என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
    X

    மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் சின்ன கொல்லப்பட்டி காந்தி தெரு பகுதி சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்தி.
    • மாசி நாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே சென்றபோது பின்னால் வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் சின்ன கொல்லப்பட்டி காந்தி தெரு பகுதி சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்தி (வயது 21). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் இவரது நண்பர் அழகாபுரம் திருமூலர் தெரு பகுதியைச் சேர்ந்த வேலு மகன் தினகரன்(27) என்பவருடன் சேலம் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.

    மாசி நாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே சென்றபோது பின்னால் வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கார்த்தி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தினகரன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் தினகரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்த தகவலின் பெயரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த கார்த்தியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×