search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager killed"

    • கார் மோதி வாலிபர் பலியானார்.
    • செல்வகுமார் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி இந்திரா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (19). இவர் விருதுநகர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மகேந்திரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் நிலை தடுமாறி மகேந்திரன் கீழே விழுந்தார்.

    எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வகுமார் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வின்சென்ட்ராஜ் அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
    • வின்சென்ட் ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    சங்கராபுரம் அடுத்த தொண்டநந்தல் கிராமத்தை சேர்ந்த வின்சென்ட்ராஜ் (வயது 23). இவரது அண்ணன்கள் ராபர்ட்நஸ்ரின், பிரவீன்குமார் ஆவார். இவர்கள் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் நடைபெற்ற காதணி விழாவில் வின்சென்ட்ராஜ் அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி வின்சென்ட்ராஜ் தூக்கி வீசப்பட்டார்.

    உடன் அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வின்சென்ட் ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ராபர்ட்நஸ்ரின் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிரா மத்தை சேர்ந்தவர் கலை வாணன்
    • வண்டு ராயன்பட்டு சாலையில் சென்றார்

    கடலூர்:

    புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிரா மத்தை சேர்ந்தவர் கலை வாணன் (வயது 26). தவில் வாசிப்பவர். இவர் நேற்று இரவு புவன கிரிக்கு சென்று, இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது வண்டு ராயன்பட்டு சாலையில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கலைவாணன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    அவ்வழியே சென்ற வர்கள் இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கலைவாணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்ற னர்.

    • நேற்று இரவு புதுவையில் இருந்து ஜெகநாதபுரத்திற்கு இ.சி.ஆர். சாலை வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • புதுவை நோக்கி எதிரில் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம ்மரக்காணம் அருகே ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஹீரா சந்த் (வயது 20). இவரும் இவரது அக்கா வீட்டுக்காரர் சதீஷ்குமார் (27) ஆகிய இருவரும் நேற்று இரவு புதுவையில் இருந்து ஜெகநாதபுரத்திற்கு இ.சி.ஆர். சாலை வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஒட்டி வந்தார்.

    மரக்காணம் அருகே செட்டி நகர் சாலையில் வந்தபோது புதுவை நோக்கி எதிரில் வந்த கார் மோட்டார சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹீரா சந்த் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் சாலையில் கிடந்த சதீஷ்குமாரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மரக்காணம் போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் பலியான ஹீரா சந்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராயர் விருத்தாசலம் அருகே நாச்சியார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.
    • திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கடலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நத்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ராயர் (வயது 42). இவர் விருத்தாசலம் அருகே நாச்சியார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை 5:30 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் அருகே ராயர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராயர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 45 பேருடன் சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது.
    • லாரி திடீரென முன்னாள் சென்ற சுற்றுலா பஸ்சின் பின்பக்கம் மோதியது.

    கடலூர்:

    ஆந்திராவில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் வரை ஆன்மிக சுற்றுலா செல்ல 45 பேருடன் சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சினை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த நரசிங்கப்பள்ளியை சேர்ந்த கணேஷ் (வயது 25) என்பவர் ஓட்டிவந்தார்.இந்த பஸ் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி கூட்ரோடு அருகே இன்று அதிகாலை வந்தது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பஸ்சின் பின்னால் வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டம் கடமை நேந்தலை சேர்ந்த ஆரோக்கியசாமி (56) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    இந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்ற சுற்றுலா பஸ்சின் பின்பக்கம் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த அணில் (18) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது டேங்கர் லாரியில் இருந்து ஆசிட் வெளியேறியதால் அந்த பகுதியில் கண் எரிச்சலும், மூச்சு திணறல் ஏற்பட்டது. அப்பகுதியே புகை மண்ட லமாக மாறியது. இதனால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

    உடனடியாக தீயணைப்பு துறையினர் வர வழைக்கப்பட்டனர். அவர்க ளுடன் சேர்ந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த சுற்றுலா பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கு தீயணைப்பு படையினர் தண்ணீரை பிய்ச்சி அடித்தனர். சாலையில் இருந்த ஆசிட் சாலையோரம் ஓடியது. விபத்தில் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ராமநத்தம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஸ்ரீகாந்த் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • 3 பேருக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரெட்டணை அய்யனாரப்பன் கோயில் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்(23) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் ரஜினி, நவீன் மற்றும் நாகந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து பெரிய தச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ேபாலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 4 பேரும் மது அருந்தி இருந்ததும் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்தில் பலியான ஸ்ரீ காந்த்திற்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. ஸ்ரீகாந்தின் குழந்தைக்கு வருகிற 28-ந் தேதி முதல் பிறந்தநாள் கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கோகுல் தனது நண்பர்களுடன் சுங்கச்சாவடி அருகே யுள்ள கடைக்கு சென்று டீ அருந்தினார்.
    • கோகுலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை புதுத்தெருவைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 19). இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் 3 மோட்டார் சைக்கிளில், நேற்று நள்ளி ரவு சுங்கச்சாவடி அருகேயுள்ள கடைக்கு சென்று டீ அருந்தினார். அங்கிருந்து உளுந்தூர் பேட்டை அன்னை நகரைச் சேர்ந்த சதீஷை மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு வீடு திரும்பினார். இவர்கள் உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையம் அருகில் வந்த போது எதிரில் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலைதடு மாறிய மோட்டார் சைக்கிள் அருகிலிருந்த தடுப்புக் கட்டையில் மோதியது.

