search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Markandeyan MLA"

    • விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சங்கரய்யா உருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க. நிர்வாகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    விளாத்திகுளம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைந்ததை தொடர்ந்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அவரின் உருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், விவசாய சங்கத் தலைவர் ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் பாலமுருகன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேசவன், வார்டு செயலாளர் ஸ்டாலின்கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • மீரான் பாளையம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 15 பேர் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டனர்.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களிடம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் பங்களாதெரு, சத்யாநகர்,மீரான் பாளையம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 15 பேர் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை வழங்க அறிவுறுத்தினார். அப்போது விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, வார்டு உறுப்பினர் கலைச்செல்வி செண்பகராஜ், வார்டு செயலாளர் சங்கரலிங்கம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குதிரைகுளம் ஊராட்சி, ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதேப்போல் சில்லாங்குளம் ஊராட்சி, பரமன் பச்சேரி கிராமத்தில் ரூ.7லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணியையும், தெற்குகல்மேடு கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணி, ஆகியவற்றுக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,

    குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, ஊராட்சி மன்ற தலைவர்கள் விநாயகம், முத்துமணி, எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, கல்மேடுராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சத்யராஜன், தளவைராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், கிளைச் செயலாளர் சக்கையா, சண்முகபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கச்சாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் தென் மண்டல அளவிலான யோகா, சிலம்பம் போட்டி நடைபெற்றது.
    • போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து,வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் தென் மண்டல அளவிலான 16-பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட யோகா, சிலம்பம், பரதநாட்டிய போட்டிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் கேடயம், சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அதிகாரி ராகவன், பள்ளி முதல்வர் மாயாதேவி,யோகா, ஆசிரியர் கருப்பசாமி, சிலம்பம் ஆசிரியர் சிவலிங்கம், பரதநாட்டிய ஆசிரியை நாகேஸ்வரி உட்பட ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • போட்டியானது சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக விளாத்திகுளம் - குளத்தூர் சாலையில் நடைபெற்றது.
    • சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் இடத்தை சண்முகாபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டி பிடித்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 63-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியானது சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக விளாத்திகுளம் - குளத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் முதலாவதாக நடைபெற்ற சிறிய மாட்டு வண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    25 மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் இடத்தை சண்முகாபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டியும், 2-வது இடத்தை ஏ.எம். பட்டி ரவி மாட்டு வண்டியும், 3-வது இடத்தை ஓட்டப்பிடாரம் கணேசன், சக்கம்மாள்புரம் தாவீது மாட்டு வண்டியும் பிடித்தன.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 38 வண்டிகள் கலந்து கொண்டன. விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் கூடி நின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் கிராம சமுதாய தலைவர் முருகன், செயலாளர் செல்வம், பொருளாளர் முத்துப்பாண்டி, துணைத் தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இம்மானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடம் அமைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு நுண்கதிர்வீச்சு மையத்தை திறந்து வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடம், ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் நுண்கதிர்வீச்சு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஜே.எஸ்.டபிள்யூ. அலுவலர் சந்திரமோகன், மருத்துவர் உமா செல்வி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவநீதகண்ணன், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதிகணேசன், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், கீழஈரால் ஊராட்சி தலைவர் பச்சை பாண்டி, கிளை செயலாளர் சண்முகவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் மருத்துவ ஊழியர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்ட றிந்து அதை மனுக்களாக பெற்றுக்கொண்டார்.
    • நிகழ்ச்சிக்கு முன்னதாக ஊராட்சி மன்ற கட்டிடம் அருகில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியம், தாப்பாத்தி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது.

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.

    இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தி னராக மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்ட றிந்து அதை மனுக்களாக பெற்றுக் கொண்டார்.

    பின்னர் வேளாண் இடு பொருட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கினார். மேலும் தூய்மை காவலர்களுக்கு பொதுமக்கள் முன்னிலை யில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டு ஊக்கத் தொகை வழங்கினார்.

