"பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் திமுக தோற்றது" - டி.கே.எஸ். இளங்கோவன்

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் விஜய்க்குதான் தோல்வி என திமுக தெரிவித்துள்ளது.
"பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் திமுக தோற்றது" - டி.கே.எஸ். இளங்கோவன்
Published on

“பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் திமுக தோற்றது. விஜய்க்கும் இதே நிலைதான்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.23ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாக உள்ளன. இதனையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீட்டு பேச்சில் கவனம் செலுத்தி வருகின்றன.

திமுக தரப்பில் கூட்டணி இறுதியானது. அதிமுக தரப்பிலும் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியானலும், விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் தவெக தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தவெக, என்டிஏ கூட்டணிக்கு சென்றால் பாதிப்பு அவர்களுக்குதான் என திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தவெக, என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

“பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் திமுக தோற்றது. விஜய்க்கும் இதே நிலைதான்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com