என் மலர்
நீங்கள் தேடியது "Youth death"
- வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராகுல்(வயது 25).
- மேட்டுச்சேரி அருகே வந்தபோது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராகுல்(வயது 25). இவர் சம்பவத்தன்று அரியலூருக்கு சென்றுவிட்டு, பின்னர் வி.களத்தூர் வழியாக அரும்பாவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மேட்டுச்சேரி அருகே வந்தபோது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ராகுலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகன விபத்தில் வாலிபர் பலியானார்.
- கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் 5-வது வார்டுக்குட்பட்ட தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் விஜயன் (வயது 23), டிரைவர். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அம்மாபாளையத்தில் உள்ள பேச்சாயி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விஜயனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜயன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்."
- நல்லசாமி நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கீரனூர் வந்து விட்டு திருச்சி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கீரனூர் அருகே வடக்குபட்டியை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 39). தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கீரனூர் வந்து விட்டு திருச்சி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நல்லசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையறிந்த கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நல்லசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் அரசு பஸ் டிரைவர் கரியாபட்டியை சேர்ந்த அழகர் (55) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், விவசாயி. இவரது மகன் மணிகண்டன் வயது (28), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, வேலை முடிந்து பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் குளத்தில் குளிப்பதற்காக மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது கால் தவறி குளத்திற்குள் விழுந்தவர் நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மணிகண்டன் தண்ணீரில் இறந்து மிதப்பது கண்டு கோயில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,
மேலும், தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ரஜினி, சுப்பையன், மகேந்திரன் ஆகியோர் மணிகண்டன் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோ ட்டை, பெரிய கோட்டை ஊராட்சி, கொத்தகபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பாலசுப்பிரமணியம் (வயது 30). திருமணமாகாத இவர், திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த வாரம், திருப்பூரிலிருந்து கொத்தக பட்டிக்கு வந்தார். நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்து மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடினார்.
இந்நிலையில் நேற்று மாலை குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கல்லுக்குளத்திற்கு சென்று, கரையில் துணிகளை வைத்துவிட்டு, குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், காப்பாற்ற முயற்சி மேற்கொண்டும் முடியாததால், காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கிய சாமி தலைமையிலான வீரர்கள், குளத்தில் இறங்கி பாலசுப்பிரமணியம் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் வீரமணி (47). டெய்லர். நேற்று மாலை அவர் வீட்டில் உள்ள பழு தடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கி வீரமணி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வீரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம் அருகே தென்கரை ஆலத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கதிரவன் (வயது 22). லாரி டிரைவர். அதே கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (19). பி.காம். படித்தவர். சம்பவத்தன்று கதிரவன், மணிகண்டனை ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் பாபநாசம் வந்துகொண்டிருந்தனர். அப்போது பாபநாசம்- சாலியமங்கலம் மெயின் ரோட்டில் மின்சார வாரிய அலுவலகம் அருகே நாகலூரைச் சேர்ந்த வினோத்குமார் என்ற வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கதிரவன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மணிகண்டன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.
இதுகுறித்து கதிரவன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வினோத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பிளாட்பாரம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டியதில் மின்சாரம் தாக்கியது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பவுன்ராஜ் என்ற வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.
இதுபற்றி அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்தநிறுவனத்தின் மேற்பார்வையாளர் பாண்டியன் என்பவரை கைது செய்தனர்.
கோவை:
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாயவேல். இவரது மகன் விஜயகுமார் (வயது23). இவர் கே.ஜி. சாவடியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை- பாலக்காடு ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.
கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் உள்ளது ஏரிமேடு. இந்த பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 21). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் பாலக்கட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். உறவினர்களை பார்த்து விட்டு மாலை மீண்டும் கோவைக்கு புறப்பட்டனர்.
வரும் வழியில் வாளையார் அணையை சுற்றிப்பார்த்தனர். பின்னர் அணையில் இறங்கி 5 பேரும் குளித்தனர். சிறிது நேரம் குளித்த பின்னர் மற்றவர்கள் கரையேறினர். கிருஷ்ணகுமாரை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இது குறித்து அங்கிருந்து பொதுமக்களிடம் கூறினர். பொதுமக்கள் வாளையார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கஞ்சிக்கோடு தீயணைப்பு வீரர்களுடன் அணையில் இறங்கி கிருஷ்ணகுமாரை தேடினர். ஆனால் தீயணைப்பு வீரர்களால் முடியவில்லை.
இதனையடுத்து பாலக்காடு நீர் மூழ்கி தேடும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து தீவிர தேடுதலுக்கு பின்னர் அணையில் இருந்து கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.