என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ேமாட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து:  பாலத்திற்காக தோண்டப்பட்ட  பள்ளத்தில் விழுந்த வாலிபர் பலி
    X

    ேமாட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து: பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த வாலிபர் பலி

    • அக்கினி குரால் கிராமத்திற்கு அருகே உள்ள கூகையூர் கிராமத்திற்கு மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றார்.
    • இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குரால் கிராமத்தைச் சேர்ந்தவர் மதுமதி (வயது 22) இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அக்கினி என்பவருடன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மதுமதி 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அக்கினி குரால் கிராமத்திற்கு அருகே உள்ள கூகையூர் கிராமத்திற்கு மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றார். அப்பொழுது பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக அக்கினி சென்ற இருசக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×