    மருத்துவ முகாம்

    நிகழ்ச்சிக்கு முன்னதாக ஊராட்சி மன்ற கட்டிடம் அருகில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் ரத்த கொதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்கான பரிசோதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் எட்டையா புரம் தாசில்தார் மல்லிகா, சமூக பாதுகாப்பு துறை தாசில்தார் ரகுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்க டேசன், உதவி செயற் பொறியாளர் செந்தில் குமார், உதவி மின் பொறி யாளர் செல்வகுமார், வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் நஸிமா, புதூர் மேற்கு ஒன்றிய செய லாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத் துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி சோலைசாமி, புதூர் மேற்கு ஒன்றிய ஆதி திராவிடர் நல அணி அமைப்பாளர் கணேச பாண்டியன், கிளைச் செய லாளர் வள்ளியப்பன், எட்டையபுரம் நகர இளை ஞரணி துணை அமைப் பாளர் அருள் சுந்தர், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • லட்சுமணனுக்கு சொந்தமான 17 கரிமூட்டம் குவியல், உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள் உட்பட அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
    • வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த லட்சுமணன் - குட்டியம்மாள் தம்பதியினருக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதி உதவியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 57) மற்றும் அவரது மனைவி குட்டியம்மாள் இருவரும் சேர்ந்து அதே கிராமத்தில் பல ஆண்டுகளாக கரிமூட்டம் தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நகைகளை அடகு வைத்து, பணத்தை வட்டிக்கு வாங்கி அதிக முதலீடு செய்து விறகுகள், தூர் கட்டைகளை வாங்கி கடந்த சில மாதங்களாக கரிமூட்டம் அமைத்ததில், அவற்றையெல்லாம் விற்பனை செய்யவிருக்கும் நேரத்தில் நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த கனமழை காரண மாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் லட்சுமணனுக்குச் சொந்தமான 17 கரிமூட்டம் குவியல், உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள் உட்பட அனைத்தும் வெள்ளத் தில் அடித்து செல்லப் பட்டது.

    இதனால் ரூ.55 லட்சம் மதிப்புள்ள கரிகளை இழந்துவிட்டோமே என்று என்னசெய்வதென்று தெரியாமல் லட்சுமணனும், அவரது மனைவி குட்டியம்மாளும் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உடனடியாக தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் என அரசு அதிகாரிகளுடன் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, வாழ்வாதா ரத்தை இழந்து தவித்து வந்த லட்சுமணன் - குட்டியம்மாள் தம்பதியினருக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி., தமிழக அரசிடமிருந்து நிதி உதவி பெற்றுத்தர உதவி செய்வதாக உறுதி அளித்தார். இதுகுறித்து நஷ்டத்தை சந்தித்த தம்பதியினர் கூறுகையில்:-

    இது போன்ற வெள்ளம் இதுவரை வந்ததே இல்லை. நேற்று முன்தினம் வந்த வெள்ளத்தால் நல்ல விலைக்குப் போகவிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான கரிக்கட்டைகள் முற்றிலும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். இதிலிருந்து மீண்டு வர தமிழக அரசு தான் தங்களுக்கு உதவ வேண்டும் என கூறினர்.

    • அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், இளநிலை பொறியாளர்கள் எபனேசர், ஹெப்சிபா ஜோன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மும்மூர்த்தி, மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஒப்பந்த தாரர் சுப்பாரெட்டியார், அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவர் தங்க பாண்டியம்மாள், வெம்பூர் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி பரமசிவம், ஒன்றிய பிரதிநிதி சர்க்கரை, கிளை செயலாளர்கள் நாக ராஜ், மணி பிரகாசம், வேல் ராஜ், மாரிச்சாமி, பெரிய சாமி, சுப்பையா, குருசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள், ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முத்துசாமிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • தொடர்ந்து பள்ளியில் வழங்கப்படும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பள்ளியில் வழங்கப்படும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை தவமணி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா முத்துராமலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி, கிளைச் செயலாளர்கள் முருகன், கந்தவேல் சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், உட்பட தி.மு.க. நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குளத்தூர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
    • இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆவலுடன் விழாவில் கலந்து கொண்டு தாங்கள் படித்த பள்ளியை பார்வையிட்டு அனைவரிடமும் மன மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 1923-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 100 ஆண்டுகள் கடந்த தங்களது பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக திட்டமிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர்.

    ஆனால் அங்கு சென்ற முன்னாள் மாணவர்களுக்கு தாங்கள் படித்த பள்ளியின் கட்டிட மற்றும் அடிப்படை வசதிகளின் நிலையைக் கண்டு பள்ளியின் அடிப்படையை வசதிகளை கட்டமைத்தும், பள்ளிக்கும், அங்கு பயலும் மாணவர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முடிவு செய்தனர்.

