என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
- பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மழைகாலங்களில் வீணாகும் நீரை குளம், குட்டைகளில் சேகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெபாள்ளாச்சி,
பி.ஏ.பி.பாசன விவசாயிகள் வாழ்வாதா–ரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி–யும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் மாவட்ட குழு சார்பில் பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் தனியார் மண்டபம் எதிரே விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உள்பட 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
விவசாயிகள் கூறும்போது பி.ஏ.பி.கால்வாய் ஒரங்களில் உள்ள மின் இணைப்புகளை அதிகாரிகள் வேகமாக துண்டித்து வருகின்றனர். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
பரம்பிக்குளம், ஆழியாறு பாசன பகுதி விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆனைமலையாறு, நல்லாறு தி்டத்தை நிறைவேற்ற வேண்டும். பி.ஏபி.கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மழைகாலங்களில் வீணாகும் நீரை குளம், குட்டைகளில் சேகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்றனர்
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






