சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

தனது இருசக்கர வாகனத்தில் கெடிலம் கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் வட்டம் பிரிவிடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மகன் கார்த்தி (வயது 28). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கெடிலம் கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காட்டு செல்லூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ், மற்றும் சிபிராஜ் என்பவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். எதிர்பாராதவிதமாக கார்த்திக் இருசக்கர வாகனமும், எதிரே வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார்த்தி மற்றும் எதிரே வந்த தினேஷ், மற்றும் சிபிராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக தினேஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சிபிராஜ் சென்னை மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்ட னர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com