    இதுவரை இப்பள்ளியில் பயின்ற அனைத்து மாண வர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தங்களுக்குள்ளாக வாட்ஸ்அப் குழுவினை உருவாக்கி அனைவரும் ஒன்றினைந்து தாங்கள் படித்த பள்ளியை தத்தெடுத்து லட்சக்கணக்கில் நிதியை வழங்கி தற்போது இப்பள்ளியில் சேதமடைந்திருந்த கட்டி டங்கள் சீரமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கலையின்றி காணப்பட்ட பள்ளி கட்டிடங்கள் முழுவதற்கும் பெயிண்ட் செய்து கலர்புல்லாக மாற்றியுள்ளனர்.

    அதுமட்டுமின்றி இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் பிரம்மா ண்டமாக உருவாக்கி நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாடி அனை வருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள்.

    பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக சென்ற நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டு வந்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.

    நூற்றாண்டு விழாவில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வரவேற்று பேசினார். பின்னர் குளத்தூர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு கேடயம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பால் மாற்றப்பட்ட பள்ளி கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து பல ஆண்டு களுக்குப்பின் சந்தித்த தங்களது பள்ளிப்பருவ நண்பர்களிடம் மனமகிழ்ச்சியோடு தங்களது பழைய பள்ளி அனுபவங்களை பேசி, குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினர். இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா உட்பட பல நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வரும் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆவலுடன் விழாவில் கலந்து கொண்டு தாங்கள் படித்த பள்ளியை பார்வையிட்டு அனைவரிடமும் மன மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    விழாவின் தொடர்ச்சி யாக பள்ளியில் பரத நாட்டியம், கர காட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம், காவடி யாட்டம் என பல்வேறு நாட்டுப்புற நடனங்கள் தொடங்கி ட்ரெண்ட்டிங் டான்ஸ் வரை அனைத்தையும் ஆடி அங்கிருந்த ஒட்டுமொத்த முன்னாள் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களையும் கண்ணிமைக்காமல் கண்டு ரசிக்க வைத்தனர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். விழாவில் 1970-ம் ஆண்டு முதல் தற்போது பயின்று வரும் மாணவர்கள் வரை என வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • பஸ் சேவையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்கள், மாணவர்கள் பஸ்சுக்கு மாலை, வாழை மரங்கள் கட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் இருந்து குளத்தூர் வழியாக முத்துக்குமாரபுரம் வரை விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் குளத்தூர் பகுதியில் இருந்து அதிகளவிலான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

    விளாத்திகுளம் - முத்துக்குமாரபுரம் வழித்தடத்தில் மட்டுமே சென்று வரும் இந்த பஸ்சை கூடுதலாக வீரபாண்டிய புரம், டி.சுப்பையாபுரம், முத்துராமலிங்கபுரம் வரை நீட்டிப்பு செய்தால் இக்கிரா மங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீண்டநாட்களாக மாணவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், முத்துக்கு மாரபுரம் வரை மட்டுமே சென்று வந்த இப்பேருந்தை வீரபாண்டியபுரம், டி.சுப்பையாபுரம் வழியாக முத்துராமலிங்கபுரம் வரை நீட்டிப்பு செய்து பஸ்சை இயக்க உத்தரவிட்டு கூடுதல் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் சேவையை மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் கூடுதல் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் சேவையை முன்னிட்டு பஸ்சுக்கு மாலை, வாழை மரங்கள் கட்டி பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் ராமகிருஷ்ணன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெகநாதன், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மாவட்ட கவுன்சிலர் மிக்கல் நவமணி, நடராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், குருநாதன் செந்தூர்பாண்டி, குளத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் மாலதி செல்ல பாண்டி, வீரபாண்டியபுரம் ஊராட்சிமன்ற தலைவர் லெக்கமாள் தேவி, வேம்பார் தெற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ், நெடுங்குளம் ஊராட்சிமன்ற தலைவர் ஜெயலட்சுமி, டி. சுப்பையாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ராமசுப்பு, வைப்பார் ஊராட்சிமன்ற தலைவர் ராமர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பேச்சிமுத்து, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய சிறுபான்மையினர் அணி செல்வின் ஒன்றிய இலக்கிய அணி மாரியப்பன், மாணவரணி அமைப்பாளர் முனியசாமி, கிளைச் செய லாளர்கள் மந்திரமூர்த்தி, முனிய சாமி, பொன்னு ச்சாமி, ரவிச்சந்திரன், பொன் மாரியம்மன், பரம சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×