என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரக வளர்ச்சித்துறை"

    • அலுவலகங்கள் வெறிச்சோடியது
    • கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    ஊரக வளர்ச்சித்துறை யில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்றும், நாளையும் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்த னர். அதன்படி இன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக ஊராட்சித்துறை அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது. இதே போல் அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை உட்பட ஒன்பது ஒன்றிய அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.

    கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் காலை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரி வித்துள்ளனர்.

    • மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
    • திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம்:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார தலைவர் காந்திராஜ் வரவேற்றார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அனைவரும் கலந்துகொள்வது, திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, உடுமலை, ஊத்துக்குளி, குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை ஏற்படுத்த அரசை கேட்டு கொள்வது.

    திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பணி ஓய்வு பெற்ற மாவட்ட தலைவர் ஞானசேகரனுக்கு, முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் நினைவு பரிசு வழங்கினார். இதில் மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில செயலாளர் ராஜசேகர், மாநில துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநில மகளிரணி அமைப்பாளர் வித்யா, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட தணிக்கையாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ‘தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்’ திட்டத்தின் மூலம், கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை
    • கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஊரக வாழ்வாதார இயக்கம், மத்திய, மாநில அரசின் 60:40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் 'தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்' என்ற திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இத்திட்டத்தின் மூலம், கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்க ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இத்துடன் 'ஊரக இளை ஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இந்த திட்டத்தின் கீழ், 18 முதல் 35 வயதிற் குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்படும், கன்னியா குமரி மாவட்டத்திலும் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் சுகா தார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, ஆட் டோமோட்டிவ், சில்லரை வணிகம், தளவாடங்கள், கட்டுமானத் துறை, அழ குக் கலை, தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும் 120-க்கு மேற் பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத் தப்படுகிறது. மொத்த பயிற்சி ஒதுக்கீட்டில், சமூக ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரான பட்டியலி னத்தினருக்கு 62 சதவீதம், மலைவாழ் பழங்குடியின ருக்கு 3 சதவீதம் மற்றும் சிறுபான்மையினருக்கு 16 சதவீதம் என சிறப்பு ஒதுக் கீடு அளித்து பயிற்சி வழங் கப்படுகிறது.

    குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகள், உணவு, தங்குமிட வசதி, சீருடை, பயிற்சி உபகர ணங்கள், கணினி பயிற்சி மற்றும் பயிற்சிக்குப்பின் திறன் பயிற்சி குழுமம் மூலம் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ் ஆகிய வசதிகளுடன் எவ்வித கட் டணமும் இன்றி இலவச மாக வழங்கப்படுகிறது.

    பயிற்சிக்கு பின் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்ப டும். விருப்பமுள்ள இளை ஞர்களுக்கு பயிற்சிக்கு ஏற்ப சில இனங்களில் அயல்நாடு களிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. இப்பயிற்சியை அளிப்ப தற்கு தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களி லும் மொத்தம் 130 பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக் கப்பட்டு பல்வேறு பயிற் சிகள் வழங்கி வருகின்றன.

    நடப்பாண்டில் மொத்தம் 500 இளைஞர்களுக்கு பயிற் சியளிக்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் இளைஞர் கள், கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள 'மகளிர் திட்டம்' என்று அழைக் கப்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கத்தின் அலுவலகத்தையோ அல்லது ஒவ்வொரு வட் டாரத்திலும் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலுவல கத்தையோ அணுகி விவ ரங்களை பெற்று பயிற் சியில் சேர்ந்து பயன் அடையலாம்.

    மேலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் நடை பெறும் இளைஞர் திறன் திருவிழாவில் பங்கேற் றும் விருப்பமான பயிற் சியை தேர்வு செய்து பயன்பெறலாம். எனவே தகுதியும் விருப்பமும் உள்ள கிராமப் பகுதி யைச் சேர்ந்த இருபால் இளைஞர்கள் தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான, தொழில் பிரிவை தேர்வு செய்து வேலை வாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் பணியாற்றும் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் ஈரோடு கலெக்டர் அலுவலகம், 14 ஒன்றியங்கள் என மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு இரவு நேர ஆய்வு கூட்டம், விடுமுறை நாளில் கள ஆய்வுக்கு அழைப்பதை கைவிட வேண்டும். அனைத்து வட்டாரத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    பிற துறை பணிகளில் ஈடுபடும் போது இத்துறைக்கான பணிகளை செய்ய முடியவில்லை. இவற்றை கைவிட வலியுறுத்தியும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை திரும்ப பெற வேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் விதிப்படி வேலை செய்தல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் போராட்டம் வரும் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் பணியாற்றும் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில் வரும் 10-ந் தேதி முதல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    • ஊரக வளர்ச்சி துறையில் கோப்புகள் ஆண்டு கணக்கில் முடங்கி கிடக்கிறது.
    • இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.

    ஈரோடு:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கதின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஊரக வளர்ச்சி துறையில் அனைத்து நிலை அலுவலர்களின் நலன் சார்ந்த கோப்புகள் ஆண்டு கணக்கில் முடங்கி கிடக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

    அலுவலர்களின் நலன், உரிமைகள் சார்ந்த கோப்பு களை உருவாக்கவதிலும், அரசாணை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இந்த போக்கு மாற்றி கொள்ளப்பட வேண்டும்.

    இந்த துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதியான அலுவலர்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அதேபோல உதவி செயற்பொறியாளர்கள், ஒன்றிய உதவி செயற்பொறியாளர்கள் பதவி உயர்வும் உடனடியாக வழங்க வேண்டும்.

    ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம், விடுபட்டுள்ள உரிமைகள், பணி விதிகள் தொடர்பான அரசாணையை முறையாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.

    100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபடும் கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். முதற்கட்டமாக வரும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    அடுத்தடுத்த போராட்டங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாநிலத் துணைத்தலைவர் காந்திமதி நாதன், மாவட்ட செயலாளர் மணி, சேகர், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்டத் தலைவர் மில்கி ராஜா சிங் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத்தலைவர் காந்திமதி நாதன், மாவட்ட செயலாளர் மணி, சேகர், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆட்களை நியமிப்பது போன்ற பொய் கணக்கு காண்பித்து முறைகேடுகள் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
    • ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனை, ஊராட்சி நிர்வாகத்தையும் கவனிப்பதால் வேலை பளு அதிகரித்துள்ளது.

    பல்லடம்:

    மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்திற்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது;- தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது. இத்திட்டத்தில் பணியாளர்களை நியமிப்பதில் பாரபட்சம், ஆட்களை நியமிப்பது போன்ற பொய் கணக்கு காண்பித்து முறைகேடுகள் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.

    இதற்கிடையே ஊரக வளர்ச்சி துறை மூலம் மத்திய அரசின் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம், தூய்மை பாரதம், தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டம், மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள்செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட பணிகளை கவனத்தில் கொண்டு ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனை, ஊராட்சி நிர்வாகத்தையும் கவனிப்பதால் வேலை பளு அதிகரித்துள்ளது. எனவே இது போன்ற பிரச்சனைகளை களையவும், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிசெயலாளர் உள்ளிட்டோரின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில், மற்ற மாநிலங்களைப் போன்று தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கென தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்பாக பவானி கிளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பவானி கிளை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பவானி:

    பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்பாக பவானி கிளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பவானி மகளிர் அணி தலைவி புவனா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி கண்டன உரையாற்றினார்.

    ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் 3 நாட்களுக்கு மேலான அனைத்து விடுப்பு களையும் விதிமுறைகளுக்கு மாறாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற நிர்பந்திப்பது. குறை வான கூலிக்கு வேலை வாங்கிவிட்டு ஒரே உத்தரவில் 8 முழு சுகாதார திட்ட ஒருங்கிணை ப்பாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பவானி கிளை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பவானி கிராம உதவியாளர்கள் சங்கம் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் பணியாளர்கள் ஒருநாள் தற்செயல் விருப்பு எடுத்து தங்களின் கோரி க்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தியா முழுவதும் உள்ள சுமார் 7.71 லட்சம் கிராமங்களில் 13 ஆயிரம் கிராமங்களில் பள்ளிகள் இல்லை என ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #India #VillageSchools
    புதுடெல்லி:

    நாட்டில் கல்வியின் தரத்தை உலக அளவில் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், நாட்டின் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை. மற்ற மாநிலங்களை விட வடகிழக்கு மாநிலங்களின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. மிசோரமில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் உள்ளன. 

    பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 107452 கிராமங்களில் 3474 கிராமங்களில் பள்ளிகள் இல்லை, அடுத்ததாக பீகார் மாநிலத்தில் 1493 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. அடுத்து மேற்கு வங்க மாநிலம் 1277 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. தொடர்ந்து  கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை , மத்திய பிரதேசம்  ராஜஸ்தான் முறையே 1025 மற்றும் 1000 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.



    தென்னிந்தியாவில் கேரளாவில் தான் 1553 கிராமங்களில் 3 கிராமங்களில் மட்டும் பள்ளிகள் இல்லை. தமிழகத்தில் 170891 கிராமங்களில் 47 கிராமங்களில் மட்டும் தான் பள்ளிகள் இல்லை. 

    தெலுங்கானாவில் 10434 கிராமங்களில் 55 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. ஆந்திராவில் 28293 கிராமங்களில் 154 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. 
    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்ததுறை சார்ந்த அலுவலகங்களில் பணிகள் முடங்கின. அலுவலகங்களும் வெறிச்சோடின.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தப்போராட்டம் தொடங்கியது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். அதற்கான அரசாணையை உடனடியாக தமிழகஅரசு வெளியிட வேண்டும். ஊரகவளர்ச்சித்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அலுவலர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் உயரதிகாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்தது. போராட்டத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஊரகவளர்ச்சி துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்தனர். இதனால் மேற்கண்ட அலுவலகங்கள் நேற்று அலுவலர்களின்றி வெறிச்சோடின. பெரும்பாலான ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலகங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. இந்த அலுவலகங்களில் வழக்கமான பணிகள் முடங்கின. இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகள் மற்றும் சான்றிதழ்கள் பெறுவதற்காக வந்த பொதுமக்கள், அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததால் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்து வரும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிகள் முற்றிலும் முடங்கியது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் யாரும் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். 
    நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராமப்புறங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.
    நாமக்கல்:

    ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வு கூட்டம் நடத்துவதை நிறுத்த வேண்டும். ஊழியர்களை எவ்வித விளக்கமும் கோராமல், பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும்.

    முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.

    நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் மொத்தம் உள்ள 1,033 பணியாளர்களில் 282 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மீதமுள்ள 751 பேர் வேலைக்கு வந்து இருந்ததால் நகர்புறங்களில் பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

    இருப்பினும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட 282 பேரில் பெரும்பாலானவர்கள் ஊராட்சி செயலாளர்கள் என்பதால் நாமக்கல், எருமப்பட்டி என மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மூடி கிடந்தன. கிராமப்புறங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என ஊராட்சி செயலாளர்கள் தெரிவித்தனர். 
    ×