என் மலர்

  நீங்கள் தேடியது "Two Wheelers"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோபி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
  • அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

  கோபி:

  கோபிசெட்டிபாளையம் நகராட்சி பஸ் நிலையத்தில் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் வெளியூரில் பணிக்கு செல்லும் சிலர் பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

  நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பழனிச்சாமி மற்றும் பணியாளர்கள் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.

  அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர். மீண்டும் வாகனங்கள் நிறுத்தும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லட்சுமி நகர் பிரதான சாலையில் பல நாட்களாக சாலை போடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
  • கண் பாதிப்புகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

  திருப்பூர் :

  திருப்பூர் லட்சுமி நகர் பிரதான சாலையில் பல நாட்களாக சாலை போடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வாகனம் செல்லும் போது புழுதிகள் பறந்து கண் பாதிப்புகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே புதிய சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
  • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் மத்திய பகுதியில் சிறிய இடத்தில் இயங்கி வரும் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் பயணிகள் அதிகளவில் வருவதால் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகளவில் உள்ளது.

  அரசு, தனியார் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்தை சரி செய்ய போலீசார் புதிய வழிமுறைகளை கொண்டு வந்தாலும் பொதுமக்கள் அதை கடைபிடிப்பதில்லை.

  ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் திருச்சி, சென்னை, பெங்களூரு, தஞ்சாவூர், நாகப்பட்டினம் பஸ்கள் நிறுத்த பகுதியில் அதிகளவில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்த வழியாகத்தான் பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல வேண்டும்.

  அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் செல்வதற்கும், பஸ்களை திருப்பி நிறுத்துவதற்கும் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். இதுதவிர இந்த இருசக்கர வாகனங்கள் நடந்து செல்லும் பயணிகளுக்கும், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் இடையூறாக உள்ளன.

  பஸ்கள் உள்ளே வரும் பகுதியில் நெரிசலை தவிர்க்க போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்த கூடாது என அறிவிப்பு செய்துள்ளனர்.

  இதை கண்டுகொள்ளாமல் பஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அறிவிப்பு பலகை அருகிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு பஸ் நிலையத்திற்குள் செல்கின்றனர்.

  இதனால் தினந்தோறும் அந்த பகுதியில் பஸ்களை நிறுத்த முடியாமல் டிரைவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஏற்கனவே நெரிசலாக உள்ள பகுதியில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை உணர்ந்து பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை வெளியிடங்களில் நிறுத்த வேண்டும்.

  போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பதால் பொதுமக்களும் வாகனங்களை பஸ் நிலையத்தில் இஷ்டம் போல் நிறுத்துகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மீனவ மகளிர் பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
  • பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும்.

  கடலூர்:

  கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

  மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பட்டா தொடர்பான 122 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 83 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 42 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 47 மனுக்களும், பள்ளி கல்வி துறை தொடர்பாக 38 மனுக்களும், இதர மனுக்கள் 124 ஆக மொத்தம் 456 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

  பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தின் வாயிலாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 சதவீத மானிய விலையில் மீனவர் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள 13 மீனவர் மீனவ மகளிர் பயனாளிகளுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனத்தினை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிளின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. #jawamotorcycles  ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய வாகனங்களுக்கென டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. புதிய 15 நொடி வீடியோவில் மோட்டார்சைக்கிள் தெளிவாக தெரியவில்லை, எனினும் ஜாவா மோட்டார்சைக்கிள் என்ஜின் சத்தத்தை வெளிப்படுத்துகிறது.

  சில மாதங்களுக்கு முன் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் என்ஜின் அம்சங்களை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொண்டிருந்தது. அதன்படி புதிய மோட்டார்சைக்கிளில் 293சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 28 என்.எம். டார்கியூ செய்லதிறனும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

  முந்தைய 2-ஸ்டிரோக் என்ஜின்களை போன்ற சத்தம் எழுப்பும் வகையில் புதிய என்ஜினை ஜாவா பொறியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். மஹிந்திரா மோஜோவில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜினின் மாடிஃபைடு வெர்ஷன் என கூறப்படுகிறது.

  இந்தியாவில் வெளியாகி இருக்கும் ஜாவா மோட்டார்சைக்கிள் டீசரில் என்ஜினின் பிரத்யேக சத்தம் தெளிவாக கேட்கிறது. எனினும், இந்த என்ஜின் 4-ஸ்டிரோக் யூனிட் கொண்டிருக்கிறது.   புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு காணரமாக மஹிந்திரா இருசக்கர வாகன விற்பனையகங்கள் மற்றும் பிரத்யேக ஜாவா மையங்களில் பலர் தங்களது சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இதே காணரம் கொண்டு புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் வெளியானதும் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்தியாவில் கிளாசிக் க்ரூசர் மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னணி நிறுவனமாக அறியப்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவன்திற்கு ஜாவா மாடல்கள் பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதி்பார்க்கப்படுகிறது.

  ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் மாடல் விலை ரூ.1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் குறைந்தபட்சம் நான்கு புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

  ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய வீடியோ டீசரை கீழே காணலாம்..,


  ×