என் மலர்
நீங்கள் தேடியது "Adolescent Sacrifice"
- ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
- சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் பலியான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பட்டுத்துறை சேலம்- சென்னை-விருதாச்சலம் ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் பலியான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த நபர் பட்டுத்துறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் (36) என்பதும் இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு செல்வதாக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து உயிரிழந்த சுந்தர்ராஜன் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சேலம்- சென்னை-விருதாச்சலம் ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி கிடந்தது.
- ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.
வாலிபர்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பட்டுத்துறை சேலம்- சென்னை-விருதாச்சலம் ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் பலியான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த நபர் பட்டுத்துறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் (36) என்பதும் இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு செல்வதாக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து உயிரிழந்த சுந்தர்ராஜன் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- லோகேஷ் (வயது 26). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
- 3 நாட்கள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திருச்செங்கோட்டிற்கு சென்னையில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வந்தார்.
ஆத்தூர்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மகன் லோகேஷ் (வயது 26). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு மதுமிதா என்ற மனைவியும் தர்ஷன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இவர் 3 நாட்கள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திருச்செங்கோட்டிற்கு சென்னையில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு விடுமுறை முடிந்த தால் இன்று அதிகாலை தனது மோட்டார்சைக்கிளில் திருச்செங்கோட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளார்.
ஆத்தூர் அருகே ராசிபுரம் -ஆத்தூர் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு ெரயில்வே மேம்பாலம் பணி நடை பெறுகிறது. மேம்பாலம் அமைப்பதற்காக அங்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் லோகேஷ் நிலைதடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- படுகாயம் அடைந்த பெருமாள், முருகன் ஆகியோா் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
- கருப்பசாமி மகன் ரமேஷ் பூபதி (27),பழனி மகன் முருகன் (45) ஆகியோா் உதவியுடன் சீரமைத்துக் கொண்டிருந்தாா்.
ஊத்துக்குளி:
செங்கப்பள்ளி சென்னிமலைபாளையம் புதுக்காலனியைச் சோ்ந்தவா் பெருமாள் (வயது 52), கேபிள் ஆபரேட்டா். அதே பகுதியில் சாய்ந்த நிலையில் கேபிள் கம்பம் இருந்துள்ளது. அதை அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ரமேஷ் பூபதி (27),பழனி மகன் முருகன் (45) ஆகியோா் உதவியுடன் சீரமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக கேபிள் கம்பம் மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3பேரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் ரமேஷ் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த பெருமாள், முருகன் ஆகியோா் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
- சேலம் சின்ன கொல்லப்பட்டி காந்தி தெரு பகுதி சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்தி.
- மாசி நாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே சென்றபோது பின்னால் வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் சின்ன கொல்லப்பட்டி காந்தி தெரு பகுதி சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்தி (வயது 21). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் இவரது நண்பர் அழகாபுரம் திருமூலர் தெரு பகுதியைச் சேர்ந்த வேலு மகன் தினகரன்(27) என்பவருடன் சேலம் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
மாசி நாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே சென்றபோது பின்னால் வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கார்த்தி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தினகரன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் தினகரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்த தகவலின் பெயரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த கார்த்தியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கந்தம்பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி, நிர்மல்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா. நல்லூர் அருகே பீச்சப்பாளையம் அருந்ததியர் காலணியைச் சேர்ந்தவர் நல்ல முத்து (வயது 55). இவரது மகன் நிர்மல் குமார்(27).
இவர் நேற்று மாலை கந்தம்பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பொருட்களை வாங்கிக் கொண்டு பரமத்தி-திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். கந்தம்பா ளையத்தில் உள்ள மில் அருகே சென்று கொண்டிருந்தபோது, திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி, நிர்மல்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த நிர்மல் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நிர்மல்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நல்லமுத்து நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குப்பம் பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணகுமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து தப்பியோடிய சரவணக்கு மாரை தேடி வருகின்றனர்.
- ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ராஜ்குமார் வேலை செய்து வருகிறார்.
