என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிநீக்கம்"

    • 2025 ஆம் ஆண்டில் இதுவரை, 231 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1,13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
    • இந்த பணிநீக்கங்கள் அமேசானின் 31 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரியதாகும்.

    கடந்த மாதம் இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் அறிவித்த மிகப்பெரிய பணிநீக்கங்கள் குறித்த முக்கிய விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

    நிறுவனம் சுமார் 14,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில், இந்த பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது மென்பொருள் பொறியாளர்கள்தான் என்று தெரிவித்துள்ளது.

    அதாவது, 14,000பேரில் 10 இல் 4 பேர் (சுமார் 1800 க்கும் அதிகமான) பொறியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டனர்.

    பொறியாளர்களைத் தவிர, கேமிங், விளம்பரங்கள் மற்றும் பரிசோதனைத் துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த பணிநீக்கங்கள் அமேசானின் 31 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரியதாகும்.

    பணிநீக்கங்களுக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம் பொருளாதாரம் அல்லது செயற்கை நுண்ணறிவு அல்ல என்று அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜெஸ்ஸி கூறினார்.

    இது நிறுவனத்தின் கலாச்சாரத்துடன் தொடர்புடைய மாற்றம் என்று அவர் தெரிவித்தார். நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் ஆக மாற்றுவது, தேவையற்ற துறைகளைக் குறைப்பது மற்றும் வேகமாக வேலை செய்வது எங்கள் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

    2025 ஆம் ஆண்டில் இதுவரை, 231 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1,13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.  

    • அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.
    • ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு காரணமாக கூறப்படுகிறது.

    உலகெங்கிலும் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 218 நிறுவனங்கள் 1,12,700 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.

    அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.

    செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன. 

    • மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது

    ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்ததை கிராம மக்கள் பள்ளி ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பள்ளி முதல்வர் ஆசிரியரை பணிநீக்கம் செய்தார்.

    முன்னதாக, ஆசிரியர் தனது மொபைல் எண்ணை ஒரு மாணவியின் நோட்டில் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் அவரைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்க அமேசான் நிறுவனம் முடிவு
    • 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அமேசான் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும்.

    அமேசான் நிறுவனம் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது.

    ஒட்டுமொத்த நிறுவனச் செலவுகளை குறைக்கவும், கொரோனா காலத்தில் அதிகப்படியான ஆன்லைன் தேவை காரணமாக கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்கவும் இம்முடிவு எடுக்கப்படுவதாக அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அமேசான் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும்.

    கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேலைக்கு எடுக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் வேலை பார்த்தனர். அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்பு பல ஆயிரக்கணக்கான ஊழியயர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • உங்களில் பலர் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன்.
    • இன்று நாம் நிற்கும் அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன.

    சத்யா நாதெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட், இந்த ஆண்டு 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து தொழில்நுட்ப உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணம், நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) நோக்கி விரைவாக மாறுவதே என்று தலைமை நிர்வாக அதிகாரி நாதெல்லா தெரிவித்துள்ளார்.

    ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய செய்தியில், "வேறு எதற்கும் முன், என்னை மிகவும் பாதித்து வரும் விஷயத்தைப் பற்றியும், உங்களில் பலர் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன்.

    இந்த முடிவுகள் நாம் எடுக்க வேண்டிய மிகக் கடினமான முடிவுகளில் ஒன்றாகும். வெளியேறியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவர்களின் பங்களிப்புகள் ஒரு நிறுவனமாக நாம் யார் என்பதை வடிவமைத்துள்ளன, இன்று நாம் நிற்கும் அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன. அதற்காக, நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 9,000 ஊழியர்களையும் சேர்த்து, இந்த ஆண்டு 15,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மைக்ரோசாப்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இந்த கடினமான முடிவுகள் தவறல்ல என்று நாதெல்லா கூறுகிறார்.

    இந்த பணிநீக்கங்களால் மைக்ரோசாப்டின் கேமிங் பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மைக்ரோசாப்ட் AI தொழில்நுட்பத்தில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனம் AI உள்கட்டமைப்பில் 80 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இலக்கு வைத்துள்ளது. இந்த முதலீடுகள் AI தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றை அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தப்படும்.    

    • இந்தியாவிலும் பல்வேறு நாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களைப் பாதிக்கும்.
    • டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிருத்திவாசன் தெரிவித்தார்.

    இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளது.

    தொழில்நுட்பத்தில் ஏற்படும் விரைவான மாற்றங்களைச் சமாளிக்க, அதன் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை, அதாவது சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

    இந்தியாவிலும் பல்வேறு நாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களைப் பாதிக்கும். பணிநீக்க செயல்முறை ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிருத்திவாசன், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தான் எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறினார். இது நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

    புதிய தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

    "புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக வேலை செய்யும் முறைகள் மாறி வருகின்றன. எதிர்காலத்திற்கு நாம் தயாராகவும், முன்கூட்டியே செயல்படவும் வேண்டும்" என்று அவர் கூறினார்.  

