வெவ்வேறு விபத்தில் வாகனங்கள் மோதி மூதாட்டி உள்பட 2 பேர் பலி

கவுண்டன்புதூரை சேர்ந்தவர் மகாளி சம்பவத்தன்று புதூர் ரோட்டில் நடந்து சென்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத காரை தேடி வருகிறார்கள்.
வெவ்வேறு விபத்தில் வாகனங்கள் மோதி மூதாட்டி உள்பட 2 பேர் பலி
Published on

பொள்ளாச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி நாச்சியம்மாள் (வயது 62).

சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சி- பல்லடம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நாச்சியம்மாளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழப்பை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.

கவுண்டன்புதூரை சேர்ந்தவர் மகாளி (70).

சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சி -கோவை மெயின் ரோட்டில் நஞ்சேகவுண்டன் புதூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் மகாளி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மகாளி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத காரை தேடி வருகிறார்கள்.  

X

Maalai Malar
www.maalaimalar.com