என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருசக்கர வாகனம்"

    • பைக்கின் பின் சீட்டில் உட்கார்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
    • ஹெல்மெட் அணியவில்லை என்றால் சிசிடிவி கேமரா அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.

    சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர் மட்டுமில்லாமல் பின்னாடி உட்கார்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

    பின்னாடி உட்காருபவர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் சிசிடிவி கேமரா அடிப்படையில் தன்னிசையாக அபராதம் விதிக்கப்படும்.

    இந்நிலையில், பெங்களூரு நகரில் போக்குவரத்து அபராதத்தில் இருந்து தப்பிக்க ஹெல்மெட்டுக்கு பதில் பாத்திரத்தால் தலையை மூடிய இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • ஹெல்மெட்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) தரநிலைகளுக்கு இணங்கி இருக்க வேண்டும்.
    • ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்வதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், புதிய வாகனங்களை விற்கும் போது இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

    மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இல் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களின் இந்த புதிய விதி சேர்க்கப்பட உள்ளது.

    அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த விதி நடைமுறைக்கு வரும். ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிக்கும் இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது இதன் நோக்கம்.

    வழங்கப்படும் ஹெல்மெட்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) தரநிலைகளுக்கு இணங்கி இருக்க வேண்டும். இருப்பினும், மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129 இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

    ஹெல்மெட் விதியுடன் கூடுதலாக, ஜனவரி 1, 2026 முதல், 50 சிசி-க்கு மேல் எஞ்சின் திறன் அல்லது 50 கி.மீ/மணிக்கு மேல் அதிகபட்ச வேகம் கொண்ட மோட்டார் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் உட்பட அனைத்து புதிய L2 வகை இருசக்கர வாகனங்களுக்கும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்வதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த ABS திடீர் பிரேக்கிங்கின் போது வாகனத்தின் கட்டுப்பாட்டை மேம்படுத்தி சறுக்குவதைத் தடுக்கும்.

    இந்த முன்மொழியப்பட்ட விதிகள் குறித்து தற்போது பொதுமக்கள் கருத்துக்கள் வரவேரிக்கப்டுகின்றன. பொதுமக்கள் கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 

    • அடுத்த சில நிமிடங்களிலேயே பைக் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை பட்டினப்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பைக்கில் இருந்து திடீரென புகை கிளம்பியது.

    இதைப் பார்த்த பைக்கை ஓட்டி வந்த நபர் சுதாரித்துக்கொண்டு, உடனடியாக பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு தூரமாக சென்றார். அடுத்த சில நிமிடங்களிலேயே பைக் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

    இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து, வாகனத்தை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.

    இந்த நிகழ்வால் பட்டினப்பாக்கம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜெயச்சந்திரன் தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
    • இரவு பணியை முடித்து விட்டு வந்து பார்க்கையில் அவரது வாகனம் திருடு போனது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன். இவர் திண்டிவனம் மயிலம் ரோட்டில் உள்ள தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்இருசக்கர வாகனம் நிறுவனம் எதிரே தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். இரவு பணியை முடித்து விட்டு வந்து பார்க்கையில் அவரது வாகனம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து திண்டிவனம் போலீசாரிடம் ஜெயச்சந்திரன் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்துமர்ம நபர்களை வலை வீசிதேடி வருகின்றனர்.

    • மாலை அணிந்து விட்டு அங்கு வந்த அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததாக போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம்
    • போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட்டு விட்டு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி,:

    அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். இதையொட்டி கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் மாலை அணிய வந்த அய்யப்ப பக்தர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள முக்கோண வடிவ பூங்கா முன்பு நிறுத்தி வைத்துவிட்டு கடலில் புனித நீராடுவதற்காக கடற்கரைக்கு சென்றனர்.

    இதற்கிடையில் கடலில் புனித நீராடி மாலை அணிந்து விட்டு அங்கு வந்த அய்யப்ப பக்தர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததாக போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்து இருப்பதாக கூறினார்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த அய்யப்ப பக்தர்கள் போக்கு வரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் குமரி மாவட்ட பா.ஜ.க. பொருளாதாரப் பிரிவு தலைவரும், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலருமான சி.எஸ்.சுபாஷ் தலைமையில் பா.ஜ.க.வினரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் அய்யப்ப பக்தர்களும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை சுற்றி வளைத்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட்டு விட்டு அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.

    • மாவட்டம் முழு வதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் நட மாட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழு வதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையும் நடத்தி வரு கின்றனர்.

    இதையொட்டி இரணியல் சப்- இன்ஸ் பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் காரங்காடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்த கூறிய போது நிற்காமல் சென்றார்.

    அதனால் போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்றவரை விரட்டி சென்ற போது வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அனுமதி இன்றி 69 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது

    அதனை பறிமுதல் செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நபரை தேடி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே தச்சூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல்.அவரது மனைவி பெரியம்மாள் (வயது 75). இவர் நேற்று இரவு தனது காட்டுக் கொட்டையின் முன்பு படுத்திருந்தபோது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் மீது மோதி சென்ற இருசக்கரவாகனம் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்றார்.
    • இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி தோப்புகொல்லை வடக்கு தெருவை சேர்ந்தவர்சுப்பிரமணியன். இவர் மோட்டார் சைக்கிளில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டிஅர சுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • வக்பு நிறுவன பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 180 வக்பு நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள், அடக்க தலங்கள், தைக்காக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் மானிய விலையில் 125 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்குவதற்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

    வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணி புரியும் உலமா நலவாரிய உறுப்பி னர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 45 வயதுக்குள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய கலெக்டர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உறுப்பினர் செயலர் கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பின ராகவும் மற்றும் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப் பாளர் உறுப்பினராகவும் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும்.

    மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற மனுதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரி டம் பெற்ற சான்று, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கு வக்பு கண்காணிப்பாளரின் சான்று மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப் பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
    • பல்லடம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்னிகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரது மகன் ஞானப்பிரகாசம் (வயது 30).இவர் சம்பவத்த ன்று பல்லடத்தில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் ஒரு கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.திரும்பி வந்து பார்த்தபோது அவ ரது மொபட்டை காணவி ல்லை.

    இது குறித்து பல்லடம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்டு காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு எவராலும் உரிமை கோரப்படாத 79 இருசக்கர வாகனங்கள் வருகிற 17- ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அணுகி அங்கு ஏலத்தில் விட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்.

    வாகனங்களை பார்வையிட விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்றோ அல்லது ஏலம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வரை வாகனங்களை பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்குள் முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஆதார் அடையாள அட்டையுடன் முன்வைப்பு தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவாள் மட்டும் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் ஏலம் நடக்கும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தை அவர்களது முழு பொறுப்பில் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    • வீட்டின் முன் நின்ற இருசக்கர வாகனம் திருட்டுபோனது
    • போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன பைக்கை தேடி வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் ஜமீன் குளத்தூர் ரவிச்சந்திரன் மகன் குமார்(வயது26).இவர் கயர்லாபாத் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி கட்டுமான பணி சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இவரது இருசக்கர வாகனம் இல்லாததை கண்டுஅதிர்ச்சியடைந்ார். இச்சம்பவம் தொடர்பாக கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனில் குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பைக்கை தேடி வருகின்றனர்.

    ×