    • லாபத்தை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் எக்ஸ்பாக்ஸ் பிரிவு மீது விழுந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
    • மைக்ரோசாஃப்ட் தனது கேமிங் பிரிவு மற்றும் பிற வணிகங்களில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் அடுத்த வாரம் பெரும் பணிநீக்கங்களை மைக்ரோசாப்ட் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

    மைக்ரோசாப்ட்டின் நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 69 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆக்டிவிஷன் பிலிசார்ட் கையகப்படுத்தலுக்குப் பிறகு லாபத்தை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் எக்ஸ்பாக்ஸ் பிரிவு மீது விழுந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

    ப்ளூம்பெர்க் மற்றும் தி வெர்ஜ் அறிக்கைகளின்படி, எக்ஸ்பாக்ஸ் பிரிவில் உள்ள மேலாளர்கள் கணிசமான பணிநீக்கங்களை எதிர்கொள்கின்றனர்.

    டியூக் நியூகெமின் இணை நிறுவனர் மற்றும் அனுபவம் வாய்ந்த கேமிங் துறை நிபுணரான ஜார்ஜ் புரூசார்ட், 1000 முதல் 2000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும், இது எக்ஸ்பாக்ஸ் பணியாளர்களில் சுமார் 10% பேரைப் பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

    சில ஸ்டுடியோக்கள் முற்றிலுமாக மூடப்படலாம் என்றும் கூறப்படுவதால் டெவலப்பர்கள் மத்தியில் மிகுந்த கவலை எழுந்துள்ளது.

    இது கடந்த 18 மாதங்களில் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் நடைபெறும் நான்காவது பெரிய பணிநீக்க நடவடிக்கையாகும்.

    முன்னதாக மே மாதம், மைக்ரோசாப்ட் தனது கேமிங் பிரிவு மற்றும் பிற வணிகங்களில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த மாத தொடக்கத்திலும் 300க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    • பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை முனீர் அகமது மறைத்துள்ளார்.
    • விசா காலத்தை மீறி அப்பெண்ணை இந்தியாவில் அவர் தங்க வைத்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில், பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதை மறைத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் முனீர் அகமது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு மே 24 ஆம் தேதி முனீர் அகமது, பாகிஸ்தானை சேர்ந்த மேனல் கான் என்ற பெண்ணை வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இதனை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு தெரியாமல் மறைத்துள்ளார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது.

    இது தொடர்பாக பேசிய CRPF செய்தித் தொடர்பாளராக டிஐஜி தினகரன், "பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை முனீர் அகமது மறைத்துள்ளார். மேலும், விசா காலத்தை மீறி அப்பெண்ணை இந்தியாவில் அவர் தங்க வைத்துள்ளார். இதற்காக முனீர் அகமது உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார். 

    • கடந்த ஜனவரி மாதம் இத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
    • இந்த துறையில் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

    அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

    அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்நாட்டு வருவாய் சேவை துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த துறையில் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

    இதற்கிடையே அதிபர் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் பல்வேறு அரசு துறைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கடந்த ஜனவரி மாதம் இத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தலைமை மனிதவள அதிகாரி, செயல் ஆணையர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

     ஆனால் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அவர்களில் பலா் மீண்டும் பணியில் சேர்ந்தனர். இந்தநிலையில் தற்போது மேலும் 20 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

    இதன்மூலம் 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இதுகுறித்த அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இ-மெயிலில் அனுப்பப்பட்டு உள்ளன. அதேசமயம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது அடுத்த மாதத்தின் (மே) நடுப்பகுதியில் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

    இதற்கிடையே டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்கை எதிர்த்து அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    • உலகளவிலான நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.
    • இது அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும்.

    ஆண்டுதோறும் 2.1 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்கும் நோக்கத்தில் இந்தாண்டு 14,000 மேலாளர் பதவிகளை நீக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இது அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும். அதாவது உலகளவிலான நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.

    இந்த வேலை குறைப்பு அமேசான் வலை சேவைகள் (AWS), சில்லறை விற்பனை செயல்பாடுகள் மற்றும் மனித வளங்கள் உள்ளிட்ட பிரிவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

    கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேளைக்கு எடுக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் வேலை பார்த்தனர். அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்பு பல ஆயிரக்கணக்கான ஊழியயர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.
    • ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. உலக புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.

    இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார். தற்போது கேத்ரின் கால்வின் உள்ளிட்ட 23 பேரை நாசாவில் இருந்து பணிநீக்கம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நாசாவில் வானிலை மாறுபாடு என்றும் துறை தேவையில்லாதது என டிரம்ப் ஏற்கனவே கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • 28 பேர் பணிநீக்கம் செய்ததை கண்டித்து அனைத்து ஊழியர்களும் கடந்த 50 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • மற்றவர்கள் வேலையில் நேற்று இரவு பணியில் சேர்ந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேர் பணிநீக்கம் செய்ததை கண்டித்து அனைத்து ஊழியர்களும் கடந்த 50 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தும் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை. ஆகையால் 28 பேரை தவிர மற்ற ஊழியர்கள் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு மற்றவர்கள் வேலையில் நேற்று இரவு பணியில் சேர்ந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×