
    • செலவீனங்களில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும்.

    பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் தனது விற்பனை, பொறியியல் பிரிவுகளில் பணியாற்றி வந்த 100-க்கும் அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. நிர்வாக ரீதியிலான பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தியதை அடுத்து பணி நீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.

    செலவீனங்களை குறைக்கும் நோக்கிலும், பணிகளை எளிமையாக்கும் நோக்கிலும் பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேடிஎம் பயன்படுத்த துவங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த செலவீனங்களில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று பேடிஎம் தெரிவித்து இருக்கிறது.

     


    முன்னதாக 2021-ம் ஆண்டு பேடிஎம் நிறுவனம் 500-இல் இருந்து 700 பேர் வரை பணிநீக்கம் செய்தது. அப்போது ஊழியர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை என குற்றம்சாட்டி பணிநீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டது. 

    • இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

    சர்வதேச அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் உள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் நிதி நெருக்கடி காரணமாக இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, இதுவரை நூற்றுக்கும் அதிமானோரை பணி நீக்கம் செய்துள்ளது.

    அந்த வகையில், பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போதைய பணி நீக்க நடவடிக்கை டிசம்பர் 31-ம் தேதி துவங்கும் என்றும் இதில் 235 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இரண்டு வார காலங்களில் பணி நீக்க நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

    "நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது," என இன்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    • பணி நியமனம் செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தோம்

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் பணியாற்றி வரும் தற்காலிக துப்புரவு பணியாளர்களில் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களை பணி நீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் அவர்களை பணி நியமனம் செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை கை விடுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்படாததால் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தற்காலிக தூய்மை பணியாளர்கள் கூறுகையில்,

    கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தோம். தற்போது திடீரென ஆட்குறைப்பு என்ற பெயரில் எங்களை வேலைக்கு வர வேண்டாம் என சொன்னால் எங்களின் குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    எனவே தூய்மைப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது. தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என்றனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தூய்மைபணியாளர்கள் ஸ்டிரைக் காரணமாக பல்லடம் நகராட்சி பகுதியில் இன்று காலை குப்பைகள் அகற்றும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.
    • மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட்டுள்ள தொகை பற்றிய விவரங்கள் வெளியானது.

    மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல கட்டங்களாக நடைபெற்று வரும் பணிநீக்க நடவடிக்கையில் உலகம் முழுக்க பணியாற்றி வந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், மெட்டா நிறுவனம் 2023 காலாண்டு முடிவுகளை பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற அறிக்கையில் சமர்பித்து இருக்கிறது. இதில் மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட்டுள்ள தொகை பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டு உள்ளது என்ற விவரங்களை மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி மெட்டா நிறுவனம் பணிநீக்க ஊதியம் மற்றும் தனிப்பட்ட செலவீனங்களுக்கு மட்டும் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் கோடி) செலவாகும் என்று அறிவித்து இருக்கிறது.

    மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இதில் பணிநீக்க ஊதியம், பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் கொடுப்பதாக அறிவிக்கப்பட்ட இதர பலன்களும் அடங்கும்.

    பணிநீக்க நடவடிக்கைக்கு பெரும் தொகை செலவிடப்பட்டு இருக்கும் நிலையிலும், மெட்டா நிறுவன வருவாயில் இது நல்ல பலன்களை ஏற்படுத்தி இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கைகள் காரணமாக 2023 முதல் காலாண்டில் மட்டும் மெட்டா நிறுவன வருவாய் 28.65 பில்லியன் டாலர்கள் ஆகும். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மூன்று சதவீதம் அதிகம் ஆகும். வருடாந்திர அடிப்படையில் இது ஆறு சதவீதம் அதிகம் ஆகும்.

    "2022 ஆண்டில் நிறுவனத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய திட்டங்கள் மற்றும் வியாபார கவனம் உள்ளிட்டவைகளை மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். மார்ச் 31, 2023 வரையிலான காலக்கட்டத்தில் 2022 பணிநீக்க நடவடிக்கைகளை நிறைவு செய்து, டேட்டா செண்டர் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்," என்று மெட்டா தெரிவித்து உள்ளது.

    • இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் வேலை இழந்துள்ளனர்.
    • பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.

    அமேசான் ஊழியர்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளவில் பல்வேறு ஊழியர்கள் வேலையிழந்த நிலையில், இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கித் தவிக்கின்றனர்.

    இந்தியாவில் எத்தனை ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் இந்தியாவில் வேலையிழந்துள்ளனர்.

     

    ஒவ்வொரு பிரிவில் இருந்தும் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜேசியின் ஆரம்பக்கட்ட பணிநீக்க திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.

    பின் மார்ச் மாதத்தில் அமேசான் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 9 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஆண்டு ஜேசி அறிவித்தார். சீரற்ற பொருளாதார நிலை காரணமாகவே பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 

    • சேலம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டதாக தெரிகிறது.
    • இதனால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆணையாளர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.

    இது குறித்து ஆணையாளர் கிறிஸ்துராஜிடம் கேட்ட போது சுகாதார ஆய்வாளர் மீது பல்வேறு புகார்கள் வந்தது. அதன்பேரில் அலுவலர்கள் மூலம் அவரை பற்றி முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையின்படி சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்றார்.

    சஸ்பெண்டு செய்யப்பட்ட சித்தேஸ்வரன் மாநகராட்சி தூய்மைப்பாணியாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் மனம் உடைந்த அந்த பெண் தற்கொலைக்கு முயன்ரதாகவும் தெரிகிறது, இதன் காரணமாகவே அவர் சஸ்பெண்டு செய்யப் பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • சுவிட்சர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள கூகுள் நிறுவன ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொழிற்சங்க உறுப்பினர்கள், கூகுள் நிறுவனம் பிரச்சினைகளை தவிர்க்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.

    இங்கிலாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள், அந்நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு உலகம் முழுக்க சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது. இதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் உள்ள கூகுள் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்து கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநீக்கம் தொடர்பான பிரச்சினைகளை கூகுள் நிறுவனம் தவிர்த்து விட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கிலாந்தின் பாங்ராஸ் சதுரங்க அலுவலகத்தின் வெளியில் போராட்டம் நடத்தப்பட்டது.

     

    சர்வேதச பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவர் என கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அலுவலகத்தில் பணியாற்றி வருவோரில் நூற்றுக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனம் ஊழியர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

    எனினும், இது போன்ற பேச்சுவார்த்தைகளில் தொழிற்சங்க நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளாமல் இருப்பதை கூகுள் உறுதிப்படுத்தி வருகிறது. ஊழியர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. முன்னதாக சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
    • சமீபத்தில் தான் மெட்டா நிறுவனத்தில் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர். சந்தை நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன.

    இந்த வரிசையில் மார்க் ஜூக்கர்பர்க் மெட்டா பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறை எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனரோ, அதே எண்ணிக்கையில் மீண்டும் பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக விரைவில் சுமார் 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய பணி நீக்க நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்றும் மார்க் ஜூக்கர்பர்க் தனது மூன்றாவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்புக்கு செல்லும் முன் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் மார்க் ஜூக்கர்பர்க் 2023 ஆண்டு நிறுவனத்திற்கு சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

    ஏற்கனவே ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 13 சதவீதம், கிட்டத்தட்ட 11 ஆயிரம் ஊழியர்களை கடந்த ஆண்டு மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்து இருந்தது. இவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பணியாற்றி வந்தனர். நிதி நெருக்கடி மற்றும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

    ×