அஜித்குமார் மரணம்- வரும் 12ம் தேதி த.வெ.க. போராட்டம் நடத்த திட்டம்?

த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
அஜித்குமார் மரணம்- வரும் 12ம் தேதி த.வெ.க. போராட்டம் நடத்த திட்டம்?
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் போலீசாரால் அஜித்குமார் அடித்தக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால், த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் எனவும் நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும். மேலும் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

6ம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து வரும் 12ம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com