என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old woman killed"

    • அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே தச்சூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல்.அவரது மனைவி பெரியம்மாள் (வயது 75). இவர் நேற்று இரவு தனது காட்டுக் கொட்டையின் முன்பு படுத்திருந்தபோது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் மீது மோதி சென்ற இருசக்கரவாகனம் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கவுண்டன்புதூரை சேர்ந்தவர் மகாளி சம்பவத்தன்று புதூர் ரோட்டில் நடந்து சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத காரை தேடி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி நாச்சியம்மாள் (வயது 62).

    சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சி- பல்லடம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நாச்சியம்மாளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழப்பை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.

    கவுண்டன்புதூரை சேர்ந்தவர் மகாளி (70).

    சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சி -கோவை மெயின் ரோட்டில் நஞ்சேகவுண்டன் புதூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் மகாளி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மகாளி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத காரை தேடி வருகிறார்கள்.  

    • தியாகராஜன் நேற்று தனது மனைவியுடன், புதுக்கோட்டை மாவட்டம், நெய்குப்பையிலிருந்து, (டி.ஹூண்டாய் காரில் புறப்ப ட்டார்.
    • மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    கடலூர்:

    சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் நேற்று தனது மனைவியுடன், புதுக்கோட்டை மாவட்டம், நெய்குப்பையிலிருந்து, (டி.ஹூண்டாய் காரில் புறப்ப ட்டார். காரை சென்னை, குன்றத்தூரைச் சேர்ந்த சண்முகம், ஓட்டினார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த ஐவதுகுடி பஸ் நிறுத்தம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில், சென்னை, ஆழ்வா ர்பேட்டையைச் சேர்ந்த தியாகராஜன் மனைவி மீனாட்சி, (வயது 60) அதே இடத்தில் இறந்தார்.

    மேலும், தியாகராஜன், அவரது வீட்டு சமைய ல்காரர் சென்னை ஆழ்வா ர்பேட்டை சேர்ந்த சேவ கன், கார் டிரைவர் சண்மு கம், ஆகியோர் காயம டைந்தனர். அனைவரும் வேப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை சேர்க்க ப்பட்டு, மேல் சிகிச்சை க்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • மர்ம நபர்கள் கொலை செய்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
    • சரோஜினியின் வீட்டில் கோரைப்பாய் வியாபாரிகள் சிலர் வாடகைக்கு இருந்துள்ளனர். அவர்கள் சரோஜினி கொலையுண்ட பிறகு தலைமறைவாகி உள்ளனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே பள்ள பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜினி (வயது 82). கடந்த 4-ந் தேதி இவரை மர்ம நபர்கள் கொலை செய்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    சரோஜினியின் வாய், கை, கால்களை பேக்கிங் டேப்பால் ஒட்டி கொள்ளையர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு ள்ளனர். சரோஜினியை கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    சரோஜினியின் வீட்டில் கோரைப்பாய் வியாபாரிகள் சிலர் வாடகைக்கு இருந்துள்ளனர். அவர்கள் சரோஜினி கொலையுண்ட பிறகு தலைமறைவாகி உள்ளனர். இதனால் போலீசார் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்து வருகிறார்கள்.

    இதற்காக அவர்களது சொந்த ஊரான தர்மபுரிக்கு சென்று போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். கொலை செய்யப்பட்ட பகுதிக்கு அருகில் கண்காணிப்பு காமிராக்கள் இல்லா ததால் கொலையாளியை அடையாளம் காண போலீசார் மிகவும் சிரமமான சூழ்நிலையில் திணறி வருகின்றனர். இதில் பழைய குற்றவாளிகள் யாரேனும் உள்ளனரா என விசாரித்து வருகின்றனர்.

    சரோஜினி கொல்லப்பட்ட அதே நாளில் கோவை ஆர்.எஸ். புரத்தில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்த மர்ம நபர், முதியவரை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். முதியவரை கட்டிப் போட்ட நபரும் பேக்கிங் டேப் பயன்படுத்தி இருந்தார். முதியவரின் வாயை டேப் கொண்டு கட்டியிருந்தனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை கண்ணம்பாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியை இரு மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியின் வாயை பொத்தி கட்டி போட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த மூதாட்டி தைரியமாக திருடர்களை எட்டி உதைத்ததில் ஒரு திருடன் கீழே விழுந்தவுடன் பயந்து போய் இருவரும் அப்பகுதியை விட்டு தப்பி ஓடி விட்டனர். மூதாட்டியிடம் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் இந்த சம்பவம் பற்றி புகார் தரப்படவில்லை.

