என் மலர்
நீங்கள் தேடியது "Microsoft"
- 2025 ஆம் ஆண்டில் இதுவரை மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகள் 23% உயர்ந்துள்ளன.
- கடந்த 3 ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் பங்கு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சத்ய நாதெல்லா பொறுப்பு வகித்து வருகிறார்.
2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றது முதல் மைக்ரோசாப்ட் வியாபார வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதோடு லின்க்டுஇன், நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் செனிமேக்ஸ் போன்ற நிறுவனங்களை மைக்ரோசாப்ட் வசதம் கையகப்படுத்தினார்.
தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்கும் முன் சத்ய நாதெல்லா அந்நிறுவனத்தின் மென்பொருள் பிரிவுகளில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். இவர் இயங்குதளங்கள், கிளவுட் கம்ப்யூடிங் போன்ற பிரிவுகளில் பணியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா 2025 நிதியாண்டில் $96.5 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.846 கோடி) வருவாமணம் ஈட்டியுள்ளார்.
இது கடந்த ஆண்டு அவர் ஈட்டிய $79.1 மில்லியனிலிருந்து (இந்திய மதிப்பில் ரூ.694 கோடியிலிருந்து) 22% அதிகமாகும்.
ரூ.846 கோடி வருமானத்தில் ரூ.737 கோடி பங்குகளில் இருந்தும் 83 கோடி ஊக்கத்தொகை மூலமாகவும் ரூ.22 கோடி அடிப்படை சம்பளம் மூலமாகவும் கிடைத்துள்ளது. சத்யா நாதெல்லாவின் வருமானத்தில் 90 சதவீதம் பங்குகளில் இருந்து மட்டுமே கிடைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் இதுவரை மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகள் 23% உயர்ந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் பங்கு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனால் தான் சத்யா நாதெல்லாவின் வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
- உங்களில் பலர் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன்.
- இன்று நாம் நிற்கும் அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன.
சத்யா நாதெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட், இந்த ஆண்டு 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து தொழில்நுட்ப உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணம், நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) நோக்கி விரைவாக மாறுவதே என்று தலைமை நிர்வாக அதிகாரி நாதெல்லா தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய செய்தியில், "வேறு எதற்கும் முன், என்னை மிகவும் பாதித்து வரும் விஷயத்தைப் பற்றியும், உங்களில் பலர் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன்.
இந்த முடிவுகள் நாம் எடுக்க வேண்டிய மிகக் கடினமான முடிவுகளில் ஒன்றாகும். வெளியேறியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் பங்களிப்புகள் ஒரு நிறுவனமாக நாம் யார் என்பதை வடிவமைத்துள்ளன, இன்று நாம் நிற்கும் அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன. அதற்காக, நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 9,000 ஊழியர்களையும் சேர்த்து, இந்த ஆண்டு 15,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மைக்ரோசாப்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த கடினமான முடிவுகள் தவறல்ல என்று நாதெல்லா கூறுகிறார்.
இந்த பணிநீக்கங்களால் மைக்ரோசாப்டின் கேமிங் பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் AI தொழில்நுட்பத்தில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனம் AI உள்கட்டமைப்பில் 80 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இலக்கு வைத்துள்ளது. இந்த முதலீடுகள் AI தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றை அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தப்படும்.
- சுதந்திரத்தைப் பயன்படுத்தும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்கின்றன
- சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு புதிய தேசபக்தி தேவை.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழில்நுட்ப வேலைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இந்தியர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
வாஷிங்டனில் நடந்த AI மாநாட்டில் பேசிய அவர், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
"நாம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும். அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அமெரிக்கர்கள் தாங்கள் கவனிக்கப்படவில்லை என்று உணர்கிறார்கள்.
நாட்டில் கிடைக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்கின்றன. எனது நிர்வாகத்தின் போது இந்தக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன்" என்று தெரிவித்தார்.
பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. இந்தியர்களை வேலைகளில் அமர்த்துகின்றன என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், "இங்குள்ள மக்களின் வாய்ப்புகளைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. நீங்கள் அமெரிக்கர்களை புறக்கணிக்கிறீர்கள். AI பந்தயத்தில் வெற்றி பெற, சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு புதிய தேசபக்தி தேவை. இங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டை முதன்மைப்படுத்த வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்தார்.
- 2023 ஆம் ஆண்டிடுக்குப்பின் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மூடியுள்ளது.
உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூடியுள்ளது. உலகளாவிய மறுசீரமைப்பு, கிளவுட்-பேஸ்டு மாற்றம் (cloud-based) போன்ற காரணத்திற்காக இந்த நவட்டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட்டின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டு வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
- கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
- நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், இந்த ஆண்டில் 4-வது முறையாக மீண்டும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. நேற்று ஏராளமானவர்களுக்கு பணிநீக்க நோட்டீசுகளை அனுப்பத் தொடங்கியது. எவ்வளவு பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த மே மாதத்தில் மேலும் 6 ஆயிரம் பேரும், கடந்த ஜூன் மாதம் 305 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. புளூம்பெர்க் நிறுவன அறிக்கையின்படி இந்த முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 9 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரியவருகிறது.
- லாபத்தை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் எக்ஸ்பாக்ஸ் பிரிவு மீது விழுந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
- மைக்ரோசாஃப்ட் தனது கேமிங் பிரிவு மற்றும் பிற வணிகங்களில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் அடுத்த வாரம் பெரும் பணிநீக்கங்களை மைக்ரோசாப்ட் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட்டின் நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 69 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆக்டிவிஷன் பிலிசார்ட் கையகப்படுத்தலுக்குப் பிறகு லாபத்தை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் எக்ஸ்பாக்ஸ் பிரிவு மீது விழுந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ப்ளூம்பெர்க் மற்றும் தி வெர்ஜ் அறிக்கைகளின்படி, எக்ஸ்பாக்ஸ் பிரிவில் உள்ள மேலாளர்கள் கணிசமான பணிநீக்கங்களை எதிர்கொள்கின்றனர்.
டியூக் நியூகெமின் இணை நிறுவனர் மற்றும் அனுபவம் வாய்ந்த கேமிங் துறை நிபுணரான ஜார்ஜ் புரூசார்ட், 1000 முதல் 2000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும், இது எக்ஸ்பாக்ஸ் பணியாளர்களில் சுமார் 10% பேரைப் பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
சில ஸ்டுடியோக்கள் முற்றிலுமாக மூடப்படலாம் என்றும் கூறப்படுவதால் டெவலப்பர்கள் மத்தியில் மிகுந்த கவலை எழுந்துள்ளது.
இது கடந்த 18 மாதங்களில் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் நடைபெறும் நான்காவது பெரிய பணிநீக்க நடவடிக்கையாகும்.
முன்னதாக மே மாதம், மைக்ரோசாப்ட் தனது கேமிங் பிரிவு மற்றும் பிற வணிகங்களில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த மாத தொடக்கத்திலும் 300க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- கடந்த மாதம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
- இம்மாதமும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, AI-ஐ பயன்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் தேவையற்ற நிர்வாக ஊழியர்களை குறைத்து புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதாக கூறி கடந்த மாதம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்டனை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில், நேற்று 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
மாற்றமடைந்து வரும் சந்தையில் வெற்றி பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கடந்த மாதம் மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து இம்மாதமும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 2,28,000 முழுநேர ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 55% பேர் அமெரிக்காவில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- Azure ஹார்டுவேர் சிஸ்டம்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் பொறியாளரான ஜோ லோபஸ் அவரை இடைமறித்தார்.
- ட் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை இனரீதியாக அழிக்க உதவும் போது அமைதியாக இருக்க முடியாது என்று லோபஸ் கூறினார்.
காசா மீது தாக்குதல் நடந்த இஸ்ரேல் அரசுக்கு தங்கள் நிறுவனத்தின் ஏஐ மூலம் உதவி செய்வதை மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் காசாவில் இனப்படுகொலையை குறித்து கேள்வி எழுப்பி மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவர் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் உரையை இடைமறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திங்களன்று மைக்ரோசாப்ட் பில்ட் நிகழ்வில் நாதெல்லா முக்கிய உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
உரையின் போது, மைக்ரோசாப்டின் Azure ஹார்டுவேர் சிஸ்டம்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் பொறியாளரான ஜோ லோபஸ் அவரை இடைமறித்து கேள்வி எழுபத் தொடங்கினார். மைக்ரோசாப்ட் பாலஸ்தீனியர்களை எப்படிக் கொல்கிறது என்பதைக் காட்ட முடியுமா? இஸ்ரேலிய போர்க்குற்றங்களை Azure எவ்வாறு ஆதரிக்கிறது என்பதைக் காட்ட முடியுமா? என்று அவர் கேள்வி கேட்டார்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்புப் அதிகாரிகள் லோபஸை அங்கிருந்து அகற்றினர். நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், மைக்ரோசாப்ட் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை இனரீதியாக அழிக்க உதவும் போது அமைதியாக இருக்க முடியாது என்று லோபஸ் கூறினார்.
- காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது.
- இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், காசா போரில் இஸ்ரேல் ராணுவத்துக்கு AI மூலம் உதவியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது.
காசாவில் நடந்த போரின் போது இஸ்ரேலிய இராணுவத்திற்கு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை விற்றதாகவும், இஸ்ரேலிய பணயக்கைதிகளைக் கண்டுபிடித்து மீட்பதற்கான முயற்சிகளுக்கு உதவியதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
ஆனால், அதே சமயம் காசாவில் உள்ள மக்களை தாக்குவதற்காக AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு நாட்டிற்கு இடையேயான போரில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன
முன்னதாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வருகிறது என்று குற்றம் சஷ்டி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்கடனை சேர்ந்தவர்கள் ஆவர்.
- இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டாடுகிறது.
ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கம் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று தேவையற்ற நிர்வாக ஊழியர்களை குறைத்து புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதாக கூறியது. இதனால் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் உறுதியாக கூறவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க ஊடகத்தின் அறிக்கையின் படி, சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்கடனை சேர்ந்தவர்கள் ஆவர்.
மாற்றமடைந்து வரும் சந்தையில் வெற்றி பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதன் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு வணிகங்களில் வலுவான செயல்திறன் காரணமாக அந்நிறுவனம் வலுவாக உள்ளது.
இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டாடுகிறது. 2022 ஆம் ஆண்டு ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டபோது தொழில்நுட்பத்துறை பெரும் பாதிப்படைந்தது. ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இரட்டிப்பாக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
- கோவிட் ஊரடங்கு காலத்தில் ஸ்கைப் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
- மைக்ரோசாப்ட் நிறுவனம், மே 5 ஆம் தேதி முதல் ஸ்கைப் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
2003 முதல் இரண்டு தசாப்தங்களாக வீடியோ அழைப்பு சேவைகளை வழங்கி வந்த மைரோசாப்ட் உடைய ஸ்கைப் சேவைகள் முடிவுக்கு வருகின்றன.
கொரோனா காலத்தில் இந்த தொழில்நுட்ப சேவை மிகவும் பிரபலமானது. கோவிட் ஊரடங்கு காலத்தில் பல ஊழியர்களாலும் வணிகங்களாலும் ஸ்கைப் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும், கோவிட்-க்குப் பிறகு பயனர் வரவேற்பு சரிவு, ஜூம், கூகிள் மீட் மற்றும் வாட்ஸ்அப் போன்ற போட்டியாளர்கள், மைக்ரோசாப்ட் அதன் தொடர்பு தளங்களை ஒருங்கிணைப்பது போன்ற காரணங்களால், ஸ்கைப் அதன் சேவைகளை நிறுத்த முடிவு செய்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், மே 5 ஆம் தேதி முதல் ஸ்கைப் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் Office 365 இன் ஒரு பகுதியாக இருக்கும் Microsoft Teams-ஐ நோக்கி பயனர்களை திருப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. Teams, செய்தி அனுப்புதல் மற்றும் வீடியோ அழைப்புகள் போன்ற பிற சேவைகளுக்கான முதன்மை தளமாக உள்ளது.
Skype-லிருந்து Teams-க்கு மாறுவதற்கு மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு அவகாசம் அளித்துள்ளது. மைக்ரோசாப்ட் chat ஹிஸ்டரி மற்றும் தொடர்புகளை டீம்ஸ்க்கு தடையின்றி மாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளது. ஸ்கைப்பை விட டீம்ஸ் மிகவும் நவீனமான, ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குகிறது என்பதை மைக்ரோசாப்ட் தெளிவுபடுத்தியுள்ளது.
- அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
- பாலஸ்தீனிய ஆதரவு கொண்ட மைக்ரோசாப்ட் ஊழியர்கள் கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வருவதற்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அப்போது பாலஸ்தீனிய ஆதரவு கொண்ட ஊழியர்கள் கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர்.
மைக்ரோசாப்ட் AI இன் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா சுலேமான் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊழியர் "முஸ்தபா, உங்களுக்கு வெட்கமாக இல்லையா" என்று கூச்சலிட்டார்.
அப்போது மற்றொரு ஊழியர் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா அவர்களே, "உங்களுக்கு வெட்கமாக இல்லையா.. நீங்கள் அனைவரும் நயவஞ்சகர்கள்" என்று கூச்சலிட்டார்.
காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியபோது இலக்குகளை குறிவைத்து தாக்க மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்ஏஐ ஆகியவற்றின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.






