கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி வாலிபர் பலி

கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களை அக்ராய பாளையத்திற்கு விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி வாலிபர் பலி
Published on

சின்னசேலம், ஜன. 14-

கள்ளக்குறிச்சி வி.ஓ.சி.நகரை சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவர் கள்ளக்குறிச்சியில் உள்ள லேத்து பட்டறையில் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று வேலையை முடித்துவிட்டு தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களை அக்ராய பாளையத்திற்கு விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அக்ராய பாளையத்தில் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக இரவு 10.30 அக்கரா பாளையத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் சாலையில் முத்தையா மில் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது புதுப்பல்லக் கச்சேரி ஊரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு கச்சிராயபாளையம் நோக்கி வந்து வந்தவர் எதிர்பாராத விதமாக சாகுல் ஹமீத் சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த அடிப ட்டார் பின்னர் அடிபட்டு கீழே கிடந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ள க்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது பின்னர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com