காங்கயம்,வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள் 79 இருசக்கர வாகனங்கள் ஏலம் 17-ந் தேதி நடக்கிறது

காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

காங்கயம் :

காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்டு காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு எவராலும் உரிமை கோரப்படாத 79 இருசக்கர வாகனங்கள் வருகிற 17- ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அணுகி அங்கு ஏலத்தில் விட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்.

வாகனங்களை பார்வையிட விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்றோ அல்லது ஏலம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வரை வாகனங்களை பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்குள் முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஆதார் அடையாள அட்டையுடன் முன்வைப்பு தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவாள் மட்டும் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் ஏலம் நடக்கும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தை அவர்களது முழு பொறுப்பில் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com