search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாளர்கள்"

    • ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும்.
    • தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் தலைமையகத்தில் லஞ்ச ஒழிப்பு நாள் உறுதிமொழி மேலாண் இயக்குனர் மோகன் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

    நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.

    அரசு குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.

    நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு நேர்மை மற்றம் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்று அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மண்டல பொதுமேலாளர்கள் இளங்கோவன் (கும்பகோணம்), சக்திவேல் (திருச்சி), சிவசங்கரன் (கரூர்), சிங்காரவேல் (காரைக்குடி), இளங்கோவன் புதுக்கோட்டை), முதன்மை கணக்கு அலுவலர் சிவக்குமார், துணை மேலாளர்கள் முரளி, கணேசன், உதவி மேலாளர்கள் வடிவேல், ராஜசேகர், கலைவாணன், நாகமுத்து மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
     
    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஏழை, எளிய விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் அரசு வழிகாட்டுதல் படி வழங்கப்படுகிறது. 
     
    இந்த நிலையில் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. 
    அதன்படி கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்தனர். சில கடன்கள் தள்ளுபடிக்கு பொருந்தாது என சரிபார்ப்பு அலுவலர்களால் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. 

    தற்போது பணி ஓய்வு பெற உள்ள மற்றும் பணிபுரிந்து வரும் பல ஊழியர்களுக்கு, பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல் என்ற குற்றச்சாட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. 

    இதனால் பணியாளர்கள் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×