என் மலர்
இந்தியா

சபரிமலை கோவிலில் காலணி அணிந்து சென்ற போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை
- செல்போனில் வீடியோ எடுத்த பக்தர்கள் அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.
- சபரிமலையின் புனிதத்தை மீறியதாக போலீஸ் அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை ஆவணி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் கோவிலில் சன்னிதானத்திற்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஷ் என்ற போலீஸ் அதிகாரி, காலில் காலணி அணிந்துகொண்டு நின்றார். இதனை செல்போனில் வீடியோ எடுத்த பக்தர்கள் சிலர், அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.
சபரிமலையின் புனிதத்தை மீறியதாக போலீஸ் அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது. அதுகுறித்து சபரிமலை காவல்துறையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஜித் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில் போலீஸ் அதிகாரி ராஜேஷ் சன்னிதான பகுதியில் காலணி அறிந்து நின்றது உறுதியானது. இதையடுத்து அவர் சபரிமலை பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து முகாம் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டார்.






