என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டன ஆர்ப்பாட்டம்"

    • தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தான்.
    • பா.ஜ.க. பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தான்.

    எனவே, சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மற்ற மாநிலங்களில் எத்தகைய வாக்குத் திருட்டை கையாண்டு பா.ஜ.க. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்ததோ, அதே அணுகுமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்ற தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்து பா.ஜ.க. பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க.வோடு இணைந்து காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்திருந்தாலும் சிறப்பு தீவிர திருத்த முயற்சிகளை கண்டித்து நாளை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் நடத்த இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.

    சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நானும், சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்க இருக்கிறோம்.

    மத்திய பா.ஜ.க. அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்தி வருகிற வாக்குத் திருட்டையும், சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் நடத்த முனைகிற வாக்காளர் மோசடி குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே எதிர்ப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த நாளை நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தனர்.
    • தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற இருக்கிறது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார்.

    இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், கொலை வழக்கை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் த.வெ.க. சார்பில் கடந்த 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி த.வெ.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    மனுவை விசாரித்த நீதிமன்றம் த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தனர்.

    இதையடுத்து காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி விசாரணை கேட்டு பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் த.வெ.க. சார்பில் சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 13-ந்தேதி காலை நடைபெற இருக்கிறது.

    இந்த போராட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
    • ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் போலீசாரால் அஜித்குமார் அடித்தக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

    அதன்படி, போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது.

    முன்னதாக, காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனால், த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் எனவும் நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

    ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும். மேலும் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

    6ம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து வரும் 12ம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது அதிகரித்துள்ளது.
    • பல பாலியல் தொல்லை சம்பவங்களில், முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படுவதில்லை.

    எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மேலும், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை ஏவல் துறையாக மாறி. திமுக நிர்வாகிகள் செய்யும் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில்கூட பாரபட்சம் காட்டுகின்றன.

    கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் தனியார் கடை ஒன்றில் வேலை செய்து வந்து 34 வயதுடைய பெண் ஒருவர். பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில், சண்முக பிரபூ பாஸ்கர், பிரகதீஸ்வரன் மற்றும் சரவணன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து அந்த நான்கு குற்றவாளிகளும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலுடன் தனது குடும்பத்தினருடன், தான் பாதிக்கப்பட்டதை காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

    விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது அதிகரித்துள்ளது. பல பாலியல் தொல்லை சம்பவங்களில், முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படுவதில்லை. குறிப்பாக, திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச் சம்பவங்களில், பேச்சுவார்த்தை மூலம் சரிகட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் இத்தகைய சர்வாதிகாரப் போக்கிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    2026-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவியேற்றவுடன், அண்ணா பல்கலைக்கழக நிகழ்வில், 'யார் அந்த சார்' குற்றத்தில் சம்பந்தப்பட்ட பிற 'சார்'கள் விவரம் கண்டிப்பாக வெளிக் கொண்டுவரப்பட்டு, உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும். அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு. மீண்டும் முழுமையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு நீதி வழங்கப்படும்.

    இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நீதி கிடைத்திடவும்; பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திடவும்; தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் திராணியற்று வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் மாநகரத்தின் சார்பில், 23.5.2025 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில், தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. R.B. உதயகுமார், M.L.A., தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர்களான R. காந்தி, திரு. துரை, செந்தில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. R.K. பாரதிமோகன், Ex. M.P., தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M. ரெத்தினசாமி, Ex. M.L.A., தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M. சேகர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. C.V. சேகர், Ex. M.L.A., தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர் திரு. N.S.சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், மாநகராட்சி, நகர, பேரூராட்சி மன்றங்களின் இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

    • மருதத்தூர் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக வசிக்கின்றனர்.
    • உடும்புகள் அதிகம் இரவு நேரத்தில் நடமாடுகின்றன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக 1வது வார்டில் வசிக்கும் அப்பகுதி மக்கள் எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாமல் வசித்து வருவதாகவும் அப்பகுதியில் தெரு விளக்குகள் இது இவரை போட்டு தரவில்லை என புகார் எழுந்தது. இது தவிர சாலையோரம் உள்ள பகுதிகளில் பாம்புகள் , உடும்புகள் அதிகம் இரவு நேரத்தில் நடமாடுவதால் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.

