என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நீக்கம்"

    • அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது.
    • நீக்கப்பட்ட ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவோ அல்லது வெளியேறவோ ஜனவரி 20-ந் தேதி கடைசிநாள் என்று தெரிவித்துள்ளது.

    ஐபோன் உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    இந்நிலையில், தற்போது, தனது விற்பனை பிரிவில் பணியாற்றும் டஜன் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நேரடி விற்பனையில் ஈடுபடாமல், மூன்றாம் தரப்பு மூலம் விற்பனையில் ஈடுபட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக ஊழியர்கள் சந்தேகிக்கிறார்கள்.

    அதை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம், அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவோ அல்லது வெளியேறவோ ஜனவரி 20-ந் தேதி கடைசிநாள் என்று தெரிவித்துள்ளது.

    மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலர் நிறுவனத்தின் 20 முதல் 30 ஆண்டுகள் பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தாண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தியது.
    • ஏற்கனவே வருடக் கணக்கில் வேலை செய்து வந்தவர்களை பணிநீக்கம் செய்தனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பதால் நன்மை ஏற்பட்டாலும், பெரும்பாலும் தீங்காகவே அமைகிறது. அந்த வகையில், AI தொழில் நுட்பம் வந்த பிறகு பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    அந்த வகையில், மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

    நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் AI பிரிவு தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங் தெரிவித்துள்ளார்.

    மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் AI உள்கட்டமைப்பு அலகுகள், அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவு (FAIR) மற்றும் பிற தயாரிப்பு தொடர்பான பதவிகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    இந்தாண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தி, ஏற்கனவே வருடக் கணக்கில் வேலை செய்து வந்தவர்களை பணிநீக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலையில் இளம்பெண்ணை 2 காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

    திருவண்ணாமலை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான காவலர்கள் இருவரும் சஸ்பெண்ட் ஆன நிலையில் தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

    • செல்போனில் வீடியோ எடுத்த பக்தர்கள் அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.
    • சபரிமலையின் புனிதத்தை மீறியதாக போலீஸ் அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை ஆவணி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    இந்தநிலையில் கோவிலில் சன்னிதானத்திற்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஷ் என்ற போலீஸ் அதிகாரி, காலில் காலணி அணிந்துகொண்டு நின்றார். இதனை செல்போனில் வீடியோ எடுத்த பக்தர்கள் சிலர், அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.

    சபரிமலையின் புனிதத்தை மீறியதாக போலீஸ் அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது. அதுகுறித்து சபரிமலை காவல்துறையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஜித் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில் போலீஸ் அதிகாரி ராஜேஷ் சன்னிதான பகுதியில் காலணி அறிந்து நின்றது உறுதியானது. இதையடுத்து அவர் சபரிமலை பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து முகாம் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டார்.

    • கடந்த வருடம் 15 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியது.
    • அமெரிக்காவின் ஒரேகான் அலுவலகத்தில் மட்டும் 2,392 பேர் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.

    உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல் ஜூலை மாதத்தில் 5 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. மறுசீரமைப்பு திட்டம், நிதி இழப்பை சரி செய்தல் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தள்ளது.

    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா, ஒரேகான், அரிசோனா, டெக்சாஸ் மாகாணங்களில் வேலைப் பார்க்கும் பொறியாளர்கள், மூத்த தலைவர்கள் (Senior Leaders), அலுவலக ஸ்டாஃப்கள் வேலை இழப்பை சந்திக்க இருக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு 15 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் தற்போது 5 ஆயிரம் பேரை நீக்குகிறது.

    ஒரேகான் அலுவலகத்தில் இருந்து மட்டும் 2,392 பேரை நீக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக 500 பேரை நீக்க திட்டமிட்ட நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. கலிபோர்னியா அலுவலகத்தில் 1,935 பேரை நீக்குகிறது.

    சிப் டிசைன், கிளவுட் சாஃப்ட்வேர் (Cloud Software), யுனிட் தயாரிப்பு பிரிவில் உள்ள பொறியாளர்கள் இந்த வேலை நீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.

    • கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
    • நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டன்:

    கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், இந்த ஆண்டில் 4-வது முறையாக மீண்டும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. நேற்று ஏராளமானவர்களுக்கு பணிநீக்க நோட்டீசுகளை அனுப்பத் தொடங்கியது. எவ்வளவு பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

    முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த மே மாதத்தில் மேலும் 6 ஆயிரம் பேரும், கடந்த ஜூன் மாதம் 305 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. புளூம்பெர்க் நிறுவன அறிக்கையின்படி இந்த முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 9 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரியவருகிறது.

    • கடந்த மாதம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
    • இம்மாதமும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, AI-ஐ பயன்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் தேவையற்ற நிர்வாக ஊழியர்களை குறைத்து புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதாக கூறி கடந்த மாதம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்டனை சேர்ந்தவர்கள்.

