என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் பலி"

    • துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
    • முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

    அமெரிக்காவின் டெக் சாஸ் நகரில் வடக்கு பகுதியில் உள்ள வணிக வளாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

    இதைப்பார்த்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கியால் சுட்டவர் பெயர் ஜோஸ் ஹெர்னாண்டஸ் காலோ (வயது 21) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் சக ஊழியர்கள் என்பதும் தெரியவந்தது.

    இந்த சம்பவத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.

    மதுரை:

    த.வெ.க. 2-வது மாநில மாநாடு நாளை மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்குகிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தஞ்சை, மதுரையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நடத்த இருக்கின்றனர். 2 மணி நேரம் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு 4 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் விழா மேடைக்கு வருகிறார். தொடர்ந்து மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.

    நாளை நடைபெற உள்ள மாநாட்டில் த.வெ.க. விஜய் என்ன பேசப்போகிறார் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே த.வெ.க. மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இனாம்கரிசல்குளத்தில் பேனர் வைக்க கம்பி எடுத்துச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் காளீஸ்வரன் (19) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • நாய் கடித்ததற்கான உரிய சிகிச்சை எடுக்காததால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எட்வின் பிரியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தை சேர்ந்த எட்வின் பிரியன் (24) என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாய் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

    எட்வின் பிரியன் நாய் கடித்ததற்கான உரிய சிகிச்சை எடுக்காததால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எட்வின் பிரியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நண்பர்களிடம் ரூ.10 ஆயிரம் பந்தயம் கட்டி 5 பாட்டில் மதுபானத்தை குடித்த 21 வயதே ஆன வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    21 வயது ஆன கார்த்திக் என்ற வாலிபர் தனது நண்பர்களான வெங்கட ரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட 5 பேரிடம் மதுவில் தண்ணீர் கலக்காமல் ஐந்து முழு பாட்டில் மதுபானத்தை குடிக்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து வெங்கட ரெட்டி, கார்த்திக்கிடம் ரூ.10 ஆயிரம் பந்தயம் கட்டியுள்ளார். இதனை தொடர்ந்து 5 பாட்டில் மதுபானத்தை குடித்த கார்த்திக்கின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கார்த்திக்கிற்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகும் நிலையில், அவருக்கு 8 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது.

    கார்த்திக் உயிரிழந்தது தொடர்பாக வெங்கட ரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட 6 பேர் மீது நங்கலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

    • புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரூர்:

    தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி தாளமுத்து நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் புவனேஷ் (வயது 18). கட்டிட தொழிலாளி.

    இவர் கடந்த 17-ந்தேதி நண்பர்கள் முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரிக்கு மலையேறுவதற்காக வந்தார்.

    மலை உச்சியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு பின்னர் அவர்கள் மீண்டும் கீழே இறங்கி வந்தனர். 7-வது மலை உச்சியில் இருந்து கீழே வந்த போது புவனேசுக்கு எதிர்பாராதவிதமாக கால் இடறியது. நிலை தடுமாறிய புவனேஷ் 10 அடி ஆழமுடைய பள்ளத்தில் விழுந்தார்.

    இதில் அவரது இடது காது மற்றும் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சுமை தூக்கும் பணியாளர்கள் டோலியுடன் அவசர, அவசரமாக மலையேறி சென்றனர். புவனேசை டோலி மூலம் மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஷ் பலியானார்.

    புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டனர்.
    • உயிரிழந்த அசோக்குமார் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடையம்:

    சென்னையை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    தீபாவளி விடுமுறையையொட்டி இவர் காரில் தனது நண்பர்களான சென்னையை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் அசோக்குமார், ஆசிக் ஆகியோருடன் காரில் நெல்லைக்கு வந்தார்.

    நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் சுற்றுலா சென்ற அவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை அங்கிருந்து கடையம் வழியாக குற்றாலத்திற்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டனர். காரை அசோக்குமார் ஓட்டினார். அதிகாலை 4 மணி அளவில் கடையத்தை அடுத்த முதலியார்பட்டி அருகே கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்து புளியமரத்தில் மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அந்த இடிபாட்டில் காரை ஓட்டி வந்த அசோக்குமார் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த அவரது நண்பர்களான மற்றொரு அசோக்குமார், ஆசிக் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டனர். மேலும் உயிரிழந்த அசோக்குமார் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மற்றொரு அசோக்குமார் மற்றும் ஆசிக் ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • பைக்குடன் தூக்கி வீசப்பட்டு பிரபு பலத்த காயமடைந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அணிச்சம்பாளையத்தை சேர்ந்த வர் நடராஜன். இவரது மகன் பிரபு (வயது 36). இவர் நேற்று பரமத்திவேலூர் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் பைக்கில் கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அணிச்சம் பாளையம் பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, மதுரையில் இருந்து பெங்களூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று பிரபுவின் மோட்டார் பைக் மீது மோதியது.

    இதில் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு பிரபு பலத்த காயமடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், பிரபுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பரமத்தி வேலூர் போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படும்.
    • லகுமேஸ் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் லகுமேஸ் (வயது 39), கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படும்.

    கடந்த 3 மாதத்திற்கு முன்பு இதேபோல ஏற்பட்ட தகராறில் லகுமேசின் மனைவி சத்யா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும் திரும்ப வரவில்லை. இதனால் மனமுடைந்த லகுமேஸ் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

    உடல் கருகிய நிலையில் நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து லகுமேசின் மனைவி சத்யா கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனது தாய் கண்முன்னே அருண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி நீரில் மூழ்கிய அருண் உடலை மீட்டனர்.

    சத்திரபட்டி:

    மதுரை மாட்டுத்தாவணியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் அருண்(வயது 28). இவர் மாட்டுத்தாவணியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான வீரம்மாள் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விஸ்வநாதன் நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதற்காக தன் தாயுடன் ஒட்டன்சத்திரம் வந்த அருண் துக்க நிகழ்வில் கலந்து விட்டு உறவினர்களுடன் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி தலையூற்று அருவியில் அஸ்தியை கரைக்கச் சென்றார். அஸ்தியை கரைத்து விட்டு அருவியில் குளிக்கச் சென்ற போது அருணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கி பலியானார்.

    தனது தாய் கண்முன்னே அருண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி நீரில் மூழ்கிய அருண் உடலை மீட்டனர். அதன்பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முந்திரி தோப்பில் வாலிபர் நிர்வாணமாக தூக்கில் தொங்கினார்
    • கொலையா-தற்கொலையா? என விசாரணை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு. இவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக தொங்கினார்.

    அவர் அணிந்திருந்த பேண்ட்டால் கழுத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக ஆடு மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தவரின் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எப்படி இங்கு வந்தார், எப்படி இறந்தார், அவரை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் பெயர், முகவரி ஏதுவும் தெரியாததால் போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் இறந்தவர் உடலை வைத்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை கள்ளிக்குடி அருகே மினிவேன் மோதி வாலிபர் பலியானார்.
    • சிவரக்கோட்டையில் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையை நடந்து கடக்க முயன்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள சிவரக்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன் மகன் அழகேசன்(22). இதே கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் கதிர்வேலு (22).

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் இவர்கள் இருவரும் சிவரக்கோட்டையில் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையை நடந்து கடக்க முயன்றனர்.

    அப்போது விருதுநகரில் இருந்து பலசரக்கு ஏற்றி கொண்டு மதுரை நோக்கி சென்ற மினிவேன் இவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வாலிபர்கள் அழகேசன், கதிர்வேலு இருவரில் வாலிபர் அழகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கதிர்வேலு படுகாய மடைந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் உயிரிழந்த வாலிபர் அழகேசன் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்து தப்பியோடி மினிவேன் டிரைவரை தேடிவருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலியானார்.
    • சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேசன் என்பவர் காரை ஓட்டி வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மாதவசேரியை சேர்ந்தவர் அமுதா (வயது 47). இவரது கணவனர் வேலு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு இறந்து போனார். இவர்களது மகன் முத்துசாமி (23) இவர் கச்சிராய பாளையத்திலிருந்து சின்ன சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.கணியாமூர் அருகே உள்ள உணவகம் அருகே சென்ற போது கள்ளக்குறிச்சி யில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேசன் என்பவர் காரை ஓட்டி வந்தார். இந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முத்து சாமியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து போன முத்துசாமியின் தாய் அமுதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×