என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dismissal"

    • மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது

    ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்ததை கிராம மக்கள் பள்ளி ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பள்ளி முதல்வர் ஆசிரியரை பணிநீக்கம் செய்தார்.

    முன்னதாக, ஆசிரியர் தனது மொபைல் எண்ணை ஒரு மாணவியின் நோட்டில் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் அவரைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலையில் இளம்பெண்ணை 2 காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

    திருவண்ணாமலை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான காவலர்கள் இருவரும் சஸ்பெண்ட் ஆன நிலையில் தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

    • அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
    • நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி 20-ந்தேதி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதில் அரசில் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நடவடிக்கையும் அடங்கும். அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு அமைச்சகங்களில் சில துறைகளின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் டிரம்பின் நிர்வாக உத்தரவால் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவில் பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரியான நீலா ராஜேந்திரா பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார். இதற்கிடையே டி.இ.ஐ துறையை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. அத்துறையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீலா ராஜேந்திராவை தக்க வைத்து கொள்ள நாசா நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி அவரது பதவியை 'குழு சிறப்பு மற்றும் பணியாளர் வெற்றி அலுவலகத் தலைவர்' என்று மாற்றியது. ஆனால் இதை டிரம்ப் நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நீலா ராஜேந்திராவை பணிநீக்கம் செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா தனது உயர்மட்ட விண்வெளி ஆய்வகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நீலா ராஜேந்திராவின் வெளியேற்றம் குறித்து மின்னஞ்சலில் தகவல் தெரிவித்தது.

    அதில், நீலா ராஜேந்திரா இனி ஆய்வகத்தில் பணிபுரியவில்லை. எங்கள் நிறுவனத்திற்கு அவர் ஏற்படுத்திய நீடித்த பயன்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.

    நீலா ராஜேந்திரா பல ஆண்டுகளாக நாசாவில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவர் நாசாவை பன்முகப்படுத்த உதவும் முயற்சிகளுக்காக பணியாற்றி வந்தார். இதன் முதன்மை நோக்கம் பெண்களையும் சிறுபான்மையினரையும் அமைப்பில் பணியமர்த்துவதாகும்.

    • கடந்த ஜனவரி மாதம் இத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
    • இந்த துறையில் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

    அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

    அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்நாட்டு வருவாய் சேவை துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த துறையில் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

    இதற்கிடையே அதிபர் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் பல்வேறு அரசு துறைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கடந்த ஜனவரி மாதம் இத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தலைமை மனிதவள அதிகாரி, செயல் ஆணையர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

     ஆனால் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அவர்களில் பலா் மீண்டும் பணியில் சேர்ந்தனர். இந்தநிலையில் தற்போது மேலும் 20 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

    இதன்மூலம் 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இதுகுறித்த அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இ-மெயிலில் அனுப்பப்பட்டு உள்ளன. அதேசமயம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது அடுத்த மாதத்தின் (மே) நடுப்பகுதியில் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

    இதற்கிடையே டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்கை எதிர்த்து அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    • நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.
    • ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. உலக புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.

    இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார். தற்போது கேத்ரின் கால்வின் உள்ளிட்ட 23 பேரை நாசாவில் இருந்து பணிநீக்கம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நாசாவில் வானிலை மாறுபாடு என்றும் துறை தேவையில்லாதது என டிரம்ப் ஏற்கனவே கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்
    • மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

    திருச்சி:

    அந்தநல்லூர் ஒன்றியம் , மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன் வீட்டு வரி , குடிநீர் வரி , தொழில் வரி மற்றும் பலவகை வரி தொகைகளை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது . இதுகுறித்து உறுப்பினர்கள் கலெகடருக்கு அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கலெக்டர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார் அதில் , மல்லியம்பத்து ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்ற நாளிலிருந்து செலவுச் சீட்டுகள் இல்லாமலும் , உரிய ஆவணங்கள் இன்றியும் , போலியான ரசீதுகள் மூலம் ரூ l.74 லட்சம் கையாடல் செய்து முறைகேடு நடந்துள்ளது.

    ஊராட்சி தலைவராக பதவி ஏற்ற போது எடுத்த உறுதிமொழியினை மீறி அரசுக்கு எதிராக செயல்பட்டு உள்ளதால் இக்குறைகளுக்கு விளக்கம் கோரப்படுகிறது. 15 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 203 ன் கீழ் ஊராட்சி தலைவரின் செக் பவர் பறிக்கப்பட்டது. உரிய விளக்கம் அளிக்காததால் 205 ன் கீழ் ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திற்கு புறம்பானதாகவும் , பொது மக்களுக்கும் பொது நிதிக்கும் அரசு நிதிக்கும் தொடர்ந்து ஊறு விளைவிக்கும் விதமாக அமையும் என்பதால் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பொது நலன் கருதியும் திருச்சி மாவட்டம் , அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த மல்லியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவா விகனேஷ்வரன் என்பவரை 1994 ம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 , உட்பிரிவு 11 - ன்படி , 15.11.2022 முதல் மலலியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என அந்த கடிதத்தில் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