    இந்த நிலையில், நேற்று 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

    மாற்றமடைந்து வரும் சந்தையில் வெற்றி பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கடந்த மாதம் மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து இம்மாதமும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 2,28,000 முழுநேர ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 55% பேர் அமெரிக்காவில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்கடனை சேர்ந்தவர்கள் ஆவர்.
    • இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டாடுகிறது.

    ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கம் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று தேவையற்ற நிர்வாக ஊழியர்களை குறைத்து புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதாக கூறியது. இதனால் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் உறுதியாக கூறவில்லை.

    இந்த நிலையில், அமெரிக்க ஊடகத்தின் அறிக்கையின் படி, சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்கடனை சேர்ந்தவர்கள் ஆவர்.

    மாற்றமடைந்து வரும் சந்தையில் வெற்றி பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இரண்டு வாரங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதன் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு வணிகங்களில் வலுவான செயல்திறன் காரணமாக அந்நிறுவனம் வலுவாக உள்ளது.

    இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டாடுகிறது. 2022 ஆம் ஆண்டு ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டபோது தொழில்நுட்பத்துறை பெரும் பாதிப்படைந்தது. ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இரட்டிப்பாக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது.

    • உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • 56 ஊழி யர்களை பணி நீக்கம் செய்து சுங்கச்சாவடி நிர்வாகம் திடீரென அறிவித்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி மற்றும் திருமந்துறை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. இந்த சுங்கச்சா வடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு நிலைகளில் பணி ரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாஸ்ட் ட்ரேக் என்னும் நவீன முறை அறிமுகப்ப டுத்தப்பட்டு, சுங்க கட்டணம் வசூல் செய்துவருகின்றனர். இதனால் ஆட்களை குறைப்ப தற்காக நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால், 10 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரிந்து வந்த 56 ஊழி யர்களை பணி நீக்கம் செய்து சுங்கச்சாவடி நிர்வாகம் திடீரென அறிவித்தது. இதை கண்டித்து கடந்த அக்டோபர் மாதம் 01-ந் தேதி முதல் தொடர்ந்து இன்று 60-வது நாளாக பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் மாநில, மத்திய அரசுகள் இது வரை இவர்களின் போராட்ட த்தைப் பற்றி சிறிதும் கவலை ப்படாமல் செவி சாய்க்கா மல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செய லாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான குமரகுரு தலைமையில், முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், உளுந்தூ ர்பேட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு சுங்க ச்சாவடி ஊழியர்க ளுக்கு ஆதரவாகவும், மீண்டும் அவர்களை பணியில் அமர்த்த வேண்டியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு
    • 2 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மன்னர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவிக்கு கவுர விரிவுரையாளர் முத்துக்குமரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முத்துக்குமரனை கல்லூரியில் மாணவர்கள் சிலர் தாக்க முயன்றதுடன், அவரது இருசக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் திருச்செல்வத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உதவி பேராசிரியர்கள்  6பேர் கொண்ட விசாரணை குழுவை கல்லூரி முதல்வர் அமைத்தார். அந்த குழு அளித்த விசாரணை அறிக்கையின்படி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் செயல்பட்டதாக கவுரவ விரிவுரையாளர்கள் முத்துக்குமரன், கலையரசன் ஆகியோரை கல்லூரி முதல்வர் திருச்செல்வம் பணி நீக்கம் செய்தார்.


    • தனியாக அழைத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
    • அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ததில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2019-20-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுரை ஆவினில் மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள் என 91 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி ஆகிய இடங்களிலும் ஆவினில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் முறையாக தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பலருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்படவில்லை.

    ''முறையாக விண்ணப்பிக்காத பலர் காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். இந்த பணி நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும், ஒரு பணியிடத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை பணி அமர்த்தியதாகவும்" ஆவின் நிர்வாக அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

    தனியாக அழைத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் குழு மதுரை, தேனி, திருப்பூர் நாமக்கல், விருதுநகர் ஆகிய இடங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்

    இந்த விசாரணையின்போது அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆவின் காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ததில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த குறித்த முழுமையான அறிக்கையை அதிகாரிகள் குழு ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் வழங்கியது.

    இந்த அறிக்கையை பரிசீலித்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள ஆவினில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட மொத்தம் 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் பிறப்பித்துள்ளார்.

    இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

    • தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஜூம் நிறுவனம்.
    • சுமார் 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.

    இதற்கிடையே, இந்தாண்டு தொடக்கம் முதல் அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து நீக்கி வருகின்றன.

    இந்நிலையில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம் சுமார் 1,300 ஊழியர்களை அல்லது 15 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் என்று தலைமை நிர்வாகி எரிக் யுவான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

    நீங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பணியாளராக இருந்தால் அடுத்த 30 நிமிடங்களில் ஜூம் நிறுவனத்தால் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள் என்றும், இந்த பணி நீக்கம் குறித்து அமெரிக்கா அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் யுவான் தெரிவித்தார்.

    ×