    சமீபத்தில் அத்த தெருவில் வசித்த ஒரு சிறுவனுக்கு பாம்பு கடித்து மிகவும் உயிருக்கு போராடி காப்பாற்றினோம். எனவே இது சம்பந்தமாக சாலை வசதி தேவை எனக் கூறி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என கூறி 1வது வார்டில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பள்ளி சிறுவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அங்கு வசிக்கும் மக்கள் கூறுகையில் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் எங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும், தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் இனியும் செய்து தர தாமதித்தால் விரைவில் திட்டக்குடி, விருத்தாச்சலம் மாநில சாலையில் மக்கள் ஒன்று திரண்டு நாங்கள்சாலை மறியலில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

    • மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • வாகன சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்டன உரை ஆற்றியதோடு கண்டன கோஷமும் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி‌.ஐ.டி.யு சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி கடலூர் ஜவான் பவன் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நிர்வாகிகள் பாபு, ஸ்டாலின், ஆள வந்தார், ராஜேஷ், கண்ணன், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்டன உரை ஆற்றியதோடு கண்டன கோஷமும் எழுப்பினார்கள்.

    • பால் விலை உயர்வை கண்டித்து நடத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகர பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து வாலாஜா பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு நகர தலைவர் காந்தி தலைமை தாங்கி னார்.ஆர்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், பால் விலை உயர்வு,மின்சார கண்டன உயர்வு,சொத்து வரி உயர்வு கண்டித்தும் விலை உயர்வுகளை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட செயலாளர் ஹேமாவதி, ஆன்மீக பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் நாகப்பன், அரசு தொடர்பு பிரிவு நிர்வாகி சஞ்ஜெய் லோகேஷ்,நகரமன்ற உறுப்பினர் சீனிவாசன், நகர பொது செயலாளர் சரவணன், நகர பொருளாளர் சுரேஷ் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்ட த்தில் கலந்து கொண்டனர்.

    • பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பா.ம.க.தொண்டர்கள், மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட அமைப்பு செயலாளர் விசுவநாதன், துணை செயலாளர் வெங்க டேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தர்மபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, செயலாளர் இல.வேலுச்சாமி ஆகி யோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரையாற்றி னார்கள்.

    இதில், பா.ம.க. மாநில துணைத்தலைவர் தா.தேவராஜன், பா.ம.க. வக்கீல்கள் சமூக நீதி பேரவை தகவல், தொழில்நுட்ப துறையின் மாநில தலைவர் கனல் கதிரவன் மற்றும் மாநில மாவட்ட, நகர பா.ம.க. நிர்வாகிகள், உழவர் பேரியக்க நிர்வாகிகள், பா.ம.க.தொண்டர்கள், மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் மத்திய, மாநில அரசு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தர்மபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் குரல் எழுப்புவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

    • கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை.
    • அரசு சம்பளம் வழங்க உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    நீலகிரி

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் நேற்று மாலை கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறும்போது, அரசு பள்ளிக்கூடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 சம்பளமாக வழங்கப்படுகிறது. கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. அரசு சம்பளம் வழங்க உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றனர்.

    • பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மழைகாலங்களில் வீணாகும் நீரை குளம், குட்டைகளில் சேகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ெபாள்ளாச்சி,

    பி.ஏ.பி.பாசன விவசாயிகள் வாழ்வாதா–ரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி–யும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் மாவட்ட குழு சார்பில் பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் தனியார் மண்டபம் எதிரே விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உள்பட 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    விவசாயிகள் கூறும்போது பி.ஏ.பி.கால்வாய் ஒரங்களில் உள்ள மின் இணைப்புகளை அதிகாரிகள் வேகமாக துண்டித்து வருகின்றனர். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    பரம்பிக்குளம், ஆழியாறு பாசன பகுதி விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆனைமலையாறு, நல்லாறு தி்டத்தை நிறைவேற்ற வேண்டும். பி.ஏபி.கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மழைகாலங்களில் வீணாகும் நீரை குளம், குட்டைகளில் சேகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்றனர்

    இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    • ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்,

    காவேரிப்பட்டனம்,

    காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ,விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தி.மு.க. அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்,நகர செயலாளர் விமல் வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் வாசுதேவன் ,முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சுந்தரேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன் , மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார், பேரூர் கிளைச் செயலாளர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர இணை செயலாளர் மதனகோபால் நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
    • திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பஜார் வீதியில் இன்று மின் கட்டண உயர்வு, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, பால் விலை, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஆள் கடத்தல், கொலை,கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் மக்களுக்கு பாதுகாப்பு இன்மை அதிகரிப்பு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, போதைப்பொருட்கள் புழக்கத்தால் சமூக விரோதிகள் ஊடுருவல் அதிகரிப்பு, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வு போன்றவற்றை கண்டித்தும், தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி ஆட்சியைப் பிடித்திருக்கும் தி.மு.க அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க.வின் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கமாண்டோ பாஸ்கர், சிற்றம் சீனிவாசன், இன்பநாதன், ஞானகுமார், கடம்பத்தூர் முதல் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், ஆர்.டி.இ. சந்திரசேகர், போளிவாக்கம் மணி 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    அதேபோல பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    ×