search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி
    X

    பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் பொன் இருளப்பன்.

    கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி

    • ராஜபாளையம் டி.பி.மில்ஸ் பகுதியில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும் மூடப்படாமல் உள்ளது.
    • பள்ளத்தில் வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்தார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.

    ராஜபாளையம் டி.பி.மில்ஸ் பகுதியில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும் மூடப்படாமல் உள்ளது. அந்தப்பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்காமல் எச்சரிக்கை டேப் மட்டும் கட்டப்பட்டிருந்தது.

    மேலும் அந்தப்பகுதியில் விளக்கு வெளிச்சம் குறைவாக இருப்பதாலும், நள்ளிரவு மற்றும் தற்போது அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எதிரே உள்ள மேடு, பள்ளங்களை பார்த்து வாகனங்களை இயக்க முடிவதில்லை.

    இந்நிலையில் அங்கிருந்த பள்ளத்தில் வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் அம்பலப்புளி பஜார் பகுதியை சேர்ந்த பொன் இருளப்பன்(வயது32) என்பதும் ஜவுளிக்கடையில் அவர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×