    • 28 பேர் பணிநீக்கம் செய்ததை கண்டித்து அனைத்து ஊழியர்களும் கடந்த 50 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • மற்றவர்கள் வேலையில் நேற்று இரவு பணியில் சேர்ந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேர் பணிநீக்கம் செய்ததை கண்டித்து அனைத்து ஊழியர்களும் கடந்த 50 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தும் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை. ஆகையால் 28 பேரை தவிர மற்ற ஊழியர்கள் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு மற்றவர்கள் வேலையில் நேற்று இரவு பணியில் சேர்ந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • 56 ஊழி யர்களை பணி நீக்கம் செய்து சுங்கச்சாவடி நிர்வாகம் திடீரென அறிவித்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி மற்றும் திருமந்துறை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. இந்த சுங்கச்சா வடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு நிலைகளில் பணி ரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாஸ்ட் ட்ரேக் என்னும் நவீன முறை அறிமுகப்ப டுத்தப்பட்டு, சுங்க கட்டணம் வசூல் செய்துவருகின்றனர். இதனால் ஆட்களை குறைப்ப தற்காக நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால், 10 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரிந்து வந்த 56 ஊழி யர்களை பணி நீக்கம் செய்து சுங்கச்சாவடி நிர்வாகம் திடீரென அறிவித்தது. இதை கண்டித்து கடந்த அக்டோபர் மாதம் 01-ந் தேதி முதல் தொடர்ந்து இன்று 60-வது நாளாக பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் மாநில, மத்திய அரசுகள் இது வரை இவர்களின் போராட்ட த்தைப் பற்றி சிறிதும் கவலை ப்படாமல் செவி சாய்க்கா மல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செய லாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான குமரகுரு தலைமையில், முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், உளுந்தூ ர்பேட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு சுங்க ச்சாவடி ஊழியர்க ளுக்கு ஆதரவாகவும், மீண்டும் அவர்களை பணியில் அமர்த்த வேண்டியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
    • அங்கு மரங்களை வெட்டி விற்பனை செய்ததற்காக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா ரூ.2.18 லட்சம் அபராதம் விதித்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி உள்ளது. கல்லூரியின் முதல்வராக பங்காரு (பொறுப்பு) இருந்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

    மரங்களை வெட்டி விற்பனை செய்ததற்காக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா ரூ.2.18 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் அரசியல் கட்சியினர் அவரைப் பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம், கல்லூரி முதல்வர் பங்காருவை உயர்கல்வித் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    • பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு
    • 2 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மன்னர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவிக்கு கவுர விரிவுரையாளர் முத்துக்குமரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முத்துக்குமரனை கல்லூரியில் மாணவர்கள் சிலர் தாக்க முயன்றதுடன், அவரது இருசக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் திருச்செல்வத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உதவி பேராசிரியர்கள்  6பேர் கொண்ட விசாரணை குழுவை கல்லூரி முதல்வர் அமைத்தார். அந்த குழு அளித்த விசாரணை அறிக்கையின்படி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் செயல்பட்டதாக கவுரவ விரிவுரையாளர்கள் முத்துக்குமரன், கலையரசன் ஆகியோரை கல்லூரி முதல்வர் திருச்செல்வம் பணி நீக்கம் செய்தார்.


    • நரிக்குடி பஞ்சாயத்து யூனியனில் தலைவர் பதவி நீக்கப்பட்டார்.
    • ஆர்.டி.ஓ. முன்னிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    விருதுநகர்

    நரிக்குடி பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் நம்பிக்கையில்லாத தீர்மானம் அடிப்படையில் தலைவராக இருந்த பஞ்சவர்ணம் பதவியை இழந்தார். கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் நரிக்குடி பஞ்சாயத்து யூனியனில் மொத்தமுள்ள 14 இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 6 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வென்றனர்.

    சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பஞ்சவர்ணம் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். மற்றொரு சுயேட்சை தி.மு.க., அ.தி.மு.க. இருதரப்பிலும்இடங்கள் சரிசமமாக இருந்த நிலையில் குலுக்கல் முறையில் பஞ்சவர்ணம் பஞ்சாயத்து யூனியன் தலைவரானர்.

    கடந்த 8 மாதங்களாக யூனியன் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் முந்தைய 3 கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக வரதா உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய பஞ்சவர்ணம் முடிவு செய்ததாக தெரிகிறது.

    இதையடுத்து நேற்று அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவருக்கு எதிராக அ.தி.மு.க. உறுப்பினர்கள் உட்பட 12 பேர் வாக்களித்தனர். ஆதரவாக ஒரேயொரு உறுப்பினர் மட்டுமே வாக்களித்தார்.

    இதனால் பஞ்சவர்ணம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    • தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
    • பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 6 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படியும் தலைவர்-முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா வழிகாட்டுதலின் படியும் சிவகங்கை மாவட்டத்தில் 3 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

    இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை நீதிமன்றங்களில் போக்சோ நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதிகள் சுந்தரராஜ், கீதா, வக்கீல்கள் ராமலிங்கம், சவுந்திரபாண்டியன், குருமூர்த்தி. சேது ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 102 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 6 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை வழக்கா டிகளுக்கு கிடைத்தது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×