ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்பாக பவானி கிளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பவானி கிளை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

பவானி:

பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்பாக பவானி கிளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பவானி மகளிர் அணி தலைவி புவனா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி கண்டன உரையாற்றினார்.

ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் 3 நாட்களுக்கு மேலான அனைத்து விடுப்பு களையும் விதிமுறைகளுக்கு மாறாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற நிர்பந்திப்பது. குறை வான கூலிக்கு வேலை வாங்கிவிட்டு ஒரே உத்தரவில் 8 முழு சுகாதார திட்ட ஒருங்கிணை ப்பாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பவானி கிளை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் பவானி கிராம உதவியாளர்கள் சங்கம் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் பணியாளர்கள் ஒருநாள் தற்செயல் விருப்பு எடுத்து தங்களின் கோரி க்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com