திமுக விருப்ப மனு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது

தி.மு.க.வில் வினியோகிக்கப்பட்ட விருப்ப மனு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. 8-வது நாளான நேற்று துரைமுருகன், கே.என்.நேரு உள்பட முக்கிய நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர்.
சசிகலா அழைப்பு அ.தி.மு.க.வினருக்கு பொருந்தாது- அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அழைத்து இருப்பது அ.தி.மு.க.வினருக்கு பொருந்தாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுகவில் விருப்ப மனு தொடங்கியது- எடப்பாடியில் போட்டியிட முதலமைச்சர் பழனிசாமி மனு

போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விருப்ப மனு அளித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல்- அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க.வில் விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது. விருப்பமனு விநியோகத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கமல்ஹாசன் கட்சியுடன் தி.மு.க. கூட்டணியா?- முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேட்டி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என்பதற்கு முதன்மை செயலாளர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம், என்று ஆரணியில் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
ஆட்சியில் பங்கேற்பது குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்- எல். முருகன் பேட்டி

அமைச்சரவையில் பங்கு குறித்து தேர்தலுக்கு பிறகு தேசிய தலைமை முடிவு செய்யும் என்று எல் முருகன் கூறியுள்ளார்.
ஆம்பூர் திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலினின் 5-ம் கட்ட சுற்றுப்பயணம் விவரம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோவிலில் கிடாய் வெட்டி சிறப்பு பூஜை செய்த எம்எல்ஏ

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோவிலில் 14 கிடாய் வெட்டி எம்.எல்.ஏ. நாகராஜன் சிறப்பு பூஜை செய்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து சென்னையில் 3 இடங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
100 நாள் வேலைதிட்ட பெண்களிடம் குறைகேட்ட மு.க.ஸ்டாலின்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் 100 நாள் வேலைதிட்டத்தில் பணியாற்றும் பெண்களிடம் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.
திமுக இந்து விரோத கட்சி... அதை தோற்கடிக்க வேண்டும்- பாஜக இளைஞரணி தலைவர் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என பாஜக இளைஞரணி தலைவர் பேசினார்.
ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்- பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்

ஈரோட்டில் இன்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பவானிசாகர் தொகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

தமிழக சட்டசபையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
அதிமுக- பாஜக கூட்டணி பெரும்பான்மை பலம் பெறும்- ராஜ்நாத் சிங்

அதிமுக- பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் சட்ட பேரவைக்குள் நுழைய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
பா.ஜனதா- அதிமுக கூட்டணி உறுதி- இல.கணேசன் பேட்டி

பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி உறுதி. இதனை உணர்த்துவதற்காகத்தான் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரின் கைகளை பிரதமர் உயர்த்தி காண்பித்தார் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.
வருகிற 24-ந்தேதி ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள்

சென்னை ராயப்பேட்டை தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி, கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார்கள்.
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை- கேஎஸ் அழகிரி

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.