விளாத்திகுளத்தில் சங்கரய்யா படத்திற்கு எம்.எல்.ஏ. மரியாதை

விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சங்கரய்யா உருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க. நிர்வாகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
விளாத்திகுளத்தில் சங்கரய்யா படத்திற்கு எம்.எல்.ஏ. மரியாதை
Published on

விளாத்திகுளம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைந்ததை தொடர்ந்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அவரின் உருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், விவசாய சங்கத் தலைவர் ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் பாலமுருகன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேசவன், வார்டு செயலாளர் ஸ்டாலின்கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com