search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officers"

    • 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • வணிக வரி உதவி கமிஷனர் மகேஷ் பாட்டீல் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் பசவகல்யாண தாலுகா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண்ணள்ளி என்ற சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் ஏராளமான சேலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்த பறக்கும் படையினர் லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இந்த சேலைகள் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார். மேலும் அதற்கான ஆவணங்களை கேட்டபோது அவர் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து பறக்கும் படையினர் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சேலைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுப்பற்றி தெரியவந்ததும் வணிக வரி உதவி கமிஷனர் மகேஷ் பாட்டீல் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாக்காளர்களுக்கு கொடுக்க இந்த சேலைகள் கொண்டு செல்லப்பட்டதா? அல்லது கடைக்கு கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கிராம மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மைலி கிராமத்தினர் ஒன்று கூடி ஓட்டு மொத்தமாக வாக்களிக்க மறுத்து தேர்தலையே புறக்கணித்தனர்.

    திருச்சுழி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சத வீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அலுவலர்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசீலன் உத்தரவின் பேரில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊராட்சி பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதி ளிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள பொது மக்களை சந்தித்து வரும் தேர்தல் அலுவலர்கள், மேற்பார்வையாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடம் நேரில் சென்று 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் பள்ளிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட மைலி கிராமத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கிராம மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மேலும் திருச்சுழி உதவி வாக்குப்பதிவு அலுவலரான ராஜேஸ் மற்றும் திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா மற்றும் சரவணக் குமார் ஆகியோரும் பொது மக்களை நேரில் சந்தித்து 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விளக்கமாக எடுத்து ரைத்தனர்.

    கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மைலி கிராமத்தினர் ஒன்று கூடி ஓட்டு மொத்தமாக வாக்களிக்க மறுத்து தேர்தலையே புறக்கணித்தனர். அந்த பகுதியில் 300 வாக்குகள் இருந்த நிலையில் மதியம் வரை 4 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். பின்னர் தேர்தல் அதிகாரிகளின் சமாதானத்திற்கு பிறகும் கூட மிக மிக குறைவான இரட்டை இலக்க எண்ணிக்கையிலான வாக்குகளே பதிவானது.

    இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறை வேற்றி 100 சதவீத வாக்குப் பதிவை பதிவு செய்ய வேண்டுமென பொதுமக்களிடம் தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    • பட்டா வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது.
    • இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    மதுரை

    மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளை யில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருப்பதாவது:-

    மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம் போக்கு இடத்தில் பல வரு டங்களாக வசித்து வருவதா கவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறை யினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந் தது. அப்போது அரசு தரப் பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்த ரவில், நீர் நிலையை ஆக்கி ரமித்து செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறு வது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடி யாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் அரசு ஆவணங்க ளின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்து றையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை யும் சட்ட விதிகளுக்கு உட் பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • சாலைகளில் குழாய் பதிக்கும் போது பள்ளங்களை மூட வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் கே. வீ. கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமானுல்லா வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ராதிகா கோபிநாத், உறுப்பினர்கள் சுமத்ரா மோகன், வெங்கட், செல்வ பாரதி கண்ணன், சுப்ரமணியன், வனிதா, மற்றும் செல்வம், உள்பட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உறுப்பினர் வெங்கட் பேசும்போது கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்காக ஊராட்சி பகுதியில் சாலைகளை சேதப்படுத்தி குழாய்கள் பதிக்கப்படுவ தாகவும் சரிவரபள்ளங்களை மூடுவதில்லை எனவும், இதனால் கிராம சாலைகள் அதிகளவில் சேதமடைந்தது வருவதாகவும் கிராம மக்கள் பெரிய அளவில் பதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

    இதற்கு பதில் அளித்த ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என பதில் அளித்தார்.

    இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தரசன் நன்றி கூறினார்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • பேரிடர் தொடர்பு எண் 1077-ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பேரிடர் பயிற்சியாளர் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே தாலுகா வாரியாக மண்டல நிவாரண அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

    தாலுகா, ஒன்றியம், நகராட்சி வாரியாக பேரிடர் பொறுப்பு அலுவலர்களை நியமித்து 24மணி நேர பணியாக இருக்க வேண்டும். அவர்களின் தொலைபேசி எண்ணையும் வெளியிட வேண்டும்.

    மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பேரிடர் தொடர்பு எண் 1077 ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    பேரிடர் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருமான வரியை கட்டவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    சென்னை ேவப்பேரியில் உள்ள தனியார் நிறுவனம், பூங்கா நகரில் உள்ள இன்னொரு நிறுவனம் மற்றும் மாதவரம் பூங்காநகர் ஆகிய இடங்களில் உள்ள மேலும் 2 தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை குறிவைத்து வருமான வரித்துைற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரும்பு பொருட்கள் மற்றும் மருந்து ரசாயனம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யும் இந்த 4 நிறுவனங்களிலும் முறை யாக வருமான வரியை கட்ட வில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்கு மாடி வணிக வளாகம் ஒன்றில் 5-வது மாடியில செயல்பட்டு வரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட வரு மான வரித்துறை அதிகாரி கள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி பிரிவு அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை யில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது. இதுபோன்று சவுகார் பேட்டையில் உள்ள வணிக வளாகத்திலும், மாதவரம் நடராஜன் சாலையில் உள்ள குடோன் மற்றும் அலுவலகத் திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். சவுகார் பேட்டை பகுதியில் மட்டும் மொத்தம் 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான தொழிற்சாலை கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். கடலூர் குடிகாடு பகுதியில் சிப்காட்டில் உள்ள இந்த மருந்து தொழிற்சாலைக்கு சென்னையில் இருந்து 4 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் அதிரடி இன்று காலையில் வந்தனர். தொழிற்சாலைக்குள் சென்ற அதிகாரிகள் அங்குள்ள அலுவலகம் மற்றும் தொழிற்சாலை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையின் முடிவில் தான் ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றபட்டதா என்பது தெரிய வரும். தனியார் மருந்து கம்பெனியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் கடலூர் சிப்காட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முருங்கப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 26 -ந் தேதி மக்கள் சந்திப்பு முகாம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது.
    • மேலும் சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதனை சந்தித்தும் மனு கொடுத்தனர். அப்போது ஒரு வாரத்திற்குள் கண்ணனின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்வதாக கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 26 -ந் தேதி மக்கள் சந்திப்பு முகாம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது.

    சஸ்பெண்டு

    இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் அதிகமானோர் ஏறியதால் மேடை சரிந்து விழுந்தது .இதையடுத்து அந்த கிராமத்தின் பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரியான கண்ணன் என்பவரை கோட்டாட்சியர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து முறையிட முயன்றனர். அப்போது கலெக்டர், அவர்களை சந்திக்க மறுத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    மேலும் சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதனை சந்தித்தும் மனு கொடுத்தனர். அப்போது ஒரு வாரத்திற்குள் கண்ணனின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்வதாக கூறினார் . ஆனால் இதுவரை அந்த சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யவில்லை.

    ஆர்ப்பாட்டம்

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் சூரமங்கலம் தர்மா நகரில் உள்ள சேலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரியான கண்ணனை மேடை சரிந்ததற்காக சஸ்பெண்டு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் . மேலும் அவர் வகித்த கொத்தனூர் கிராம நிர்வாக பதவிக்கு வேறு ஒருவரை கூடுதல் பொறுப்பு வழங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே உடனடியாக அவரது சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் . இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • சேதமடைந்த பெரிய கண்மாய் மதகுகள், மடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • சேதமடைந்த பெரிய கண்மாய் மதகுகள், மடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இருஞ்சிறை கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய கண்மாய் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மடைகள் மற்றும் அதனை சார்ந்த கால்வாய்கள் அனைத்தும் சேதமடைந்தி ருப்ப தாகவும், தமிழக அரசு விரைவில் அதனை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இருஞ்சிறை கிராமப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுதொடர்பான செய்தி 'மாலை மலர்' நாளிதழிலும் வெளியானது. இதனைய டுத்து நேற்று இருஞ்சிறை பெரிய கண்மாய் பகுதிக்கு நேரில் வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் இருஞ் சிறை பெரிய கண்மாய் பகுதியிலுள்ள கலுங்கு மடைப்பகுதி, பெரியமடை, தாழிமடை, கருதாமடை, வெள்ளமடை உட்பட அனைத்து மடைகளையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் மடைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் சேதம டைந்த மடைகளையும், ஷட்டர் கதவுகள் இல்லாத மடை பகுதிகளையும் ஆய்வு கள் செய்து அளவீடு கள் மேற்கொண்டனர்.

    இதுகுறித்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மடைகளின் சேதம், கால்வாய்கள் ஆக்கி ரமிப்பு, உள்பட இருஞ்சிறை கண்மாய் மடைகள் குறித்த அனைத்து குறைகளையும் அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்து, அதன் மூலம் விவசாயிகளின் கோரிக்கை கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென தெரிவித் தனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த ஆய் வுப்பணியின் போது இருஞ் சிறை கிராமப்பகுதி விவசா யிகள் ஏராளமானோர் உட னிருந்தனர்.

