விளாத்திகுளம் பகுதியில் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.

மீரான் பாளையம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 15 பேர் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களிடம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
விளாத்திகுளம் பகுதியில் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் பங்களாதெரு, சத்யாநகர்,மீரான் பாளையம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 15 பேர் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை வழங்க அறிவுறுத்தினார். அப்போது விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, வார்டு உறுப்பினர் கலைச்செல்வி செண்பகராஜ், வார்டு செயலாளர் சங்கரலிங்கம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com