search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested farmer"

    வேதாரண்யம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் தென்னம்புலம் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது56). விவசாயி. இவருடைய மனைவி சித்ரா(53). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் பொன்னங்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மனைவி சாந்தி. இவருக்கு ஒரு மகன் உள்ளார். சாந்திக்கும், மாரியப்பனுக்கும் விவகாரத்து ஆகி விட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் சாந்தியை செல்வராசு 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த முதல் மனைவி சித்ரா, கணவர் செல்வராசுவிடம் கேட்டுள்ளார். அதற்கு சித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுபற்றி சித்ரா வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    களக்காடு அருகே நிலத்தை எழுதிவாங்கி விட்டு ரூ.20 லட்சம் மோசடி செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிமணி (வயது 55). விவசாயி. கடந்த 2015-ம் ஆண்டு இவரது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக படலையர்குளத்தில் உள்ள துளசிமணிக்கு சொந்தமான 40 சென்ட் இடத்தை விற்பனை செய்துள்ளார். 

    கோவில்பத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (49) என்பவர் அந்த இடத்தை ரூ.32 லட்சத்திற்கு விலைபேசி முதலில் ரூ.12 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். பின்னர் ரூ.20 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளார். அதை நம்பி துளசிமணி, பத்திரபதிவு செய்து கொடுத்துள்ளார்.

    ஆனால் ஆறுமுகம் ரூ.20 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துளசிமணி, களக்காடு போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
    கொடுமுடி அருகே பணத் தகராறில் மூதாட்டியை கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டைபுதூரை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி அருக்காணி (வயது 70). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது.

    அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த 10-ந் தேதி அவரது கணவர் முத்துசாமி தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டில் அருக்காணி மட்டும் இருந்தார். 11-ந் தேதி காலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலை, வாய், மூக்கு பகுதியில் காயம் இருந்தது.

    கட்டிலில் பிணமாக கிடந்த அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்த சென்றிருப்பது தெரியவந்தது. தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலையாளியை பிடிக்க கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், பெருந்துறை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் துரைசாமி ஆகி யோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர். கொலையுண்ட அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் அதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் கொடுமுடி அருகே உள்ள வருந்தியாபுரம் என்ற இடத்தில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் குப்பம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (54) என்பவர் தனது மகன் நவீன்குமாருடன் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    போலீசாரிடம் மாரிமுத்து முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மாரிமுத்துவிடம் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர்.

    அப்போது மூதாட்டி அருக்காணியை கொலை செய்ததாக மாரிமுத்து ஒப் புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    விவசாயியான மாரிமுத்துவுக்கு 1½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலங்களுக்கு மருந்து அடிக்கும் தொழிலையும் மாரிமுத்து செய்து வந்தார்.

    தொழில் செலவுக்காக கடனுக்கு அருக்காணியிடம் மாரிமுத்து பணம் வாங்கி உள்ளாராம். இந்த நிலையில் அவருக்கு மேலும் பணம் தேவைப்பட்டு உள்ளது. எனவே கடந்த 10-ந் தேதி இரவு அருக்காணியின் வீட்டுக்கு மாரிமுத்து சென்றார்.

    அங்கு அருக்காணியிடம் மாரிமுத்து பணம் கேட்டார். ஆனால் பணம் கொடுக்க அருக்காணி மறுத்துள்ளார். ‘‘ஏற்கனவே வாங்கிய பணத்தை கொடு. அப்போதுதான் மீண்டும் பணம் தருவேன்’’ என்று அருக்காணி கூறியுள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மாரி முத்து அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து அருக்காணியை தாக்கி கொலை செய்துள்ளார்.

    பின்னர் அருக்காணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை (தாலிக் கொடி) பறித்துக் கொண்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அருக்காணியின் தாலிக் கொடியில் 4 பவுன் தாலிச் செயினை வங்கியில் மாரிமுத்து அடமானம் வைத்து ரூ. 65 ஆயிரம் பெற்றுள்ளார். தாலியை வீட்டில் வைத்திருந்தார். இந்த தகவல் அறிந்த போலீசார் தாலியையும், தாலிச்செயினையும் கைப்பற்றினர்.

    மூதாட்டி கொலை வழக்கில் கைதாகியுள்ள மாரிமுத்துவுக்கு செல்வி (46) என்ற மனைவியும், நவீன்குமார் என்ற மகனும், மகாலட்சுமி (28), ஆனந்தி (21) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

    மகள்களுக்கு திருமணமா கிவிட்டது. நவீன்குமார் சித்தோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.எம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    வர்த்தக சங்க தலைவருக்கு முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

    சாயல்குடி:

    சாயல்குடி அருகே உள்ள எஸ்.தரைக்குடி கிராமத்தைச்சேர்ந்தவர் முகமது அபுபக்கர் (வயது52). சாயல்குடி வர்த்தக சங்க தலைவராகவும், தரைக்குடி ஜமாத் தலைவராகவும் உள்ளார்.

    இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திக்குவிஜயன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று முகமது அபுபக்கர், எஸ்.தரைக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாயல்குடிக்கு புறப்பட்டார்.

    ஆர்.சி.புரம் பகுதியில் அவர் வந்தபோது திக்கு விஜயனின் மகன்கள் உமயவேலாயுதம், தங்கபாண்டி ஆகியோர் வழிமறித்தனர். அவர்கள் முகமது அபுபக்கரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து சாயல்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோக்கின் ஜெரி விசாரணை நடத்தி திக்குவிஜயன் மகன்கள் உமயவேலாயுதம், தங்கப்பாண்டி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் உமய வேலாயுதம் கைது செய்யப்பட்டார்.

    ×