    இதனால் முதியவர்களை குறி வைத்து நகை, பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் கோவையில் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. சரோஜினி கொலை உள்ளிட்ட அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்களிலும் ஒரே கும்பலைச் சேர்ந்த வர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    இந்த கும்பலுடன் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முதியவர்களை அந்த பெண் முதலில் சந்தித்து பேசுவது, அதன்பிறகு மற்ற நபர்கள் புகுந்து தங்கள் திட்டத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. இதுதொடர்பாகவும் போலீ சார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். 

    • 12 பவுன் நகை கொள்ளை
    • 2 தனிப்படை தீவிரம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குன்னத்தூர் அனுமன்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்பாவு மனைவி காந்தா (வயது 65). இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. இதில் முதல் மகன் சரவணகுமார் (46) மற்றும் இவருடைய மனைவி சுபா ஆகியோர் பக்கத்து கிராமமான காமராஜர் நகர் பகுதியில் உள்ள நிலத்தை பார்த்துக் கொள்ள சென்று விட்டனர்.

    இந்த நிலையில் தனியாக காந்தா வீட்டில் இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மர்ம நபர்கள் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பட்ட பகலில் வீட்டில் உள்ளே புகுந்து காந்தாவின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகை கொள்ளை அடிக்க முயன்றனர்.

    அப்போது மூதாட்டி கூச்சல் போடவே மர்ம கும்பல் மூதாட்டியை தாக்கி கீழே தள்ளி சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை வைத்து கொலை செய்துவிட்டு மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயின் மற்றும் கையில் அணிந்து இருந்த 5 பவுன் வளையல் என மொத்தம் 12 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    இது குறித்து தகவலறிந்ததும் சம்பவம் இடத்திற்கு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா திருப்பத்தூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகணேஷ் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இது குறித்து மூதாட்டி மகன் சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மர்ம நபர்களை பிடிக்க திருப்பத்தூர் டிஎஸ்பி கணேஷ் மற்றும் வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட போவதாகவும் மேலும் சந்தேகத்தின் பேரில் 4 பேரையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் ஏதேனும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர் என முதற்கட்டமாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மூதாட்டியை கொன்று நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரை அடுத்த காவூர் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது90). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    சுப்பிரமணியன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சீதாலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை சீதாலட்சுமி வெகுநேர மாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டில் இருந்த கட்டிலில் சீதாலட்சுமி இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டனர். சீதாலட்சுமி உடல்நல குறைவு காரணமாக இறந்ததாக கருதி அவரை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.

    அப்போது சீதாலட்சுமியின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதையும், அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருப்பதையும் உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கடையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சீதா லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சீதாலட்சுமி அணிந்திருந்த 30 கிராம் தங்க நகைகள் இல்லாததால் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    நேற்று இரவு வரை அப்பகுதியினர் சீதாலட்சுமியை பார்த்துள்ளனர். இதனால் கொலையாளிகள் நள்ளிரவு நேரத்தில் அவரது வீடு புகுந்து கொலையில் ஈடுபட்டிருக்கின்றனர். சீதாலட்சுமி கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரை கொன்றது யார்? என்பதை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த கொலை சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் அருகே அடுப்பில் சுடுதண்ணீர் போட்டபோது சேலையில் திடீரென தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேலாயுதம் பாளையம்:

    கரூர் மாவட்டம், புகளூர் பசுபதிநகரை சேர்ந்தவர் நாச்சியம்மாள் (வயது 76). இவர் குளிப்பதற்காக தரை மட்டத்தில் உள்ள அடுப்பில் சுடுதண்ணீர் போட்டார். அப்போது அவர் கட்டியிருந்த சேலையில் திடீரென தீப்பிடித்து உடல் முழுவதும் எரிய ஆரம்பித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறினார். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நாச்சியம்மாள் மீது பற்றிய தீயை அணைத்தனர்.

    பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நாச்சியம்மாள் உயிரிழந்தார். 

    இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கொடுமுடி அருகே பணத் தகராறில் மூதாட்டியை கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டைபுதூரை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி அருக்காணி (வயது 70). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது.

    அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த 10-ந் தேதி அவரது கணவர் முத்துசாமி தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டில் அருக்காணி மட்டும் இருந்தார். 11-ந் தேதி காலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலை, வாய், மூக்கு பகுதியில் காயம் இருந்தது.

    கட்டிலில் பிணமாக கிடந்த அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்த சென்றிருப்பது தெரியவந்தது. தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலையாளியை பிடிக்க கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், பெருந்துறை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் துரைசாமி ஆகி யோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர். கொலையுண்ட அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் அதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் கொடுமுடி அருகே உள்ள வருந்தியாபுரம் என்ற இடத்தில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் குப்பம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (54) என்பவர் தனது மகன் நவீன்குமாருடன் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    போலீசாரிடம் மாரிமுத்து முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மாரிமுத்துவிடம் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர்.

    அப்போது மூதாட்டி அருக்காணியை கொலை செய்ததாக மாரிமுத்து ஒப் புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    விவசாயியான மாரிமுத்துவுக்கு 1½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலங்களுக்கு மருந்து அடிக்கும் தொழிலையும் மாரிமுத்து செய்து வந்தார்.

    தொழில் செலவுக்காக கடனுக்கு அருக்காணியிடம் மாரிமுத்து பணம் வாங்கி உள்ளாராம். இந்த நிலையில் அவருக்கு மேலும் பணம் தேவைப்பட்டு உள்ளது. எனவே கடந்த 10-ந் தேதி இரவு அருக்காணியின் வீட்டுக்கு மாரிமுத்து சென்றார்.

    அங்கு அருக்காணியிடம் மாரிமுத்து பணம் கேட்டார். ஆனால் பணம் கொடுக்க அருக்காணி மறுத்துள்ளார். ‘‘ஏற்கனவே வாங்கிய பணத்தை கொடு. அப்போதுதான் மீண்டும் பணம் தருவேன்’’ என்று அருக்காணி கூறியுள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மாரி முத்து அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து அருக்காணியை தாக்கி கொலை செய்துள்ளார்.

    பின்னர் அருக்காணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை (தாலிக் கொடி) பறித்துக் கொண்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அருக்காணியின் தாலிக் கொடியில் 4 பவுன் தாலிச் செயினை வங்கியில் மாரிமுத்து அடமானம் வைத்து ரூ. 65 ஆயிரம் பெற்றுள்ளார். தாலியை வீட்டில் வைத்திருந்தார். இந்த தகவல் அறிந்த போலீசார் தாலியையும், தாலிச்செயினையும் கைப்பற்றினர்.

    மூதாட்டி கொலை வழக்கில் கைதாகியுள்ள மாரிமுத்துவுக்கு செல்வி (46) என்ற மனைவியும், நவீன்குமார் என்ற மகனும், மகாலட்சுமி (28), ஆனந்தி (21) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

    மகள்களுக்கு திருமணமா கிவிட்டது. நவீன்குமார் சித்தோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.எம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஓமலூர் அருகே பயங்கரம் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர், பாலிக்கடை மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். (வயது 65). ஆடு வியாபாரம் மற்றும் கறிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி(60). இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

    நேற்று அதிகாலை வீட்டின் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமியை மர்மநபர்கள் தாக்கி, அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த லட்சுமி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் நகைக்காக மூதாட்டி லட்சுமியை மர்ம நபர்கள் திட்டுமிட்டு கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

    இதை பற்றிய பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    கொலையுண்ட லட்சுமியின் கணவர் சின்னப்பையனுக்கு ஆடு வியாபாரம் மற்றும் கறிக்கடை தொழில் மூலம் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமாக ஊரில் நிலமும் உள்ளது.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, சின்னப்பையன் வீட்டை அவர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.அதிகாலையில் சின்னப்பையன் ஆடுகள் வாங்க வெளியூர் சந்தைகளுக்கு செல்வது வழக்கம். இதை மர்ம நபர்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.

    அதுபோல் அவரது வீட்டில் யார்? யார்? உள்ளனர். அவர்கள் எங்கு வேலை பார்க்கிறார்கள். தற்போது வீட்டில் யாரெல்லாம் வசிக்கிறார்கள்? என்பதெல்லாம் கண்காணித்து தெரிந்து கொண்டு உள்ளனர்.

