விளாத்திகுளம் அருகே ரூ.1.90 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்

அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் அருகே ரூ.1.90 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
Published on

விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், இளநிலை பொறியாளர்கள் எபனேசர், ஹெப்சிபா ஜோன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மும்மூர்த்தி, மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஒப்பந்த தாரர் சுப்பாரெட்டியார், அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவர் தங்க பாண்டியம்மாள், வெம்பூர் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி பரமசிவம், ஒன்றிய பிரதிநிதி சர்க்கரை, கிளை செயலாளர்கள் நாக ராஜ், மணி பிரகாசம், வேல் ராஜ், மாரிச்சாமி, பெரிய சாமி, சுப்பையா, குருசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள், ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com