    • மானாமதுரை நகராட்சியில் குறைகளை தீர்க்க அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று கவுன்சிலர்கள் புகார் கூறப்பட்டுள்ளது.
    • கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், முனியசாமி ஆகியோர் பேசினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் மாரியப்பன் சென்னடி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் ரெங்கநாயகி, பொறியாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மானாமதுரை வாரச் சந்தை, பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகளுக்கு கட்ட ணம் வசூலிக்கப்படும். பேருந்து நிலையத்தில் உள்ள மிதிவண்டி நிறுத்தத்தில் கட்டணம் வசூலிக் கும் உரிமை உள்ளிட்டவற்றுக்கு நடத்தப்பட்ட பொது ஏலத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. மானாமதுரையில் குடி. நீர்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த கூடுதல் பணியா ளர்களை நியமிக்க ஒப்புதல் அளிப்பது, கீழப்பசலை, மாங்குளம், சூரக்குளம் பில்லறுத்தான், கல் குறிச்சி, செய்களத்தூர், கீழமேல் குடி ஆகிய ஊராட்சிகளில் நகர் பகுதியுடன் ஒட்டியுள்ள தேர்வு செய்யப்பட்ட விரிவாக்கப் பகுதிகளை மானாமதுரை நகராட்சி நிர்வாகத்துடன் இணைத்து அரசுக்கு கருத்துரு அனுப்பு வது உள்ளிட்ட 33 தீர்மானங்களுக்கு உறுப் பினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான கோரிக்கை களை முன் வைத்தனர். தி.மு.க . உறுப்பினர் மாரி கண்ணன் பேசுகையில், எனது வார்டில் இன்னும் புதிய தெரு விளக்குகளை பொருத்த வில்லை. நகராட்சி அலுவ லர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றார்.

    கவுன்சிலர்கள் தெய் வேந்திரன், முனியசாமி ஆகியோரும் பேசினர். உறுப்பினர்களின் கேள்வி களுக்கு ஆணையர் ரெங்கநா யகி பதிலளிக்கையில், தற்போது பணிபுரியும் அலுவலர்கள் நேரடியாக புதிதாக பணிக்கு வந்து உள்ளனர். அவர்களுக்கு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை எப்படி அனுகுவது என்பது பற்றி கூறப்பட்டுள்ளது என்றார்.

    மேலும் புதிய வீடு கட்ட வரைபட அனுமதி, சொத்து வரி, பெயர் மாற்றத்துக்கான பணிகளை இன்னும் ஒரு மாத்துக்குள் பணிகளை முடிக்கத் தேவையான நட வடிகைகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார். தலைவர் மாரிப்பன் கென்னடி பேசுகையில், தற்போது டெங்கு பரவி வருவதால் அனைத்து வார்டுகளிலும் சுகாதார பணிகளை விரைவாகசெய்ய வேண்டும் என்றார்.

    • கிராம நிர்வாகி அலுவலர்களின் கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • முடிவில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் திருமங்கலம் வட்ட கிராமநிர்வாகஅலுவலர் அணிகள் தேர்வு செய்து அந்த அணிகளுக்கு கிரிகெட்போட்டி வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.

    வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் ராஜாமணி வரவேற்றார். மாநில தலைவர் ராஜன் சேதுபதி போட்டியை தொடக்கி வைத்தார். இதில் திருமங்கலம் அணி வெற்றி பெற்றது. சிறந்த விளையாட்டு வீரராக திருமங்கலம் சர்வேயர் மணி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு திருமங்கலம் தாசில்தார் பார்த்திபன் பரிசுகள் வழங்கினார். முடிவில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

    • இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பக்தர்கள் தங்குவதற்கு கடற்கரை மற்றும் புதுத்தெரு பைபாஸ் பகுதியில் பக்தர்கள் ஓய்வு கூடம் இந்த ஆண்டு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் தசரா திருவிழா மிகவும் விமர்சை யாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 24-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹார விழா நடக்கிறது. மறுநாள் 25-ந்தேதி மாலை 4 மணிக்கு கொடி இறக்கம் நடக்கிறது.விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை வசதிகள், வாகன நிறுத்தம் குறித்து தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தக்காரும், உதவி ஆணையருமான சங்கர் தலைமையில் ஆய்வு பணி நடந்தது.

    இதில் பக்தர்கள் தங்குவதற்கு கடற்கரை மற்றும் புதுத்தெரு பைபாஸ் பகுதியில் பக்தர்கள் ஓய்வு கூடம் இந்த ஆண்டு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    மேலும் குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன நிறுத்தம் செய்வதற்கு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிர மணியன், கோவில் ஆய்வாளர் பகவதி, கோவில் கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • மைதானம் தற்போது மாவட்ட விளையாட்டுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
    • பொதுமக்களும் இந்த மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள மவுண்ட் பிளசண்ட பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான சுமாா் ஒரு ஏக்கா் நிலம் இருந்தது. அதனை அங்கு உள்ள தனியாா் டென்னிஸ் கிளப் நிா்வாகம் ஆக்கிரமித்து விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இதைத் தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி தலைமையில் வருவாய்த் துறையினா் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் விளையாட்டு மைதானத்துக்காக ஆக்கிரமித்து வைத்திருந்த 1 ஏக்கா் நிலத்தை மீட்டனா். அதன் தற்போதைய மதிப்பு ரூ.9 கோடியாகும்.

    இந்த மைதானம் தற்போது மாவட்ட விளையாட்டுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் பொதுமக்களும் இந்த மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.

    ×