    இவர்களின் பின்னால் வந்த மற்ற நண்பர்கள் விபத்துக் குள்ளான கோகுல், சதீஷ் ஆகியோரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கோகுலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதீஷை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீ சார் விபத்து குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் நள்ளிரவு நேரங்களில் சுங்கச்சாவடி அருகே உள்ள கடைக்கு சென்று டீ அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ள னர். அவ்வாறு செல்பவர்கள் ெஹல்மெட் அணியாமல் செல்வதால், விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டு மென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பாரூக் தனது மோட்டார் சைக்கிளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பிற்கு சென்றார்.
    • விபத்தில் பாரூக் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் கருமர மேஸ்திரி தெருவை சார்ந்த ரகீம் பேக் மகன் பாரூக் 27, தி.மு.க 8-வது வார்டு பிரதிநிதி அன்சாரி மகன் முகமது ரியாஸ் (19) பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் பாரூக் தனது மோட்டார் சைக்கிளில் முகமது ரியாசை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு நேற்று சேலத்தில் இருந்து விழுப்புரம் வருகை புரிந்த விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பிற்கு சென்றார்.

    அரசூரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இரவு 9 மணி அளவில் திருவெண்ணைநல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசூர் தனியார் பங்க் அருகே செல்லும் பொழுது அரசூர் இந்திரா நகரை சார்ந்த புனிதவதி (40) சாலையை கடக்க முயன்ற போது பாரூக் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புனிதவதி மீது மோதி கீழே விழுந்தது. இதில் பாரூக் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காய மடைந்த பாரூக் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு இன்று அதிகாலை அனுப்பி வைத்தனர். அங்கு வரும் வழியிலேயே பாரூக் இறந்து விட்டதாக தெரிவித்த னர். இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காயமடைந்த முகமது ரியாஸ், புனிதவதி ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • மதுரை அருகே நடந்த விபத்தில் பைக்கில் வந்த வாலிபர் பலியானார்.
    • இந்த சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள வலையங்குளம் நெடுமதுரையை சேர்ந்தவர் அழகு (வயது 48). நேற்று காலை இவர் அதே பகுதியை சேர்ந்த மொக்கை என்பவருடன், மோட்டார் சைக்கிளில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்றார்.

    பின்னர் திருமங்கலம் ரிங்ரோடு-நிலையூர் ரோட்டில் திரும்பியபோது திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் இருவரும் காயமடைந்தனர். தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் அழகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அழகு மனைவி பெரிய அழகி கொடுத்த புகாரின்பேரில் சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் ஷேக் தாவூத்தை கைது செய்தனர்.

    • பெரியசாமி (வயது 35). இவர் கீழக்குறிச்சி கிராமத்தில் இருந்து வேப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • இவர் சென்ற போது எதிரே வந்த டிராக்டர் டிப்பர் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் பெரியசாமி (வயது 35). இவர் நேற்று மாலை வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தில் இருந்து வேப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். காட்டுமைலூர் சிவன் கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டர் டிப்பர் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் உயிரிழந்த பெரியசாமியின் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவரும் இவரது நண்பர் வானூரை சேர்ந்த வேல்முருகன் (18), இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திண்டிவனத்தில் இருந்து வானூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்
    • எதிரே வந்த ட்ராக்டரில் மோதி இரண்டு பேரும் பலத்த காயமடைந்தன ர்

    விழுப்புரம்:

    புதுச்சேரி மாநிலம் சந்தை புது குப்பத்தை சேர்ந்த பாவாடை ராயன் (வயது 27) இவரும் இவரது நண்பர் வானூரை சேர்ந்த வேல்முருகன் (18), இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திண்டிவனத்தில் இருந்து வானூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரி திண்டிவனம் நான்கு வழி சாலை தென்கோடி பாக்கம் மெயின் ரோட்டில் வரும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ட்ராக்டரில் மோதி இரண்டு பேரும் பலத்த காயமடைந்தன ர். காயம் அடைந்தவர்களை கிளியனூர் போலீசார் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனிக்காமல் பாவாடைராயன் இறந்தார் .மேலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் சிகிச்சை பலனிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து கிளியனூர் சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    ×