என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலர்கள்"

    • பேரிடர் கால மீட்பு உபகரணங்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு.
    • கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களில் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தலைவர் பி.கே.ரவி கடலோரப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

    இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்துக்கு வருகை தந்த அவர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் நிலை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் பேரிடர் காலங்களில் உதவுவதற்காக தேவையான உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்த அவர் தேவையான கூடுதல் உபகரணங்களும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ஆய்வின்போது மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 337 மனுக்கள் பெறப்பட்டது.
    • விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 337 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் பேராவூரணி வட்டத்தை சேர்ந்த சைபுநிசாபேகத்துக்கு தன் விருப்ப நிதியிலிருந்து விலையில்லா தையல் இயந்திரத்தினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்) , ஸ்ரீகாந்த் (வளர்ச்சி ), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், நேர்முக உதவியாளர் சத்துணவு அன்பரசு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்கள் பெறப்பட்டது.
    • விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமைதாங்கி பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட த்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி த்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குவழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறு த்தப்பட்டு ள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பூதலூர் வட்டம், புதுக்குடி வடபாதி கிராமத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைக ளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பேராவூரணி வட்டம் பின்னவாசல் ஊராட்சியை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை களையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா , கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் ,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி, பூதலூர் வட்டாட்சியர் பெர்ஷியா மற்றும் அனை த்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அலுவலகங்கள் வெறிச்சோடியது
    • கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    ஊரக வளர்ச்சித்துறை யில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்றும், நாளையும் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்த னர். அதன்படி இன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக ஊராட்சித்துறை அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது. இதே போல் அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை உட்பட ஒன்பது ஒன்றிய அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.

    கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் காலை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரி வித்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 2-வது நாளாக போராட்டம் நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் 2-வது நாளாக போராட்டம் நடந்தது.

    ராமநாதபுரம் 

    ஊரக வளர்ச்சித் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், இரவு நேர ஆய்வுகள், காணொளி ஆய்வுகளை நிறுத்த வேண்டும். 25 ஊராட்சிகளை கொண்டதாக ஊராட்சி ஒன்றியங்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் விடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    2-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பெரும்பாலான அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின. வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது, அடுத்த கட்டமாக டிசம்பர் 14ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
    • திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம்:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார தலைவர் காந்திராஜ் வரவேற்றார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அனைவரும் கலந்துகொள்வது, திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, உடுமலை, ஊத்துக்குளி, குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை ஏற்படுத்த அரசை கேட்டு கொள்வது.

    திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பணி ஓய்வு பெற்ற மாவட்ட தலைவர் ஞானசேகரனுக்கு, முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் நினைவு பரிசு வழங்கினார். இதில் மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில செயலாளர் ராஜசேகர், மாநில துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநில மகளிரணி அமைப்பாளர் வித்யா, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட தணிக்கையாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.10.93 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா.
    • அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

    இதில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை தலைவர் முத்துச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், வட்டார ஊட்டச்சத்து அலுவலர் லதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், ஒன்றிய பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலுப்பக்கோரை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் முதல் விதிப்படி பணி செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
    • இதில் 732 பேர் ஈடுபடுகிறார்கள்.

    ஈரோடு:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று முதல் விதிப்படி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டம் வரும் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:

    ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு இரவு நேர ஆய்வு கூட்டம், விடுமுறை நாளில் கள ஆய்வுக்கு அழைப்பதை கைவிட வேண்டும். அனைத்து வட்டாரத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    பிற துறை பணிகளில் ஈடுபடும் போது இத்துறை க்கான பணிகளை செய்ய முடியவில்லை. இவற்றை கைவிட வலியுறுத்தி ஏற்க னவே 3 கட்ட போராட்டம் நடத்தினோம்.

    கூடுதல் கலெக்டர் பேச்சு வார்த்தை யை ஏற்று போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் 5 அலுவலர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையாக சார்ஜ் வழங்கி உள்ளனர்.

    எனவே விதிப்படி வேலை என்று கோரிக்கை யை வலியுறுத்தி போராட்ட த்தை தொடங்கி உள்ளோம். வரும் 9-ந் தேதி வரை இந்த போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும்.

    இதில் 732 பேர் ஈடுபடுகிறார்கள். பணி நேரத்துக்கு பின் நடக்கும் ஆய்வு கூட்டம், காணொளி கூட்டங்கள், கள ஆய்வுகளை தவிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஊரக வளர்ச்சி துறையில் கோப்புகள் ஆண்டு கணக்கில் முடங்கி கிடக்கிறது.
    • இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.

    ஈரோடு:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கதின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஊரக வளர்ச்சி துறையில் அனைத்து நிலை அலுவலர்களின் நலன் சார்ந்த கோப்புகள் ஆண்டு கணக்கில் முடங்கி கிடக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

    அலுவலர்களின் நலன், உரிமைகள் சார்ந்த கோப்பு களை உருவாக்கவதிலும், அரசாணை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இந்த போக்கு மாற்றி கொள்ளப்பட வேண்டும்.

    இந்த துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதியான அலுவலர்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அதேபோல உதவி செயற்பொறியாளர்கள், ஒன்றிய உதவி செயற்பொறியாளர்கள் பதவி உயர்வும் உடனடியாக வழங்க வேண்டும்.

    ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம், விடுபட்டுள்ள உரிமைகள், பணி விதிகள் தொடர்பான அரசாணையை முறையாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.

    100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபடும் கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். முதற்கட்டமாக வரும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    அடுத்தடுத்த போராட்டங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    நாளை (புதன்கிழமை) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே இந்த கிராம சபை கூட்டத்திற்கு மாவட்டத்தின் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தாசில்தார் மூர்த்தி முன்னிலை வகித்தார்.

    வாடிப்பட்டி

    திருச்சியில் வருவாய் ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும், ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிளை தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத் துணைத் தலைவர் துரைப்பாண்டி, மாவட்ட இணை செயலாளர் இங்கர்சால், வட்டத் தலைவர் சுப்புலட்சுமி, வட்ட மூத்த உறுப்பினர் கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் துணைத்தலைவர் ஜெயமுருகன் தலைமையில் நடந்தது. மாநிலசெயற்குழு உறுப்பினர் பிரகாஷ்பாபு தீர்மானத்தை முன் மொழிந்தார். ஒடிசா ரெயில் விபத்தில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கடந்தகால நடவடிக்கைகள் குறித்து மாவட்டச்செயலாளர் சோமசுந்தர், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினார். வரவு-செலவு அறிக்கை குறித்து மாவட்டப் பொருளாளர் விஜயகுமார் அறிக்கை சமர்பித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×