- சித்தா காலேஜ் அருகே சென்று கொண்டி ருந்தபோது சாலையில் இருந்த மண்ணில் சிக்கி 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி கார் காடு பகுதி சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ஈரோட்டில் உள்ள ஒரு தனி யார் நிறுவனத்தில் ராஜ்கு மார் வேலை செய்து வரு கிறார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 8.30 மணி அளவில் ராஜ்குமார் ஒரு மோட்டார் சைக்கிளில் இளம்பிள்ளை அருகே உள்ள எருமாத்தனூர் பகுதியைச் சேர்ந்த வெங்க டாசல மகன் தமிழ்ச்செல்வன் (23),பெரு மாம்பட்டி ஏரிக்காடு பகுதி சேர்ந்த பரமசிவம் மகன் வைத்தீஸ்வரன்(18) ஆகி யோருடன் சித்தர் கோயில் மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
தனியார் சித்தா காலேஜ் அருகே சென்று கொண்டி ருந்தபோது சாலையில் இருந்த மண்ணில் சிக்கி 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜ்கு மார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் தமிழ்ச்செல்வன் மற்றும் வைத்தீஸ்வரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து புகாரின் பேரில் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து சங்ககிரிக்கு சென்று கொண்டிருந்தார்.
- கந்தம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்றபோது விஜயராகவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் அரிசி பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் விஜயராகவன் (வயது 29). டிரைவரான இவர், நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து சங்ககிரிக்கு சென்று கொண்டிருந்தார்.
கந்தம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்றபோது விஜயராகவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த விஜயராகவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொண்டலாம்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மஸ்தான் (42 ) என்பவரும் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்றார்.
- மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது நாமக்கல்லில் இருந்த வந்த தனியார் கல்லூரி பேருந்து அவர்கள் மீது மோதியது.
சேலம்:
சேலம் அன்னதா னப்பட்டி தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யூசுப்கான். இவரது மகன் அப்துல் கான் என்ற நிசார் (வயது 35). இவரும் இவரது நண்பர் லைன் மேடு பகுதியை சேர்ந்த மஸ்தான் (42 ) என்பவரும் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை நிசார் ஒட்டினார். பின்னால் மஸ்தான் அமர்ந்து இருந்தார்.
பின்னர் அவர்கள் வீடு திரும்பினார். அப்போது சன்னியாசிகுண்டு அருகே மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது நாமக்கல்லில் இருந்த வந்த தனியார் கல்லூரி பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அப்துல் கான் என்ற நிசார் இன்று காலை பரிதாபமாக இருந்தார். மஸ்தானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- பைக்குடன் தூக்கி வீசப்பட்டு பிரபு பலத்த காயமடைந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அணிச்சம்பாளையத்தை சேர்ந்த வர் நடராஜன். இவரது மகன் பிரபு (வயது 36). இவர் நேற்று பரமத்திவேலூர் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் பைக்கில் கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அணிச்சம் பாளையம் பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, மதுரையில் இருந்து பெங்களூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று பிரபுவின் மோட்டார் பைக் மீது மோதியது.
இதில் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு பிரபு பலத்த காயமடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், பிரபுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பரமத்தி வேலூர் போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாம்பழ வியாபாரம் செய்து வந்துள்ளார்.
- அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டும் வயிற்று வலி தீரவில்லை.
எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டம எருமப்பட்டி அருகே உள்ள சிங்களம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் மகாமுனி (வயது 44). மாம்பழ வியாபாரி. இவரின் சொந்த ஊர் கரூர் மாவட்டம் குளித்தலை மணத்தட்டை ஆகும். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரின் இளைய மகன் சந்தோஷ் (18) தந்தையுடன் மாம்பழ வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சந்தோஷ் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டும் வயிற்று வலி தீரவில்லை. இந்த நிலையில் சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவரது தந்தை மகாமுனி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சந்தோஷ் வீட்டில் இருந்த மாமரத்திற்கு அடிக்கும் மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சந்தோஷை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.