    இதையடுத்துத்தான் நேற்று அதிகாலை சின்னப்பையன் வீட்டின் வெளியே மர்ம நபகள் பதுங்கி இருந்துள்ளனர்.

    அதிகாலை 4.15 மணிக்கு சின்னப்பையன் ஆடு வாங்க கிருஷ்ணகிரி மாவட்டம் கொந்தாரப்பள்ளிக்கு புறப்பட்டார். அவரை லட்சுமி வழியனுப்பி விட்டு வராண்டாவில் உள்ள கட்டிலில் தூங்கினார்.

    அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து லட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர். அவர் சத்தம் போடவே, தலையில் பலமாக தாக்கினர். இதில் அவர் மயங்கி சுருண்டு விழுந்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்து விட்டதாக அவரது உறவினர்கள் நினைப்பார்கள் என்று கருதி லட்சுமியை கட்டிலில் போட்டு விட்டு, மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    காலை 6.15 மணிக்கு காபி கொடுக்க வந்த மருமகள் தனது மாமியார் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அவரை எழுப்பி பார்த்தார். ஆனால் எழுந்திருக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த மருமகள், இது பற்றி கணவர், மாமனார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள் அங்கு வந்து லட்சுமியை வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக மாமாங்கம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது தலையில் பலமாக அடித்துள்ளதால், உள்காயம் ஏற்பட்டு சுய நினைவு இழந்திருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் என்பது தெரியவந்தது.

    பாகூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்து போனார்.

    பாகூர்:

    பாகூர் அருகே சின்ன கரையாம்புத்தூரை சேர்ந்த வர் நாகலிங்கம். இவரது மனைவி தெய்வநாயகி (வயது 73). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகலிங்கம் இறந்து விட்டார்.

    இதையடுத்து தெய்வநாயகி தனது மகன் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தெய்வநாயகி தனது பேத்தி அபிராமி (21)யுடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் நாய் ஒன்று வேகமாக குறுக்கே பாய்ந்ததால் அதன் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருக்க அபிராமி திடீர் பிரேக் போட்டார்.

    இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடு மாறி தெய்வநாயகி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தெய்வநாயகியை அவரது குடும்பத்தினர் மீட்டு பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை தெய்வநாயகி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டில் இருந்த மூதாட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் உள்ள புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் வைரவன். இவர் காரைக்குடியில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளஞ்சியம் (வயது 60). இவர்களது மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    வைரவன் தினமும் வேலை முடிந்து வீட்டு இரவு 10 மணிக்கு தான் வீடு திரும்புவார். இதனால் பெரும்பாலான நேரங்களில் இளஞ்சியம் வீட்டில் தனியாகவே இருப்பார்.

    இந்த நிலையில் நேற்று இரவு போல வேலை முடிந்து வைரவன் வீடு திரும்பினார். அப்போது வீட்டிக்கு இளஞ்சியம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் இரும்பு கம்யியால் தாக்கப்பட்டிருந்த அடையாளம் இருந்தது.

    மனைவி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த வைரவன் உடனே அழகப்பாபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ் பெக்டர் ஆத்மநாதன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இளஞ்சியத்தின் நகைகள் வீட்டின் பின்புறத்தில் சிதறி கிடந்தன.

    இதனால் நகைக்காக கொலை செய்யப்பட்டது போல் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இளஞ்சியம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.

    பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள நல்லான்விளை தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி முத்துக்கிளி (வயது 75) இவர் தனக்கு மாத்திரை வாங்குவதற்காக நேற்று மூக்குப்பீறி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

    பின்னர் மாத்திரை வாங்கி விட்டு பஸ்சுக்காக காத்திருந்தபோது உவரியில் இருந்து நாசரேத் வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசு பஸ் மூக்குப்பீறி அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சை எடுத்த போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் சக்கரத்தில் சிக்கி முத்துக்கிளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசரேத் இன்ஸ்பெக்டர் ராஜ் பலியான முத்துக்கிளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் பண்டாரவிளையை சேர்ந்த லிங்கபாண்டி (33) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்த வாரம் நடைபெறும் எனது மகள் திருமணத்துக்கு எனது தாய் கலந்து கொள்ளமுடியாமல் போய் விட்டதே என்று மகன் முருகேசன் ஏங்கி அழுத காட்சி பார்போர் கண்களை கலங்க செய்தது.

    ×